ரிவர்ஸ் ஹேக்கிங்... எலக்ட்ரானிக்ஸ் லென்ஸ்... தெர்மல் இமேஜிங்... இவை ‘விவேகம்’ பட டெக்னாலஜி!

விவேகம்

தமிழ் சினிமாவில் இத்தனை வகையான டெக்னாலஜியை பயன்படுத்தி திரைக்கதை அமைக்கப்படுவது அடிக்கடி நிகழ்வதில்லை.  விவேகம் படம் பார்த்தவர்களுக்கு ரிவர்ஸ் ஹேக்கிங், மோர்ஸ் கோடு, தெர்மல் இமேஜிங் கேமரா போன்ற சில டெக்னிக்கல் சமாச்சாரங்கள் புரியாமல் போயிருக்கலாம். அவர்களுக்கான ஒரு சின்ன கையேடு இது.

மோர்ஸ் கோடு:

மோர்ஸ் கோடு என்பது தகவல்களை ரகசியமாக பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு குறியீட்டு பாஷை. காஜலும் அஜித்தும் கண்களாலே டிம்மி டிப்பு அடித்து விஷயங்களை பரிமாறுவது மோர்ஸ் கோடு மூலம் தான். மோர்ஸ் கோடில் பல வகைகள் உண்டு. விவேகமில், இரண்டு கண்ணசைவுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியின் நீளம் பொறுத்து அர்த்தம் மாறும். அது காஜலுக்கும் அஜித்துக்கும் ஏற்கெனெவே தெரியும் என்பதை காதலாட பாடலில் பதிவு செய்திருப்பார்கள்.

புளூட்டோனியம் வெப்பன்ஸ்:

இரண்டாம் உலகப்போரிலே அமெரிக்கா அணு ஆயுதங்களை தயாரிக்க “மன்ஹாட்டன் புராஜெக்ட்”-ஐ தொடங்கியது. அந்த புராஜெக்டிலே புளூட்டோனியம் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது புளூட்டோனியம் உலோகம்.

மனிதர்களாக் உருவாக்கப்படும் நிலநடுக்கங்கள் (Man made earthquake)

நிலநடுக்கங்களை மனிதனால் உருவாக்க முடியுமா என்கிறீர்களா? பல முறை செய்திருக்கிறார்கள். ஓக்லஹமா நகரில் 2016ல் வந்த நிலநடுக்கத்துக்குக் காரணம், அதன் அருகிலிருந்த பகுதிகளில் செய்யப்பட்ட ஹ்டராலிக் ஃப்ராச்சரிங்கே. ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் 5.6 பதிவானது. பார்ப்பதற்கு வேறு காரணத்துக்காக ஒரு செயல் நடப்பது போல தெரியலாம். அதன் விளைவு நிலநடுக்கமாக இருக்கும்.

Reverse hacking:

ஒரு கணினி அமைப்பை அத்துமீறி ஊடுருவது ஹேக்கிங். அப்படி ஊடுரும் நபரை அவருக்கேத் தெரியாமல் கண்காணிப்பது ரிவர்ஸ் ஹாக்கிங். எளிய உதாரணம் எலிப்பொறி. வடையை நைசாக திருட வரும் எலிதான் ஹேக்கர்ஸ். அவர்களை பிடிப்பது ரிவர்ஸ் ஹேக்கிங். 

விர்ச்சுவல் ஹோலோகிராம் (Virtual Hologram)

இல்லாத ஒரு பிம்பத்தை புரொஜெக்‌ஷன் மூலம் உருவாக்குவது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் குதிரை ஒன்றை உருவாக்கினார்களே.. அதுவும் ஹோலோகிராம்தான்.

ஃபீனிக்ஸ் பறவை:

விவேகம்

உண்மையில் இப்படி ஒரு பறவை இருந்ததற்கு ஆதாரங்கள் இல்லை. ஃபீனிக்ஸ் என்பது கிரேக்க புராணங்களில் வரும் ஒரு பறவை. 1400 ஆண்டுகளுக்கு மேல் வாழும் இந்தப் பறவையால், தன்னை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என கிரேக்கர்கள் நம்பினார்கள்.

Electronic contact lens:

நம் கண்களுக்குள் ஒரு கணினியை புதைத்து வைக்கும் டெக்னாலஜி இது. இதற்கான பேடண்ட் உரிமையை 2014ல் கூகுள் வாங்கியது. ஆனால், விவேகம் படத்தில் வருவது போல இது கேமரவாக செயல்படாது. இந்த லென்ஸ், பொருத்தப்பட்டவரின் பார்வையை துல்லியமாக்க மட்டுமே உதவும்.

Thermal imaging camera:

சாதாரண ஒளியை வைத்து படமெடுப்பது கேமராவின் வேலை. தெர்மல் இமேஜிங் கேமரா இன்ஃப்ராரெட் ஒளியை பயன்படுத்தி படங்கள் எடுக்கும். 1929லே இந்த வகை கேமராக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டன. மருத்துவத்துறையிலும், ராணுவத்திலும் அதிகமாக இவை பயன்படும்.

Pacemaker:

சீராக துடிக்காத இதயத்தை இந்தக் கருவியின் உதவியுடன் நார்மலாக்க முடியும். படத்தில் அக்‌ஷராவின் காதலருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டிருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!