அஜித்தை வேகமாக நடக்க வைக்கலாம்... விஜய் ஜம்ப்பை Gif ஆக்கலாம்..! 6 யூடியூப் ட்ரிக்ஸ்

யூட்யூப் ட்ரிக்

“தினமும் பேசுற மொழி தமிழ். ஆனா தேவைப்படுறப்ப ஒரு வார்த்தை கிடைக்க மாட்டுது” - வசூல்ராஜாவில் கமல் இதைச் சொல்வார். அதேபோலதான் யூட்யூபும். தினமும் பார்க்கும் தளம் என்றாலும், அங்கு நாம் செய்யக்கூடிய பல விஷயங்களைப் பலர் அறிவதில்லை. இந்த 6 யூட்யூப் ட்ரிக்குகள் உங்களுக்குத் தெரியுமா எனப் பாருங்கள்.

1) GIF செய்யலாம்:

ஃபேஸ்புக் கமென்ட்டில் போடவும், வாட்ஸ்அப் க்ரூப்பில் தொல்லை செய்பவரைக் கலாய்க்கவும் GIF அதிகம் பயன்படும். நமக்குப் பிடித்த வீடியோவிலிருந்து GIF செய்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. பிடித்த வீடியோவை யூட்யூபில் தேடி எடுங்கள். Address barல், youtube என்ற வார்த்தைக்கு முன்பு gif சேருங்கள். (youtube.com/XXX - gifyoutube.com/XXX) 

இப்போது என்டர் தட்டினால் புதிய பக்கத்துக்குச் செல்லும். அங்கே அந்த வீடியோவிலிருந்து எந்த 15 நொடிகளையும் GIFஆக மாற்றிக்கொள்ளலாம். மேலும், அந்த வீடியோ மீது ஸ்டிக்கர்கள் சேர்க்கவும் முடியும்

2) வீடியோவின் வேகத்தை மாற்றலாம்:

சில வீடியோக்களை முழுவதுமாகப் பார்க்க நேரம் இருக்காது; அல்லது நமக்குப் பொறுமை இருக்காது. 15 நிமிட வீடியோவை 5 நிமிடத்தில் பார்க்க முடிந்தால் நல்லதுதானே. அதற்கு உதவும் செட்டிங் இது. Settings பட்டனை க்ளிக் செய்து Speed-ஐ செலக்ட் செய்யவும். பின், வீடியோவின் வேகத்தைக் கூட்டலாம் அல்லது ஹரி சார் படம் என்றால் குறைக்கலாம். 

3) குறிப்பிட்ட பகுதியை ஷேர் செய்தல்:

20 நிமிட வீடியோவாக அது இருக்கும். அதில 20 வினாடிகளை மட்டும் உங்கள் நண்பர்களுடன் பகிர நினைத்தால் என்ன செய்வது? அந்த வீடியோவின் URLன் கடைசியில் #t=  சேர்த்தால் போதும். முடிவில் எத்தனையாவது நிமிடம், எத்தனையாவது செகண்ட் என்பதைக் குறிப்பிடவும். உதாரணத்துக்கு, இரண்டு நிமிடம் 30வது செகண்டில் பார்க்க, “#t=02m30s”

4) ஆஃப்லைனில் வீடியோ பார்க்க:

சில இடங்களில் இணையம் நல்ல வேகத்தில் கிடைக்கும். மற்ற சில இடங்களில் சிக்னலே கிடைக்காது. உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை வைஃபை அல்லது வேகமான இணையம் கிடைக்கும் இடங்களில் டவுன்லோடு செய்துவைத்து, இணையம் இல்லாத இடங்களிலும் பார்த்து ரசிக்கலாம். இதில் டவுன்லோடு ஆகும் வீடியோ மொபைலில் சேவ் ஆகாது. யூட்யூப் ஆப்பிலே இருக்கும். இந்த ஆப்ஷன் மொபைலுக்கு மட்டும்.

இதற்கு வீடியோவின் கீழிருக்கும் Arrow பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

5) பிடித்த விளம்பரங்கள்:

யூட்யூபில் வரும் விளம்பரங்களிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால், என்ன வகையான விளம்பரங்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யலாம். Google Ad Preferences செட்டிங்குக்குச் சென்று, அதில் நாம் பார்க்க விரும்பாத type of ads தேர்வு செய்யலாம்.

6) ரிப்பீட்டேய்:

சில பாடல்களோ வீடியோக்களோ நமக்கு மிகவும் பிடித்துப்போகும். மீண்டும் மீண்டும் ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு வேலைகளைப் பார்ப்போம். அந்த வசதி யூட்யூபிலும் உண்டு. வீடியோவின் மீது Right click செய்தால், நிறைய ஆப்ஷன்கள் வரும். அதில் Create loop செய்தால், அந்த வீடியோ ரிப்பீட் மோடில் ஓடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!