Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜியோவின் புதிய பிளான்களில் இந்த முறை... அதிர்ச்சி! #Jio

ஜியோவின் புதிய பிளான்கள்

அறிமுகம் ஆன புதிதில் அனைத்துச் சேவைகளையும் இலவசமாக அளித்து வந்தது ஜியோ. அதன் பின்னர் படிப்படியாக அனைத்திற்கும் பணம் செலுத்தும் வகையில் தனது பிளான்களை மாற்றியமைத்தது. தற்பொழுது தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறை தனது பிளான்களை மாற்றியமைத்திருக்கிறது. தற்பொழுதுள்ள ப்ரீபெய்டு பிளான்களின் வேலிடிட்டி எவ்வளவு, டேட்டா எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

எப்பொழுதும் போலவே எல்லா பிளான்களிலும் வாய்ஸ் கால்களுக்குக் கட்டணம் கிடையாது. அதே வேளையில் ஒரு சில பிளான்களின் வேலிடிட்டி நாள்களைக் குறைத்திருக்கிறது ஜியோ. ஒரு சில பிளான்களின் வேலிடிட்டியை அதிகரித்திருக்கிறது. அதேபோல மொத்த டேட்டா அளவுகளிலும் மாறுபாடு இருக்கிறது.

19 ரூபாய் பிளான்

இதன் மூலமாக 150 எம்.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். இதன் வேலிடிட்டி ஒரு நாள். 100 மெசேஜ்களை இதில் இலவசமாக அனுப்ப முடியும்.

52 ரூபாய் பிளான்

இதன் வேலிடிட்டி ஏழு நாள்கள். ஒரு நாளைக்கு 150 எம்.பி வீதம் ஏழு நாள்களுக்கு 1.05 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். 70 மெசேஜ்களை இதில் இலவசமாக அனுப்ப முடியும்.

98 ரூபாய் பிளான்

இதன் மூலமாக ஒரு நாளைக்கு 150 எம்.பி வீதம் 14 நாள்களுக்கு 2.1  ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். 140 மெசேஜ்களை இதில் இலவசமாக அனுப்ப முடியும்.

149 ரூபாய் பிளான்

குறைவான அளவு டேட்டாவை அதிக நாள் உபயோகிப்பவர்கள் இந்த பிளானைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 150 எம்.பி வீதம் 28 நாள்களுக்கு 4.2 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். 300 மெசேஜ்கள் வரை இதில் இலவசமாக அனுப்பிக்கொள்ளலாம்.

309 ரூபாய் பிளான்

ஏற்கெனவே இருந்த பிளான் இது. அதன் வேலிடிட்டி நாள்களை மட்டும் குறைத்திருக்கிறது ஜியோ. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி வீதம் 49 நாள்களுக்கு 49 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். மற்றபடி மெசேஜ்கள் இந்த பிளானில் அன்லிமிடட்.

399 ரூபாய் பிளான்

இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி வீதம் 70 நாள்களுக்கு 70 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். மெசேஜ்கள் அன்லிமிடெட்.

 459 ரூபாய் பிளான்

ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய பிளான். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி வீதம் 84 நாள்களுக்கு 84 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். இதில் மெசேஜ்கள் அன்லிமிடெட். 399 ரூபாய் பிளானோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது சிறந்த பிளானாக இருக்கும்.

509 ரூபாய் பிளான்

ஒரு நாளைக்கு அதிக டேட்டா தேவைப்படுபவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 2 ஜி.பி வீதம் 49 நாள்களுக்கு 98 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். மெசேஜ்கள் இதில் அன்லிமிடெட். இதற்கு முன்னர் இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாள்கள் அது 49 நாள்களாகக் குறைத்திருக்கிறது.

999 ரூபாய் பிளான்

இதன் வேலிடிட்டி 90 நாள்கள். இந்த பிளானில் கிடைக்கும் மொத்த அதிவேக டேட்டாவின் அளவு 60 ஜி.பி. ஒரு நாளைக்கு இவ்வளவு டேட்டா என்ற கட்டுப்பாடு இதில் கிடையாது.

1,999 ரூபாய் பிளான்

180 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இதன் மூலமாக 125 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம்.

 4,999 ரூபாய் பிளான்

இதன் மூலமாக 360 நாள்களுக்கு 350 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம்.

9,999 ரூபாய் பிளான்

இருப்பதிலேயே விலை அதிகமான பிளான் இது. இதன் மூலமாக 360 நாள்களுக்கு 750 ஜி.பி அதிவேக டேட்டாவை பெறலாம்.

ஜியோவின் புதிய பிளான்கள்

ஒவ்வொரு முறையும் பிளான்களின் வேலிடிட்டியையும் டேட்டா அளவை மட்டுமே மாற்றம் செய்யும் ஜியோ. அதற்கு மாறாக இந்தத் தடவை வேறொரு பெரிய மாற்றத்தையும் செய்திருக்கிறது. இதற்கு முன்னர் அதிவேக டேட்டா முடிந்தபின் இன்டர்நெட் உபயோகிக்கும் பொழுது அதன் வேகம் 128kbps ஆக இருக்கும். அதைத் தற்பொழுது 64kbps ஆக குறைந்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement