Published:Updated:

நேரடித் தேர்வுக்கு எதிர்ப்பு; மும்பையில் மாணவர்களைப் போராடத் தூண்டிவிட்டதாக யூடியூபர் கைது!

யூடியூபர் கைது!

நேரடித் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களைப் போராடத் தூண்டிவிட்டதாக யூடியூபர் கைதுசெய்யப்பட்டார்.

நேரடித் தேர்வுக்கு எதிர்ப்பு; மும்பையில் மாணவர்களைப் போராடத் தூண்டிவிட்டதாக யூடியூபர் கைது!

நேரடித் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களைப் போராடத் தூண்டிவிட்டதாக யூடியூபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
யூடியூபர் கைது!

மகாராஷ்டிராவில், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, மாணவர்கள் பள்ளித் தேர்வுகளை நேரடியாகப் பள்ளிக்கு வந்து எழுத வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. மாநிலத்தில், கல்லூரிகளும் இன்று முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்றன. 10, 12-ம் வகுப்புகளுக்கு நேரடித் தேர்வு நடத்த மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென மகாராஷ்டிரா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மும்பையில் மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வீட்டை முற்றுகையிட்டனர். தாராவி, சயானிலும் மாணவர்கள் போராட்டம் நடந்தது. மாணவர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். நாக்பூரில் மாணவர்கள் பேருந்துகள்மீது கல்வீசித் தாக்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

ஒரே நேரத்தில் மாணவர்கள் எப்படி இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், யூடியூபர் ஹிந்துஸ்தானி பாவ் என்று அழைக்கப்படும் விகாஷ் பதக் என்ற இளைஞர்தான் காரணம் என்று தெரியவந்தது. விகாஷ் பதக் மாணவர்களை நேரடித் தேர்வுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்படி சமூக வலைதளங்கள் மூலம் தூண்டிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகாஷ் பதக்
விகாஷ் பதக்

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``தாராவியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் அவர்களைத் தூண்டிவிட்டதோடு, போராட்டத்திலும் கலந்துகொண்டு விகாஷ் பதக் பேசியிருக்கிறார். மேலும், வர்ஷா கெய்க்வாட் வீட்டை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டாம் என்று தாராவி போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து விகாஷ் பதக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மாணவர்களைப் போராட்டத்துக்குத் தூண்டிவிடுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் அசோக் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், விகாஷ் தொடர்ந்து மாணவர்களை திசைதிருப்பி, அவர்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். அதனால், அவர்மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism