வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (20/10/2017)

கடைசி தொடர்பு:10:25 (20/10/2017)

8 நாள் நிற்கும் சார்ஜ்... ஜியோமியின் அடுத்த இரண்டு மொபைல்கள்..! #Xiaomi

என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் செக்மென்டில் ரெட்மி 4A செம ஹிட். அடுத்து ரெட்மி 5A புதிய மொபைலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோமி. ஒவ்வொரு முறையும் தனது முந்தைய மாடல்களிலிருந்து வடிவமைப்பு, பேட்டரி திறன் என எல்லாவற்றையும் மேம்படுத்தும்  ஜியோமி. அதேபோல ரெட்மி 5A ஸ்மார்ட்போனிலும் வடிவமைப்பில் அசத்தியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அடுத்த ஒரு மொபைலையும் களமிறக்கத் தயாராகிவருகிறது ஜியோமி.

 ரெட்மி 5A

ரெட்மி 5A  வசதிகள்

  • 5 இன்ச்  HD திரை
  •  ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர்  ப்ராசஸர்.
  • 2  ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா.
  •  5 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  •  3000 mAh பேட்டரி திறன்.
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளம்

ரெட்மி 5A மொபைலைப் பார்த்தால், விலை குறைவான மொபைல் என்று தோன்றாத அளவுக்கு சிறப்பாக வடிவமைத்திருக்கிறது ஜியோமி. ஒரு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் போன்று தோற்றமளிக்கும் இது, முழுக்க பிளாஸ்டிக் மெட்டீரியலால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், இதன் பேட்டரி திறன். ரெட்மி 5A 3000 mAh பேட்டரி திறனை மட்டுமே கொண்டிருந்தாலும் இதன் ஸ்டான்ட்பை டைம் 8 நாள்கள் என்று உறுதியளிக்கிறது ஜியோமி. ஆண்ட்ராய்டு மொபைல்களைப் பொறுத்தவரை இது அதிகமான ஒன்று. இதன் எடை 137 கிராம் மட்டுமே என்பதால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.

3000 mAh பேட்டரி திறன் மட்டுமே இருந்தாலும் ஜியோமி இதில் அதிக செயல்திறன் கொண்ட பேட்டரியைப் பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது குவாட் கோர் ப்ராசஸர் என்பதால், குறைவான மின் திறனையே உபயோகிக்கும். எனவே, இதன் ஸ்டான்ட்பை டைம் 8 நாள்கள் வரை தாக்குப்பிடிக்கலாம். என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கிடையாது. வசதிகளில் பெரிதும் மாற்றம் இல்லாமல், கிட்டத்தட்ட ரெட்மி 4A போலவே இருந்தாலும் வடிவமைப்பிலும், பேட்டரி திறனிலும் அசத்துகிறது. தற்போது சீனாவில் மட்டும் விற்பனைக்கு வந்திருக்கும் ரெட்மி 5A ன் விலை, இந்திய மதிப்பில் 6,000 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்தியாவுக்கு வரும்.

ரெட்மி 5A  வசதிகள்

நோட் 5:

இது மட்டுமன்றி, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் அடுத்த வரிசை மொபைலான ரெட்மி நோட் 5 வை அறிமுகப்படுத்தவிருக்கிறது, ஜியோமி. கொடுக்கும் விலைக்கு நிறைவான வசதிகள் என்பதை ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் வெற்றிக்குக் காரணமாகக் கூறலாம். அதே ஃபார்முலாவை ரெட்மி நோட் 5 -விலும் எதிர்பார்க்கலாம். அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், அதற்கு முன்னரே வெளியாகியிருக்கும் சில படங்கள் அதை உணர்த்துகின்றன.

ஜியோமி ரெட்மி நோட் 5

திரையைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன்களில் தற்போது டிரென்ட்டாகி வரும் ஃபுல் ஹெச்டி 18:9 திரை வடிவமைப்பு, 16+5 மெகா பிக்சல் டூயல் கேமராக்கள், 4000 mAh பேட்டரி திறன் போன்றவை இதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தப் புதிய மொபைல் தற்போது ரெட்மி நோட் 4-ன் விலையிலேயே அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். ரெட்மி நோட் 5-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தும் வேலையில் ஜியோமி இறங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீடியம் பட்ஜெட் செக்மென்டில் இதுபோன்ற ஒரு வசதியைக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை ஜியோமி அறிமுகப்படுத்தும் பட்சத்தில், அது வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


டிரெண்டிங் @ விகடன்