ஆப்பிள் விளைவா? விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்... இந்த வார ஆஃபர்கள்! #DontMiss | Best smartphone offers

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (20/09/2017)

கடைசி தொடர்பு:11:44 (21/09/2017)

ஆப்பிள் விளைவா? விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்... இந்த வார ஆஃபர்கள்! #DontMiss

ஆப்பிள் ஒரு புதிய ஐபோனை வெளியிட்டால் அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை விட பழைய ஐபோன் மாடல்களை வாங்குவதற்கு காத்திருப்பவர்கள் அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு தடவை புதிய ஐபோன் வெளியாகும்போதும் பழைய  மாடல் விலை குறைக்கப்படும் என்று ஆப்பிள் ரசிகர்களுக்கு தெரியும். அதேபோல் இந்த முறையும் ஐபோன் X வெளியான பிறகு இதர மாடல்களின் விலை குறைய இருக்கிறது. ஆனால் இந்த முறை ஐபோன் மட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களும் புதிய மொபைல் வாங்குவதற்கு தயாராகலாம். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று முதல் 24 ம் தேதி வரை "தி பிக் பில்லியன் டேஸ்" என்ற பெயரிலும் அமேசான் நிறுவனம் 21 ம் முதல் 24 ம் தேதி வரை "கிரேட் இந்தியன் பெஸ்டிவல்" என்ற பெயரிலும் மொபைல்களை சலுகை விலையில் வழங்க இருக்கின்றன. மொபைல்களின் விலை எவ்வளவு  குறைகின்றது அதன் வசதிகள் என்னென்ன பார்க்கலாம்.


iPhone

iphone


ஐபோன்  6, 6S, 7, 7 Plus போன்ற பழைய மாடல் மொபைல்களின் விலை எவ்வளவு ரூபாய் குறையும் என்று ஃப்ளிப்கர்ட்  கூறவில்லை. அதே வேளையில் ஐபோன் மிகப்பெரிய அளவில் விலை குறையும் என்று ஃப்ளிப்கர்ட் விளம்பரப்படுத்துகிறது. அமேசானிலும் ஐபோன்களின் விலை குறைய இருக்கிறது. ஐபோன் வாங்கனும்னு நினைச்சவங்க ரெடியா இருங்க பாஸ்.

Moto C Plus 

motorola


மோட்டோ சி பிளஸ் தற்போதைய விலையான 6,999 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் விலை குறைந்து  5,999 ரூபாய்க்கு கிடைக்கும். 5 இன்ச் திரையை கொண்டுள்ள இதில் 8 மெகாபிக்ஸல் கேமராவும்  2 மெகா பிக்ஸல் முன்புற கேமரா ஃபிளாஷ் வசதியுடன் இருக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியை கொண்டிருக்கும் இதன் இன்டர்னல் மெமரியை 32 ஜிபி வரை நீட்டித்துகொள்ளலாம். 4000 mAh பேட்டரி திறன் இருக்கிறது.

Samsung Galaxy S7

samsung galaxy s7

தற்பொழுது 46,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி S7 ஸ்மார்ட்போன் 16,010 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 29,990 ரூபாய்க்கு கிடைக்கும். 5.1 இன்ச் குவாட் ஹெச்டி திரை,13 மெகாபிக்ஸல் பின்புற கேமரா மற்றும்  5 மெகா பிக்ஸல் முன்புற கேமரா இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி,3000 mAh பேட்டரியுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.சாம்சங்கில் ஒரு பிளாக்ஷிப் மொபைல் வாங்கலாம் என காத்திருப்பவர்களுக்கு ஏற்ற ஆஃபர் இது.

Huawei P9 

huawei p9


மொபைல் ஆபர்களிலேயே அதிகபட்சமாக விலை குறைவது இந்த மொபைல்தான். ரூபாய் 14,999 க்கு கிடைக்கும் இந்த மொபைலின் விலை 39,999 ரூபாய். 12+12 மெகாபிக்ஸல் டூயல்  கேமராக்களை இதன் சிறப்பம்சமாக கூறலாம். இதே விலையில் இது போன்ற அதிக  கேமரா வசதிகள் கொண்ட மொபைல் இல்லை என்றே கூறலாம். 5.2 இன்ச் திரை இதில் இருக்கிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32  ஜிபி இன்டர்னல் மெமரியை கொண்டிருக்கும் இதன் இன்டர்னல் மெமரியை 128  ஜிபி வரை நீட்டித்துகொள்ளலாம். 3000 mAh பேட்டரி திறன் இருக்கிறது. ஆனால் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இதன் குறை.

Asus Zenfone 4 Selfie

ஸ்மார்ட்போன் ஆபர்கள்

அதிகம் செல்ஃபி எடுப்பவர்களுக்கான மொபைல் இது. முன்புறம் பின்புறம் என இதில் இருப்பது 13 மெகாபிக்ஸல் கேமராக்கள். bokeh effect,wide selfie mode, EIS என இதில் கேமராவுக்கான வசதிகள் அதிகம். 5.5 இன்ச் திரை கொண்ட இதில் ஒரே நேரத்தில் மெமரி கார்டு இரண்டு சிம் என அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். 3000mAh பேட்டரி, 3 ஜிபி ரேம் மற்றும் 32  ஜிபி இன்டர்னல் மெமரி இதில் இருக்கிறது 10,999 ரூபாய் மொபைல் ஆபர் விலையில் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும்.

Panasonic

பேனாசோனிக் நிறுவனம் பல்வேறு மொபைல்களுக்கு அதிக பட்சமாக 2000 ரூபாய் முதல் 1000 வரை விலை குறைப்பு செய்திருக்கிறது.
இது மட்டுமின்றி இன்னும் பல மொபைல்களுக்கு ஆபர்களை அள்ளி கொடுக்க இருக்கிறது ஃப்ளிப்கார்ட்டும் அமேசானும். எனவே ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு சரியான சமயம் இது.


டிரெண்டிங் @ விகடன்