Published:Updated:

`தோளில் ஒரு குழந்தை; பைக்கில் ஒரு குழந்தை' - வெயிலில் குழந்தைகளோடு வேலை செய்யும் டெலிவரி மேன்!

உணவு டெலிவரி மேன்

Zomato-வில் பணிபுரியும் டெலிவரி மேன் ஒருவர், உணவு டெலிவரிக்கு தன்னுடன் தனது குழந்தையை அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

food blogger- ஆன சவுரப் பஞ்வானி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Zomato-வில் பணிபுரியும் டெலிவரி மேன் ஒருவர் தனது மகளையும், மகனையும் உணவு டெலிவரியின்போது கூடவே அழைத்துசெல்லும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் "இதைக் கண்டு நான் மிகவும் உத்வேகமடைந்தேன். இந்த Zomato டெலிவரி மேன் நாள் முழுவதும் அவரின் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு பணிபுரிகிறார். ஒருவர் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சவுரப் பஞ்வானி பதிவிட்டிருக்கிறார்.

இதுமட்டுமின்றி அவர் அந்த டெலிவரி மேனிடம் அவரது வேலை குறித்தும், அவரது குழந்தைகள் குறித்தும் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த அந்த டெலவரி மேன் சில சமயங்களில் என்னுடைய மகனும் டெலிவரியின்போது எனக்கு உதவி புரிவார் என்று கூறியிருக்கிறார். உணவு டெலிவரிக்கு தன்னுடன் தனது குழந்தைகளை அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அந்த நபருக்கு பாராட்டை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato-வும் அவரது குழந்தைகளை பராமரிக்க உதவுவதாக அறிவித்துள்ளது.