Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபோன் ஏரியாவுக்குள் நுழையும் ஜியோமி... 35,999ல் மெர்சல் காட்டுகிறதா? #MiMIX2

ஜியோமி


“ஹாய் ஆப்பிள்... நான் உங்க ஏரியாவுக்கும் வந்துட்டேன்” என அலற வைத்திருக்கிறது ஜியோமி நிறுவனம். ”ரெட்மின்னா குறைந்த விலையில, கொஞ்சம் நல்ல வசதி தர்ற மிடில் கிளாஸ் மொபைல்ன்னு நினைச்சியா? ரெட்மிடா” என சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது ஜியோமி ரசிகர்களிடம். காரணம், அந்நிறுவனம் நவம்பர் மாதம் வெளியிடவிருக்கும் புது மாடல் மொபைல்.

ஜியோமி மி மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2)ன் விலை 35,999. சீனாவில் செப்டம்பர் மாதமே இந்த மொபைல் விற்பனைக்கு வந்தது. நம்புங்கள். முதல் பேட்ச் மொபைல்கள் 59 வினாடிகளில் விற்றுத் தீர்ந்தன. அத்தனை லட்சம் மொபைல்களும் விற்க ஜியோமிக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே ஆனது என்பதை மற்ற சீன நிறுவனங்களாலே நம்ப முடியவில்லை. 7000 ரூபாய் மொபைலிலே ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார் தொடங்கி பல ஆச்சர்ய வசதிகள் தந்த ஜியோமி, இந்த விலைக்கு என்னவெல்லாம் தரும்?

5.99 இன்ச் ஸ்க்ரீன். சாம்ஸங்கும் ஆப்பிளும் புஜபலம் காட்டும் எட்ஜ் டு எட்ஜ் ஸ்க்ரீன் தான் இதிலும். சாம்ஸங் 8ல் அறிமுகமான 18:9 Ratio இதிலும் உண்டு. அல்ட்ராசானிக் பிராக்ஸ்மிட்டி சென்ஸாரும், இந்த மொபைலுக்காகவே உருவாக்கப்பட்ட கஸ்டம் மேட் இயர்போனும் ”செம செம” என்கிறார்கள் சீனாவில் இதைப் பயன்படுத்தியவர்கள். ஆப்பிள், சாம்ஸங் வரிசையில் இவர்களும் 3.5 எம்.எம் ஆடியோ ஜாக்கை தூக்கியிருக்கிறார்கள். இந்தியர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் 6ஜி.பி. ரேமும், ஸ்னாப்டிராகன் 835 புராசஸரும் மொபைல் வேகத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்ளும் பாதுகாவலர்கள். கேம் ஆர்வலர்களின் பசிக்குத் தீனி போடும்படி இந்த மொபைலை வடிவமைத்திருக்கிறார்கள். 3400mAh பேட்டரி என்றாலும் நீண்ட நேரம் நின்று பேசும் என்கிறது ஜியோமி.

வழக்கம் போல இதிலும் டூயல் சிம் வசதி உண்டு. டைப் சி யூ.எஸ்.பி தான் ட்ரெண்ட். அதனால், ஜியோமியும் அதன் வழியே சென்றிருக்கிறது.

12 மெகாபிக்ஸல் பின்புற கேமராவில் டூயல் ஃப்ளாஷ் உண்டு. ஆனால், டூயல் கேமரா இல்லை. இந்த விலைக்கு, நிச்சயம் இது மிகப்பெரிய குறைதான். வீடியோ எடுக்கும்போது கை உதறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இதிலிருக்கும் four-axis Optical Image Stabilisation (OIS) டெக்னாலஜி, அந்த சின்னச் சின்ன ஜெர்க்குகளை நீக்கிவிடும். 

ரெட்மி

முன்புற கேமரா வலது மூளையில் இருக்கிறது, எனவே செல்ஃபி எடுக்கும்போது உங்கள் உள்ளங்கை லென்ஸை மறைக்காமல் பிடிக்க வேண்டும். இதற்குத் தீர்வாக, மொபைலை தலைகீழாக பிடித்து செல்ஃபி எடுக்கச் சொல்கிறது ஜியோமி. ஆனால், அந்த வசதி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள அப்ளிகேஷன்களின் வேலை செய்வதில்லை. இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் அப்லோடு செய்வதென்றால், படம் எடுத்தபின் எடிட் செய்து, தலைகீழாக்கி அதன் பின் அப்லோடு செய்ய வேண்டும். ஆனால், செல்ஃபிக்கள் பளிச் என விழுகிறது என்பது பாசிட்டிவ் விஷயம். 

கொரில்லா கிளாஸ், செராமிக் பாடி என ஒரு கெத்து மொபைலுக்கான அத்தனை விஷயங்களையும் கவனமாக செய்திருக்கிறது ஜியோமி.
ஃபுல் ஸ்க்ரீன் மொபைல் வேண்டும்; ஆனால், விலை குறைவாக வேண்டுமென்றால் இந்த மாடலை கன்சிடர் செய்யலாம். எதற்கும் நவம்பர் வரை காத்திருந்து ”இதுவும் சூடாகிறதா” என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement