அலாரம் அடிச்சாலும் தூங்கறீங்களா? அப்போ இந்த ஆப்ஸ் உங்களுக்குத்தான்! | If you cant wake up with your alarm try these apps

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (07/09/2017)

கடைசி தொடர்பு:20:28 (07/09/2017)

அலாரம் அடிச்சாலும் தூங்கறீங்களா? அப்போ இந்த ஆப்ஸ் உங்களுக்குத்தான்!

"ட்ரிங்ங்ங்ங்ங்”  அலாரம் கிளாக் காலம் முதல் இன்றைய ஸ்மார்ட்போன் காலம் வரைக்கும் எப்போதும்  மாறாத ஒரு விஷயம் இருக்கு. அலாரம் அடிச்சதுமே அதைத் தலையில தட்டி ஆஃப் பன்றது தான் அது.அலாரம் அடித்ததும்  எழுந்துவிட்டாலும் அதுக்கப்புறம் தூங்குற கொஞ்ச நேரம் சொர்க்கம் தான். அலாரமை கண்டுபிடிச்சவன் டெக்னாலஜி தெரிஞ்சவன்; ஸ்னூஸ் பட்டனை கண்டுபிடிச்சவன் சைக்காலஜி தெரிஞ்சவன்னு சொல்லலாம். ஆனால் அந்த கொஞ்ச நேரம் கொஞ்சம் அதிகமாகும் போது பிரச்சினைதான். அலாரம் வச்சும் சீக்கிரம் எந்திரிக்க முடியலையேனு சொல்றவங்களுக்காகவே இந்த ஆப்ஸ்.

I Can't Wake Up! Alarm Clock

alarm apps

பயன்படுத்துவதற்கு மிக எளிதாக  வகையில் வடிவமைக்கப்பட்டிகக்கிறது. இந்த ஆப்பை பயன்படுத்தி உங்க ஸ்மார்ட்போன்ல அலாரம் செட்  பண்ணுனா காலையில அலாரம் அடிக்கும் போது அவ்வளவு சீக்கிரம் snooze ஆப்ஷனை பயன்படுத்த முடியாது. அலாரம் அடிச்சதும் ஆப்ல இருக்குற சின்ன சின்ன புதிர்களை  விடுவித்தால் மட்டுமே அலாரத்தில் இருக்கும் snooze ஆப்ஷனை பயன்படுத்த முடியும். புதிரை சரி செய்துவிட்டு தூங்குவதற்கு கொஞ்ச நேரம் கேட்பதற்கும் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு அந்த புதிரை விடுவிக்கும் போதே தூக்கம் பறந்திருக்கும்.

ஆப்பை டவுன்லோட் செய்ய


Alarmy

alarm apps


"முடிஞ்சா தூங்கி பாரு" என நேரடியாகவே சவால் விடுகிறது இந்த ஆப். இதில் அலாரம் செட் செய்வதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளின் புகைப்படத்தை எடுத்து அப்லோட் செய்ய வேண்டும். அது ஒரு இடமாகவோ அல்லது ஒரு பொருளாகவோ இருக்கலாம். அடுத்த முறை அலாரம் அடிக்கும் பொழுது அதே இடத்திற்கு சென்று நீங்கள் எதை அப்லோட் செய்தீர்களோ அதை புகைப்படம் எடுத்தால் மட்டுமே அலாரம் அடிப்பதை நிறுத்த முடியும்.(அவசரப்பட்டு கேர்ள் ஃப்ரெண்டு படத்தை அப்லோடு செய்துவிடாதீர்கள்) புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் கணக்கு புதிர் போன்ற வேறு சில ஆப்ஷன்களும் இருக்கின்றன. மேலும் கடந்த நாட்களில் எத்தனை மணிக்கு எழுந்தீர்கள் என்பதை செக் செய்வதற்கு ஹிஸ்டரி வசதியும் இருக்கிறது.

ஆப்பை டவுன்லோட் செய்ய.

Snap Me Up: Selfie Alarm Clock

alarm apps

செல்ஃபி எடுப்பது பிடிக்குமா? அப்போ இந்த ஆப் உங்களுக்குத்தான். இந்த ஆப்ல அலாரம் அடிக்கும் போது கூடவே கேமராவும் ஆன் ஆகும் அப்போ நீங்க கொஞ்சம் வெளிச்சமான இடத்திற்கு போய் ஒரு செல்ஃபி எடுத்தால் போதும் அலாரத்தை நிறுத்தி விடலாம். விருப்பம் இருந்தால் அப்படியே ஒரு குட் மார்னிங் வீடியோவும் எடுத்து வைத்து கொள்ளலாம். கூடவே டைரி எழுதும் வசதியும் இருக்கிறது. நீங்கள் காலையில் எழுந்தவுடன் கண்ணில் பட்டதை எல்லாம் எழுதி வைத்து கொண்டு விரும்பும்பொழுது  மீண்டும் படித்து கொள்ளலாம்.

ஆப்பை டவுன்லோட் செய்ய.

AlarmMon

அலாரம் ஆப்ஸ்


கொஞ்சம் வித்தியாசமாக நம்மை கேம் விளையாட சொல்லி எழுப்புகிறது இந்த ஆப். அலாரம் அடித்தவுடன் இதில் இருக்கும் ஒரு சின்ன கேமை விளையாடி முடிக்க வேண்டும். அப்பொழுதான் அலாரம் அடிப்பது நிற்கும்.நீங்க விளையாடி முடிக்கும் போது திரும்ப தூக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும்.வெவ்வேறு ஒலிகளை அலாரமாக செட் செய்து கொள்ள முடியும். மேலும் அன்றைய நாள் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை அலாரம் அடிக்கும் பொழுது நினைவு படுத்தும் வசதியும் இருக்கிறது.

ஆப்பை டவுன்லோட் செய்ய.

 


டிரெண்டிங் @ விகடன்