Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவி-யில் மொபைல் வீடியோக்கள்... பணப் பரிமாற்றம்... கைக்கு வந்தது ஜியோ மொபைல்! #JioMobile

ஜியோ மொபைல்

கடந்த வருடம் தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ கால்பதித்த பின்னர் கட்டணங்கள் வெகுவாக குறைந்தன. அது மட்டுமல்லாமல் குறைவான விலையில் 4G மொபைலை அறிமுகப்படுத்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ஜியோ. 1500 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த மொபைலை மூன்று வருடங்கள் கழித்து திருப்பிக் கொடுத்துவிட்டு 1500 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மீண்டும் ஆச்சர்யப்படுத்தியது. புக்கிங்கில் மில்லியன்களில் ஹிட்டடித்தது ஜியோ மொபைல். தற்பொழுது புக்கிங் செய்த பெரும்பாலானோருக்கு கையில் கிடைத்திருக்கிறது ஜியோ போன்.

டச் ஸ்க்ரீன் மொபைலாக இல்லாவிட்டாலும் வசதிகளில் அசத்துகிறது ஜியோ போன். 1500 ரூபாய் விலையில் மக்கள் அதிகம் வாங்குவது சாம்சங் மற்றும் நோக்கியா நிறுவங்களின் மொபைல்களைத்தான். அதைவிட சிறப்பான வசதிகள் ஜியோ போனில் இருக்கின்றன. ஜியோ போன் வாங்கியவர்களுக்கும் இனிமேல் வாங்கபோகிறவர்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே.

 

ஜியோ போன்


வாய்ஸ் அசிஸ்டெண்ட்

வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியை பொறுத்தவரை அது விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் இருப்பதுதான் வழக்கம். அதே போன்ற வசதியை இதிலும் அளித்திருக்கிறது ஜியோ. ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலோ ஜியோ போனிடம் கூறினால் போதுமானது. ஜியோ போனின் நேவிகேஷன் பட்டன்களின் நடுப்பகுதியில் சில நொடிகள் அழுத்தி பிடிப்பதன் மூலமாக  வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியை பயன்படுத்த முடியும். இது மட்டுமின்றி போனில் இருக்கும் அப்ளிகேஷனுக்கு ஏதாவது கட்டளை இடவும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

பல்வேறு இந்திய மொழிகள் 

இந்த வசதி பெரும்பாலான போன்களில் இருப்பதுதான் என்றாலும் இதில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்கிறது ஜியோ போன். ஆங்கிலம் தெரியாத வட்டார மொழிக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சாப்ட்வேர் அப்டேட்

பெரும்பாலும் ஃபீயூச்சர் மொபைல்களில் சாப்ட்வேர் அப்டேட் வசதி இருப்பதில்லை அதற்கான தேவைகளும் குறைவாகவே இருந்தன. ஒரு முறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்படும் இயங்குதளம் கடைசி வரை அப்படியேதான் இருக்கும். ஆனால், இதில் வசதிகளும் இயங்குதளமும் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி சாப்ட்வேர் அப்டேட் மூலமாக புதிய வசதிகள் தரப்படும்.

போன்


மல்டிமீடியா ஷேரிங்

ஜியோ போனில் இருக்கும் மற்றொரு அருமையான வசதி. மற்ற மொபைல்களில் இதுபோன்ற வசதிகள் முன்னர் கிடையாது. இந்த வசதி மூலமாக போனை டிவி-யில் இணைக்க முடியும். இதன் மூலமாக போனில் இருக்கும் வீடியோக்களை நேரடியாக டிவியில் காணலாம். ஜியோ மீடியா கேபிள் இதற்குப் பயன்படும். ஜியோ இதை அதிகாரபூர்வமாக இன்னும் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. தற்பொழுது ஜியோ மீடியா கேபிள் பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

NFC

இந்த வசதி விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டும் இதுவரை இருந்துவந்தது. NFC மூலமாக மிக எளிதாகவும் விரைவாகவும் தகவல்களை அருகில் இருக்கும் NFC வசதி கொண்ட மொபைலுக்குப் பரிமாற்றம் செய்ய முடியும். NFC-யின் மற்றொரு குறிப்பிடத்தக்க பயன் டிஜிட்டல் பேமென்ட்.  NFC Payment எனப்படும் இதன் மூலமாக எளிதில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்த வசதியை தற்பொழுது ஜியோ போனில் பயன்படுத்த முடியாது. அடுத்த சாப்ட்வேர் அப்டேட் அல்லது கூடிய விரைவில் இந்த வசதி கொடுக்கப்படும்.

இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இது ஆண்ட்ராய்டு மொபைல் இல்லை; எனவே, ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களை இதில் பயன்படுத்தமுடியாது என்பது குறைதான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement