வாட்ஸ்அப்பை மிஞ்சிய ஃபேஸ்புக் மெசேஞ்சர்..! | Facebook messenger reaches 1.3 billion monthly users

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/09/2017)

கடைசி தொடர்பு:19:00 (15/09/2017)

வாட்ஸ்அப்பை மிஞ்சிய ஃபேஸ்புக் மெசேஞ்சர்..!

ஃபேஸ்புக் மெசேஞ்சர் ஆப்பை மாதத்துக்கு 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் முன்னணியில் இருந்துவருகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் என்ற வீடியோ, போட்டோ உள்ளிட்ட தகவல்களைப் பறிமாற உதவும் இரு ஆப் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆப்களும் மக்களிடையே பெரும் வரவேற்பில் இருக்கும் ஒன்றாகும். இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், தனது பயனாளிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃபேஸ்புக் ஆப்பை மாதத்துக்கு 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிதாகச் சில சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. எனவே, இரண்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவுள்ளோம். மெசேஞ்சர் லைட் மற்றும் இன்பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளோம். வாட்ஸ்அப்பைவிட ஃபேஸ்புக் மெசேஞ்சரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.