"ப்ளீஸ்... கொஞ்சம் பேப்பரை காட்டுங்க..! - ஆப்பிளை காப்பியடிக்கும் ஒன்ப்ளஸ் #OnePlus5T

 

ஒன்ப்ளஸ் 5T ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனை பொறுத்தவரை இப்பொழுது ட்ரென்டிங்கில் இருப்பது ஃபுல் வியூ ஸ்க்ரீன் தான். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பங்குங்கு குறைந்தபட்சமாக ஒரு மொபைலையாவது இந்த வசதியுடன் அறிமுகப்படுத்திவிட்டன அந்த வரிசையில் ஒன்ப்ளஸ் மட்டும் மிஸ்ஸிங். அந்தக் குறையை போக்குவதற்காக நேற்று ஒன்ப்ளஸ் 5T என்ற ஸ்மார்ட்போனை நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த முறை, ஒன்ப்ளஸ் 3 மொபைலை அறிமுகப்படுத்தி சில மாதங்கள் கழித்து ஒரு சில மாற்றங்களைச் செய்து ஒன்ப்ளஸ் 3T என்று புதிய மொபைலாக அறிமுகப்படுத்தியது. அதே வழியை பின்பற்றி  ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியான ஒன் பிளஸ் 5 மொபைலில் சில வசதிகளை சேர்த்து  தற்பொழுது புதிய ஸ்மார்ட்போனாக வெளியிட்டுள்ளது. அப்படி என்ன புதிய வசதி இருக்கிறது 5T யில்?

ஒன்ப்ளஸ் 5T வசதிகள்

  • 6.1 இன்ச் AMOLED 1080 x 2160 திரை.
  • 2.45 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 835 ஆக்டாகோர் ப்ராசஸர்.
  • 6/8  ஜிபி ரேம் மற்றும் 64/128 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 20+16 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா.
  • 16 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  • 3300mAh பேட்டரி திறன்.
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் இயங்குதளம். 

ஒன்ப்ளஸ் 5 & 5T என்ன வித்தியாசம்

ஒன் பிளஸ் 5T ஸ்மார்ட்போன்


இரண்டையும் ஒப்பிடும் பொழுது திரையில் தான் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒன்ப்ளஸ் 5 ல் இருந்தது 5.5 இன்ச் 16:9 ரேஷியோ. அதைத் தற்போதைய ட்ரென்டிற்கு ஏற்றவாறு 18:9 வாக மாற்றியிருக்கிறது. இதில் இருப்பது  6.1 இன்ச் AMOLED திரை. இதுவரை வந்த ஒன்ப்ளஸ் மொபைல்களில் சற்று பெரியது. சன் லைட் வியூவை மேம்படுத்த மென்பொருளை பயன்படுத்தியிருக்கிறது ஒன் பிளஸ். இதன் மூலமாக வெயில் வேளையில் பயன்படுத்தும் பொழுதும் திரையில் தெளிவான காட்சிகளை பெற முடியும்.

இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் மொபைல்களில் முன்பக்கமாகவே ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் இருக்கும். இந்த முறை திரையை பெரிதாக்க தேவை வந்ததன் காரணமாக அது பின் பக்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. இது ஏற்கனவே ஒன்ப்ளஸ் போனை பயன்படுத்தியவர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம். 

ஒன் பிளஸ் 5T ஸ்மார்ட்போன்


கேமராவிலும் ஒரு சிறிய மாற்றம் இருக்கிறது. ஒன்ப்ளஸ் 5 ல் இருந்த 20 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் இதில் கிடையாது. அதற்கு பதிலாக அப்ரச்சர் அதிகமாக இருக்கும் 20 மெகா பிக்சல் கேமரா இதில் இருக்கிறது. இது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை சிறப்பாக எடுக்க உதவும். EIS வசதி இருப்பதால் வீடியோக்களை அசைவின்றி எடுக்க முடியும்.

Face unlock

ஒன் பிளஸ் 5T ஸ்மார்ட்போன்


ஆப்பிளிடம் இருந்து காப்பி அடிப்பதை வழக்கமாகவே வைத்திருக்கும் ஒன்ப்ளஸ் இந்த முறையும் அதே வேலையை செய்திருக்கிறது. ஆப்பிளின் ஃபேஸ் அன்லாக் பிரபலமானதை தொடர்ந்து ஒன் ப்ளசும் அது போன்ற ஒரு வசதியை ஒன் பிளஸ் 5T யில் கொடுத்திருக்கிறது.  ஆப்பிள் போல இல்லாமல் இது சாதரணமான முன்பக்க கேமராவையே இதற்குப் பயன்படுத்துகிறது. இன்ஃப்ராரெட் கேமரா, பயோனிக் சிப் என சிறப்பான வசதிகள் இருக்கும் ஆப்பிளின் ஃபேஸ் அன்லாக்கையே ஹேக்கிங் செய்துவிட்டார்கள் ஹேக்கர்கள். எனவே  இது தேவையில்லாத ஒன்று என்று கருத்து தெரிவிக்கிறார்கள் ஒன் பிளஸ் விரும்பிகள்.

5T வெளியானதில் சோகத்தில் இருக்கிறார்கள் ஆறு மாதத்திற்கு முன்பு ஒன்ப்ளஸ் 5 மொபைலை வாங்கியவர்கள். ஆறு மாத இடைவெளில் அவர்கள் வாங்கியதை விட அதிக வசதிகளுடன், அதே விலையில் ஒரு மொபைல் அதே பிராண்டில் வெளியாகும்பொழுது வருத்தம் இருக்கத்தானே செய்யும். அவர்களை விடவும் செம கடுப்பில் இருக்கிறார்கள்  5T யை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். திரை,கேமரா என இரண்டில் மட்டும் சில மாற்றங்களை செய்திருப்பதில் அவர்களுக்கு  ஏமாற்றம். பேட்டரி திறன், ப்ராசஸர் போன்றவற்றில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை ஒன்ப்ளஸ். 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 32,999 ரூபாயாகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 37,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 21 ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது ஒன்ப்ளஸ் 5T. 

புதிய மொபைல்களை அடிக்கடி வெளியிடும் ஒன்ப்ளஸ், கொஞ்சம் சர்வீஸ் சென்டரையும் மேம்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!