Published:Updated:

``அது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்?''- கெஜ்ரிவால் மீது `மெட்ரோமேன்' பாய்ச்சல்

எம்.குமரேசன்
``அது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்?''- கெஜ்ரிவால் மீது `மெட்ரோமேன்' பாய்ச்சல்
``அது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்?''- கெஜ்ரிவால் மீது `மெட்ரோமேன்' பாய்ச்சல்

மீபத்தில் டெல்லி மாநில அரசு பெண்களுக்கு பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் இலவசம் என்று அறிவித்தது. டெல்லியில் வாழும் அத்தனை பெண்களும் மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணித்தால் என்னவாகும்?  இந்த ரயில் திட்டம் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான கோடி தொகை செலவு செய்து அமைக்கப்படவை. தினமும் பராமரிப்புச் செலவுக்கு பல கோடிகள் தேவைப்படும். இந்தச் சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. 

``அது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்?''- கெஜ்ரிவால் மீது `மெட்ரோமேன்' பாய்ச்சல்

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு `மெட்ரோமேன்' ஸ்ரீதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும்கூட. இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தியது இவர்தான். கடைசியாகக் கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கினார். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மத்திய அரசும் மாநில அரசும் சரி பாதி பங்களிப்பு கொண்டவை. எனவே, மாநில அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். 

இதனால் ஸ்ரீதரன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், `சரி பாதி பங்களிப்பு கொண்ட நிறுவனத்தில் ஒரு தரப்பு மட்டுமே ஒருதலைபட்சமான முடிவை எடுக்க முடியாது. சமுதாயத்தின் ஒரு பிரிவுக்கு மட்டுமே இலவசம் என்று அறிவித்தால் மற்ற பிரிவினர் கேட்க மாட்டார்களா. டெல்லியில் மட்டுமல்ல நாட்டின் பல நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு நகரத்திலும் இதேபோன்று இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டால் என்னாவது. அதேபோல் சீனியர் சிட்டிசன்கள், மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள் எல்லாருக்குமே இலவசம் என்று சொன்னால் மெட்ரோ ரயில்களை இயக்க முடியுமா? டிக்கெட் விலை ஏற்றப்படும். விரைவில் திவால் ஆகும் நிலைதான் ஏற்படும். எனவே, பிரதமர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்''  என்று எழுதியுள்ளார். 

``அது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்?''- கெஜ்ரிவால் மீது `மெட்ரோமேன்' பாய்ச்சல்

மேலும் ஸ்ரீதரன், கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்தபோது, அவரும் டிக்கெட் எடுத்தே பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011- ம் ஆண்டு வரை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஸ்ரீதரன் தலைவராக இருந்தார். 

டெல்லி மெட்ரோவில் அனைத்துப் பெண்களுக்கும் இலவசம் என்ற அறிவிப்பால் ஆண்டுக்கு 1,560 கோடி ரூபாய் அதிகம் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

Vikatan