உங்கள் கூகுள் தேடல்களை ஆண்ட்ராய்டு மொபைலிலிருந்து அழிப்பது எப்படி?

கூகுள்

கூகுள் பிறந்து 18 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 18 வருடங்களில் நாம் இணையத்தைப் பயன்படுத்தும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது கூகுள். ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி தெரிய வேண்டுமென்றால் பக்கம் பக்கமாய் காகிதங்களைப் புரட்டி தேடிய காலம் இப்பொழுது இல்லை. ஓரிரு கீ-வேர்டுகளை டைப் செய்தால் போதும். A to Z தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த எளிமையும், வேகமும்தான் கூகுளின் வெற்றி. உடனே மக்கள் கூகுளுக்கு லைக்ஸ் குவிக்க, மற்ற சர்ச் இன்ஜின்களை விடவும் வேகமாக வளர்ந்தது கூகுள். கூகுளைத் தவிர்த்து வேறு சர்ச் இன்ஜின்களின் பெயரைக் கூட நாம் யோசித்திருக்கவே மாட்டோம். காரணம், அதற்கான தேவையே இல்லை என்பதுதான். 

பயனர்களின் செயலை எளிமையாக்கி, அவர்களின் விருப்பத்திற்கேற்ப புதிது புதிதாக நிறைய பயன்பாட்டைக் கண்டுபிடித்து வழங்குவதே கூகுளின் சிறப்பு. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் கூகுள் நிறுவனம் தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு,  தனது சர்ச் அப்ளிகேஷனை புதுப்பித்துள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகு, நாம் சர்ச் செய்யும் விஷயங்களின் ஸ்க்ரீன்ஷாட்களை கூகுள் சேமித்து வைக்கும். 

நாம் கூகுள் சர்ச் அப்ளிகேஷனைத் திறக்கும்போது ,கீழே வலது மூலையில் கடிகாரம் போன்ற ஐகானை பார்க்கலாம். அதை கிளிக் செய்தால் போதும். நாம் தேடிய எல்லாவற்றின் ஸ்க்ரீன்ஷாட்களையும் (Screen shot ) பார்க்க முடியும் .

இந்த சர்ச் ஆப் நாம் தேடிய எல்லாவற்றையும் கண்காணித்து, சேமிக்கிறது. நாம் விரும்பும் எந்த ஒரு நாளையும் பார்க்க வலதுபுறமாக தேய்த்தால் போதும்; எளிதாக அனைத்தையும் காட்டிவிடும். சிலர் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளது எனக் கருதுகின்றனர். மற்றவர்கள் இது தங்களுடைய ப்ரைவஸியைப் பாதிக்கும் என்கிறார்கள்.

கூகுள் ஆப் எடுத்த ஸ்க்ரீன்ஷாட்களைப் பார்க்க நினைப்பவர்கள், அதை அழிக்க நினைப்பவர்கள் இந்த எளிய முறையைப் பின்பற்றலாம்; 

ஸ்கிரீன் ஷாட்களை நீக்க வேண்டும் என நினைக்கும் பயனர்கள், தங்கள் கூகுள் ஆப்பை திறந்து மெயின் மெனுவில் வைக்கப்பட்ட ஹிஸ்டரி பட்டனைத் தட்டவும். அப்போது கடந்த 7 நாள்களாகத் தேடப்பட்ட தேடல்தகளின் பட்டியல் திரையில் தோன்றும். இப்பொழுது பயனர்கள் ஒவ்வொரு சர்ச்சையும் பார்க்கலாம். தேவையற்ற தேடல்களைப் பற்றிய ஸ்க்ரீன்ஷாட்களை அகற்றலாம்.

பயனர்கள் ஸ்க்ரீன்ஷாட்களை நீக்குவதைத் தவிர இந்த வசதியையே முடக்கலாம்.

           1. அதற்கு முதலில் ஆப்பின் முதல் பக்கத்துக்குச் சென்று இடது மூளையிலுள்ள கோடுகளை கிளிக்  செய்ய வேண்டும். அப்போது பிரதான மெனு (Main menu) தோன்றும்.

            2.பின்பு Setting -க்குள் சென்று Accounts and privacy கிளிக் செய்தால் போதும். மற்றொரு திரை தோன்றும்.

           3. அதில் Enable recent பட்டனை off செய்ய வேண்டும்.

கூகுள்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் - ஆல்பம்

அவ்வளவுதான் இதை ஒரு முறை செய்துவிட்டால் போதும், இதன் பிறகு நம்முடைய தேடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சேமிக்கப்படுவதில்லை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!