Published:Updated:

பெங்களூரு: ஸொமேட்டோ ஊழியரால் தாக்கப்பட்ட பெண், வைரலான வீடியோ... என்ன நடந்தது?

ஹிதேஷா சந்திரனி ( Screenshot form Instagram )

''நான் கதவை மூட முயன்றேன். ஆனால், அவர் கதவைத் தள்ளி, மேசையிலிருந்து என் ஆர்டரை எடுத்துக்கொண்டார். அத்துடன் என் முகத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.''

பெங்களூரு: ஸொமேட்டோ ஊழியரால் தாக்கப்பட்ட பெண், வைரலான வீடியோ... என்ன நடந்தது?

''நான் கதவை மூட முயன்றேன். ஆனால், அவர் கதவைத் தள்ளி, மேசையிலிருந்து என் ஆர்டரை எடுத்துக்கொண்டார். அத்துடன் என் முகத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.''

Published:Updated:
ஹிதேஷா சந்திரனி ( Screenshot form Instagram )

கடந்த மார்ச் 9-ம் தேதி ஸொமேட்டோ (Zomato) டெலிவரி ஊழியரால் தான் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார், பெங்களூருவைச் சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் ஹிதேஷா சந்திரனி. கன்டன்ட் கிரியேட்டர் மற்றும் ஒப்பனைக் கலைஞரான ஹிதேஷா, இது குறித்து தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் மூக்கில் ரத்தக் காயத்துடன் காணப்படுகிறார்.

'நான் ஸொமேட்டோவில் ஆர்டர் செய்திருந்தேன். அதில் தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெலிவரி ஊழியருக்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் என்னைத் தாக்கினார்' என்று குறிப்பிட்டிருக்கிறார் ஹிதேஷா. மேலும், டெலிவரி ஊழியர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னைத் தாக்கிவிட்டு சுதாரிப்பதற்குள் ஓடிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் ஹிதேஷா பேசும்போது, "மார்ச் 9-ம் தேதி மாலை 3.30 மணியளவில் உணவு ஆர்டர் செய்தேன். மாலை 4.30 மணிக்குள் வரவேண்டிய டெலிவரி வரவில்லை. எனவே, வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு, சரியான நேரத்தில் எனது ஆர்டரை என்னிடம் அளிக்கவில்லை என்பதால், ஆர்டருக்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய அல்லது ஆர்டரை ரத்து செய்ய கேட்டுக்கொண்டிருந்தேன். அந்நேரத்தில் காமராஜ் என்ற டெலிவரி எக்ஸிக்யூட்டிவ் என் வீட்டுக்கு வந்தார். அவர் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தார்.

Zomato
Zomato

வீட்டில் என் நாய் இருப்பதால், நான் வழக்கமாகக் கதவை முழுவதுமாகத் திறக்க மாட்டேன்; கதவைக் கொஞ்சம் ஓப்பன் செய்து வைத்தவாறு, அதன் வழியாக டெலிவரி எக்ஸிக்யூட்டிவிடம், 'ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் பேசிக்கொண்டுள்ளேன், சிறிது நேரம் காத்திருங்கள்' என்று கூறினேன். பின்னர், 'எனக்கு ஆர்டர் தேவையில்லை, நீங்கள் அதை எடுத்துக்கொள்ளலாம்' என்று கூறினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அவர் ஆர்டரை திரும்ப எடுக்க மறுத்தார். மேலும், `நான் என்ன உங்கள் அடிமையா என்ன?' என்று என்னைப் பார்த்துக் கத்தினார். இது எனக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது. நான் கதவை மூட முயன்றேன். ஆனால், அவர் கதவைத் தள்ளி, மேசையிலிருந்து என் ஆர்டரை எடுத்துக்கொண்டார். அத்துடன் என் முகத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார்" என்று ஹிதேஷா கூறியுள்ளார்.

டெலிவரி ஊழியரோ, ஹிதேஷா தன்னை செருப்பால் தாக்கியதாகவும், அதற்கு தற்காப்பு முயற்சியே தான் எடுத்ததாகவும், கதவில் எதிர்பாராத விதமாக இடித்ததில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் விளக்கம் தந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஸொமேட்டோ நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் ஹிதேஷாவிடம், 'எங்கள் உள்ளூர் பிரதிநிதி உங்களை தொடர்புகொள்வார், போலீஸ் விசாரணையில் உங்களுக்குத் துணையாக இருப்பார் மற்றும் தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் செய்வார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்' என்று பதிவிட்டது.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியரை ஸொமேட்டோ நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. அது குறித்த தன் அறிக்கையில், 'நடந்த சம்பவத்துக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்கள் பிரதிநிதி ஹிதேஷாவை நேரில் சந்தித்தார். நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். எங்கள் நிறுவன நெறிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட டெலிவரி பார்ட்னரை நாங்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். விசாரணை நடைமுறைகளைப் பின்பற்றுவோம்' என்று தெரிவித்தது.

நேற்று, சம்பந்தப்பட்ட ஸொமேட்டோ ஊழியர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹிதேஷா பகிர்ந்த ட்விட்டர் வீடியோவில் நகர காவல்துறையை டேக் செய்ய, அவர்கள் ஹிதேஷாவின் வசிப்பிடம் விவரங்களை அளிக்கும்படி கேட்டனர். நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism