Published:Updated:

சின்னத்திரை நடிகரைக் காப்பாற்றிய #Mentoo! - விடுதலையான கரண் ஓபராய்

ஆ.சாந்தி கணேஷ்
சின்னத்திரை நடிகரைக் காப்பாற்றிய #Mentoo! - விடுதலையான கரண் ஓபராய்
சின்னத்திரை நடிகரைக் காப்பாற்றிய #Mentoo! - விடுதலையான கரண் ஓபராய்

பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை #MeToo என்ற ஹேஷ்டேகின் கீழ் சமூக வலைதளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தபோதே, அப்பாவி ஆண்களும்கூட பெண்களால் பாதிக்கப்படுகிறார்கள் என ஆண்களுக்காக #MenToo என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். மும்பை தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராயால் தற்போது அந்த இயக்கம் சூடு பிடித்திருக்கிறது. 

சின்னத்திரை நடிகரைக் காப்பாற்றிய #Mentoo! - விடுதலையான கரண் ஓபராய்

PC: archive.mid-day.com

தன்னை ஹீலர் என்று சொல்லிக்கொள்கிற பெண் ஒருவர், தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக, மும்பை காவல்துறையில் சில மாதங்களுக்கு முன்னால் புகார் அளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தான் காலையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது தன்னை சில இளைஞர்கள் தாக்கியதாகவும், நடிகர் கரண் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டியதாகவும் சொன்னார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்தபோது, அந்தப் பெண்ணை மிரட்டிய இளைஞர்கள் அவருக்கும் அவருடைய வழக்கறிஞருக்கும் தெரிந்தவர்கள் என்பதும் அவர்களை சம்பந்தப்பட்டப் பெண்ணே தன்னை மிரட்டச் சொன்னதும் தெரியவந்தது. இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் கரண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். 

சின்னத்திரை நடிகரைக் காப்பாற்றிய #Mentoo! - விடுதலையான கரண் ஓபராய்

PC: http://english.tupaki.com

நடிகர் கரண், தான் குற்றமற்றவர் என்று சொன்னதன் காரணமாக, சில தினங்களுக்கு முன்னால், மும்பையில் பலதுறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் #MenToo இயக்கம் சார்பாகவும், நடிகர் கரணை விடுதலை செய்யக்கோரியும் அமைதிப் பேரணி நடத்தினார்கள். இதே நேரத்தில், நடிகர் கரண் ஓபராய் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையற்றது என்பதைக் காவல்துறை கண்டுபிடித்துவிட்டதால், அவரை விடுதலை செய்துவிட்டார்கள். வெளியே வந்த கரண், ``என்னைப்போல இன்னொரு ஆண் தவறாகக் குற்றம் சாட்டப்படக் கூடாது. நான் சிறையில் இருந்தபோது என் அம்மாவும் என் சகோதரியும்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்'' என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். 

நடிகர் கரண் ஓபராய் மீது பொய்யாகப் பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்ணைத் தற்போது காவல்துறை கைது செய்துவிட்டது.

Vikatan