வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:05 (29/10/2017)

நோட்4ஐ விட அதிக வசதி... குறைந்த விலை... ரெட்மிக்கு சவால் விட வருகிறது டெனார்! #DefinedByYou

டெனார் G ரெட்மி


மீடியம் பட்ஜெட் செக்மென்டில் தற்பொழுது வரைக்கும் ராஜா என்றால் அது ரெட்மி நோட் 4 தான். கடந்த செப்டம்பர் மாதம் 20 தேதி முதல் இந்த மாதம் 19 ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டும் 40 லட்சம்  ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை படைத்திருக்கிறது ஜியோமி. ரெட்மி நோட் 4 ன் வசதிகளும் அதன் விலையும் அதன் மிகப்பெரிய பிளஸ். கிட்டத்தட்ட அதே விலையில் கூடுதல் வசதிகளுடன் அறிமுகமாகியிருக்கிறது 10.or G (டெனார் G).


10.or G வசதிகள்

  • 5.5  இன்ச் IPS LCD 1080 x 1920  திரை.
  • 2.2 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 626 ஆக்டாகோர் ப்ராசஸர்.
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 13+13 மெகாபிக்சல் பின்புற கேமரா.
  •  16 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  • 4000 mAh பேட்டரி திறன்.
  • ஆண்ட்ராய்டு 7.1.2 நொளகட்  இயங்குதளம்.

10.or நிறுவனம் சீனாவைச் சேர்ந்தது. தற்பொழுது 10.or G மற்றும் 10.or E என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வடிவமைப்பை பொறுத்தவரையில் ரெட்மி நோட் 4 க்கும் டெனார் G பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை. அதே மெட்டல் பிளஸ் பிளாஸ்டிக் வடிவமைப்பு. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் முன்புறம் இருக்கும் மூன்று நேவிகேஷன் பட்டன்கள் இதில் திரைக்கு உள்ளேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் இருக்கும் குறிப்பிடத்தக்க வசதிகளாக டூயல் கேமரா மற்றும் ப்ராசஸரைக் குறிப்பிடலாம். 13+13 மெகாபிக்சல் கொண்ட டூயல் பின்புற கேமராக்கள் இதில் இருக்கின்றன. அதே போல முன்புறம்  16 மெகாபிக்சல் கேமரா ஃபிளாஷ் வசதியுடன் இருக்கிறது.

இதில் இருப்பது ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்பதால். இதில் FM போன்ற வசதிகள் இருக்காது. தற்பொழுது இருப்பது ஆண்ட்ராய்டு 7.1.2 நொளகட் இயங்குதளம். அதை ஆண்ட்ராய்டு ஓரியோவிற்கு அப்டேட் செய்யும் வசதியை அளிக்கிறது 10.or G. 

பேட்டரி திறனிலும் இதில் குறைவில்லை. இதில் 4000 mAh பேட்டரி இருக்கிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டு நாள்கள் போதுமானதாக இருக்கும் என்று கூறுகிறது 10.or. முழுநேரம் இணையம் மற்றும் கேம்ஸ் ஆடினால் அதிகபட்சம் ஒரு நாள் வரை தாக்குப்பிடிக்கலாம். இதில் ரெட்மி நோட் 4 ஐ விட பவர்புல் ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 4 ஜிபி ரேம் இருப்பதால் செயல்திறனும் சிறப்பாக இருக்கும். இதிலிருக்கும் 64 ஜிபி இன்டர்னல் மெமரியை 128 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ள முடியும். டூயல் ஸ்பீக்கர் அமைப்பு  இருப்பதால் சவுண்ட் குவாலிட்டியும் சிறப்பாக இருக்கும். 

டெனார் G ஸ்மார்ட்போன்


ஆனால், ரெட்மி நோட் 4 போலவே இதிலும் விரைவாக சார்ஜ் ஏற்றும் வசதி கொடுக்கப்படவில்லை. எனவே, சார்ஜ் ஏற்றுவதற்கு சற்று அதிக நேரம் ஆகும். அதே போல 10.or புதிய நிறுவனம் என்பதால் சர்வீஸ் சென்டர்கள் மிகக் குறைவு. தமிழ்நாட்டில் ஒரே ஒரு சர்வீஸ் சென்டர் சென்னையில் மட்டும் இருக்கிறது.

விலை மற்றும் வசதிகளைப் பொறுத்தவரையில் ரெட்மி நோட் 4 ஐ விட டூயல் கேமரா மற்றும் ப்ராசஸர் என அதிக வசதிகள் தருகிறது டெனார் G. சர்வீஸ் சென்டர்கள் அதிகரிக்கும் போது இந்த ஸ்மார்ட்போன் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம். 

 
 


 


டிரெண்டிங் @ விகடன்