Published:Updated:

உளவுத்துறை எச்சரிக்கை; தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! - மத்திய அரசு நடவடிக்கை

முகேஷ் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை; தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! - மத்திய அரசு நடவடிக்கை

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது.

Published:Updated:
முகேஷ் அம்பானி

நாட்டின் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஆட்களுக்கு தக்கபடி எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ், கருப்பு பூனை படை என 5 வகையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்கள், விளையாட்டு துறை, பொழுதுபோக்குத்துறை, அரசியல்வாதிகளுக்கும் இந்த வகையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புதான் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு ஆகும். இதில் 10 கமாண்டோ படையினர் உட்பட 55 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். தற்போது இந்தப் பாதுகாப்பு மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் சிலருக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது .

அம்பானி
அம்பானி

தற்போது அது இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கும் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு வெளியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை வைத்தது தொடர்பாக போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அம்பானியின் அண்டிலியா இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முகேஷ் அம்பானி மட்டுமல்லாது அவர் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ மொபைல், ரிலையன்ஸ் ரீட்டைல்ஸ் உட்பட பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றை முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகள் பகிர்ந்து கொண்டு நிர்வாகம் செய்து வருகின்றனர்.