Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி ஸ்மார்ட்போன் நம் அடிமை இல்லை... சுயமாக சிந்திக்கவும் செய்யும்..! #AI_Processor

KIRN 970 செயற்கை நுண்ணறிவு திறன் ப்ராசஸர்கள் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில்  நமக்கு பல வேலைகள் நடக்காது என்ற நிலைமை எப்போதோ வந்து விட்டது. இப்பொழுதெல்லாம் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அனைவரும் கையில் எடுப்பது ஸ்மார்ட்போனைத்தான். நடு இரவில் மனிதர்கள் இல்லாத இடத்தில் கூட வழிகாட்டுவது ஸ்மார்ட்போன்கள் தான். இப்படி ஓர் இயந்திரத்தோடு நாம் உரையாட தொடங்கி பலகாலம் ஆகிவிட்டது. போதாக்குறைக்கு அன்மை வரவுகளான சிரி, கூகுள் அசிஸ்டன்ட், பிக்ஸ்பி என வாய்ஸ்  அசிஸ்டன்ட்கள் நாம் சொல்லும் வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கின்றன.

ஆனால், இந்த சிஸ்டமின் மிகப்பெரிய குறை அதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பதுதான். ஸ்மார்ட்போன் இணையத்தோடு இணைக்கப்பட்டால் தான் விர்ச்சுவல் அசிஸ்டன்ட்கள் வேலை செய்யும். விர்ச்சுவல்அசிஸ்டன்ட்கள் வடிவமைக்கப்பட்ட விதம் அப்படி. அவையாவும் கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையில் இயங்குகின்றன. எடுத்துகாட்டாக, நீங்கள் விர்ச்சுவல் அசிஸ்டன்ட்டிடம் ஒரு கேள்வி கேட்டால் அது ஏற்கனவே அதன் டேட்டாபேஸில் பதிந்து வைத்திருக்கும் தகவல்களையோ இணையத்தில் இருப்பதையோ ஆராய்ந்துதான்  பதில் அளிக்கும். ஸ்மார்ட்போனில் எல்லாமே அப்டேட் ஆகும் பொழுது இது மட்டும் விதி விலக்கா என்ன ?.

செயற்கை நுண்ணறிவு திறன் ப்ராசஸர்கள்


ஸ்மார்ட்போன்களின் மூளையாக செயல்படுவது  ப்ராசஸர்கள் தான். அதை எப்படியாவது மேம்படுத்தினால் மொபைல்களை ஓரளவிற்கு சுயமாக சிந்திக்க வைக்க முடியும் என முடிவு செய்து அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது ஹுவேய் நிறுவனம். அடுத்த மாதம் உலகின் முதல் AI எனப்படும்  செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட Kirin 970 என்ற ப்ராசஸரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த ப்ராசஸரில் செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக ப்ராசஸரின் உள்ளேயே நியூரல் ப்ராசஸிங் யூனிட் (NPU) எனப்படும் தனி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு  தற்பொழுது இருக்கும் ப்ராசஸர்களில் இருந்து Kirin 970 ஐ வேறுபடுத்திக்காட்டுகிறது. ஒரு மணிநேரத்திற்கு 2000 படங்களை ப்ராசஸ் செய்யும் திறன் இதற்கு உண்டு. இது சாதாரண  மொபைல் ப்ராசஸர்களை விட இருபது மடங்கு அதிக வேகமானது.  நியூரல் ப்ராசஸிங் யூனிட் இருப்பதன் காரணமாக கிளவுட் கம்ப்யூட்டிங் மட்டுமில்லாமல் மொபைல்  இணைய இணைப்பு இல்லாமல் ஆப்லைனில் இருக்கும் போதும் விர்ச்சுவல் அசிஸ்டன்ட்கள் சிறப்பாக செயல்படும் என்று கூறுகிறது ஹுவேய். அது மட்டுமில்லாமல் ஆப்பிளின் Apple A11 Bionic ப்ராசஸர் மற்றும் Qualcomm Snapdragon 835 ஆகியவை தயரிக்கப்பட்டிருக்கும் 10-nanometer தொழில்நுட்பத்தில் தயரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தி அதிக செயல்திறனை அளிக்க முடியும்.

KIRN 970 செயற்கை நுண்ணறிவு திறன் ப்ராசஸர்கள்


AI திறன் கொண்ட ப்ராசஸர் மூலமாக மொபைல் போட்டோகிராபி, இமேஜ் ப்ராசஸிங், வேகம் போன்ற அடிப்படை செயல்கள் மட்டுமில்லாமல் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் அனுபவத்தையே முற்றிலும் மாற்ற முடியும் என்கிறது ஹுவேய். ஆப்பிள் தற்போது அறிமுகப்படுத்திய ஐபோன் X ல் பயன்படுத்தப்பட்ட Apple A11 Bionic ப்ராசஸர் face unlock ஐ பயன்படுத்த இது போன்ற  நியூரல் ப்ராசஸிங் அமைப்பையே பயன்படுத்துகிறது. ஐபோன் X அறிமுக விழாவில் face unlock தோல்வி அடைந்ததற்கு ஆப்பிள் தகுந்த காரணம் சொல்லிவிட்டாலும் ஹுவேய் அதை ஏற்பதாக இல்லை. அதைக் குறிப்பிட்டு  #TheRealAIPhone என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

Kirin 970 ப்ராசஸர் முழுமையாக சிந்திக்கும் திறனைப் பெறவில்லை  என்றாலும் அதற்கான முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது. இது வரை நாம் சொல்லும் வேலைகளை மட்டும் செய்து வந்த ஸ்மார்ட்போன்கள் இனிமேல் நமக்காகவும் சேர்த்து சிந்திக்கவும் தயாராகி விட்டன

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement