கலர் ஸ்டார்கள்... பிரிவ்யூ பேன்... ஜிமெயிலில் மறைந்திருக்கும் அட்டகாச வசதிகள்! #Gmail | Unknown Gmail tricks and tips

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (27/11/2017)

கடைசி தொடர்பு:18:27 (27/11/2017)

கலர் ஸ்டார்கள்... பிரிவ்யூ பேன்... ஜிமெயிலில் மறைந்திருக்கும் அட்டகாச வசதிகள்! #Gmail

Gmail

Gmail... இதற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. உலகின் பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஜிமெயில்தான். காரணம், இதன் எளிமையான வடிவமைப்பும் வசதிகளும். ஆனாலும் ஜிமெயிலில் இருக்கும் பல வசதிகளை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம்.

பிரிவியூ பேன் (Preview Pane)  

preview


மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் மிகவும் பிரபலமான வசதி இந்த ப்ரிவியூ பேன். அதாவது மெயிலை ஓப்பன் செய்துதான் பார்க்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் ப்ரிவியூ பேனிலேயே மெயில்களைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த வசதியைப் பெற மெயில் செட்டிங்கை ஓப்பன் செய்து அதில் இருக்கும் லேப்ஸ் (labs) டேப்பை செலக்ட் செய்தால், அதன்கீழ் ப்ரிவியூ பேன் (Preview Pane) ஆப்ஷன் இருக்கும். அதை Eanable செய்தால் போதும். பின்பு, புதிதாக செட்டிங்ஸ் பட்டன் அருகே ஒரு ஐகான் வந்திருக்கும். அதில் வெர்டிகல் ஸ்ப்ளிட் அல்லது ஹரிஸாண்டல் ஸ்ப்ளிட் என்று எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் ப்ரிவியூ பேன் வந்துவிடும். இனி எதாவது மெயிலை கிளிக் செய்தால் அது ப்ரிவியூ பேனில் ஓப்பன் ஆகும். தனித்தனியாக ஓப்பன் செய்து பின்வரவேண்டியதில்லை.

குறிப்பு: செட்டிங்ஸில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் சேவ் சேங்சஸ் ( Save Changes ) கொடுப்பது அவசியம்.

பல ஸ்டார்கள் பயன்படுத்தலாமே!

starred


மெயில்களில் முக்கியமானவற்றை குறித்துக்கொள்ள ஸ்டார் செய்யும் வசதி ஜிமெயிலில் உண்டு. இது பலரும் பயன்படுத்துவதுதான். ஆனால், ஒரே மஞ்சள் நிற ஸ்டார் மட்டுமல்லாமல் பல நிற ஸ்டார்கள் இதற்குப் பயன்படுத்தப்படலாம். முக்கியமான மெயில்களையும் மிகமுக்கியமானது, உடனே கவனிக்கவேண்டியது என்று உங்களுக்கு பிடித்ததுப்போல வகுக்க இந்த பலஸ்டார் வசதி உதவும். இந்த வசதியைப் பெற செட்டிங் சென்று அதில் இருக்கும் ஜெனரல் (General) டேபை கிளிக் செய்தால் அதன் கீழே ஸ்டார்ஸ் என்ற பகுதி இருக்கும். அதில் நாட் இன் யூஸ் (not in use) பகுதியில் இருக்கும் ஸ்டார்களையும் சிம்பல்களையும் தேவைக்கேற்ப இன் யூஸ் (in use) பகுதியில் இழுத்துப் போட்டால் அவற்றை நீங்கள் மெயில்களைக் குறிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். மெயில் அருகில் இருக்கும் ஸ்டார் பட்டனை ஒரு முறை கிளிக் செய்தால் மஞ்சள் நிற ஸ்டாரும், அடுத்தடுத்த கிளிக்குகளுக்கு வெவ்வேறு ஸ்டார்களும் வரும். இதன்மூலம் உங்கள் மெயில்களை வகுத்துக்கொள்ளலாம். இந்த மெயில்களை starred மெயில்ஸ் பகுதியில் காணலாம்.

அனுப்பிய மெயில்களை திருப்பிப்பெறலாம்! (Conditions apply)

undo send


பலநேரங்களில் நாம் ஒரு மெயிலை டைப் செய்துகொண்டிருக்கும்போதோ, அட்டாச்மென்ட்களை இணைப்பதற்கு முன்போ தவறுதலாக சென்ட் பட்டனை அழுத்திவிடுவதுண்டு. சாதாரண மெயில் என்றால் பிரச்னை இல்லை; திருப்பி அனுப்பிக்கொள்ளலாம். ஆனால் தொழில்ரீதியான, அலுவலகரீதியான மெயில் என்றால் சிக்கல்தான். இதற்குத் தீர்வாகதான் அன்டூ சென்ட் ( undo send ) என்ற வசதியை வைத்திருக்கிறது ஜிமெயில். இதன்மூலம் அனுப்பிய பின் ஒரு சில நொடிகள் வரை மெயில்களைத் திரும்பப் பெற முடியும். இவற்றையும் செட்டிங்ஸில் இருக்கும் ஜெனரல் டேபில் பார்க்கலாம். அதில் அன்டூ சென்ட் ( undo send ) பகுதியில் காத்திருக்க வேண்டிய நேரத்தை (cancellation time) கொடுத்துவிட்டு Enable கொடுத்தால் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துவிடும். 5 வினாடியில் இருந்து 30 வினாடி வரை இந்நேரத்தை வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மெயில் ஒன்றை தவறுதலாக சென்ட் செய்துவிட்டால் சில வினாடிகள் அன்டூ அலெர்ட் தென்படும் அதற்குள் மெயிலை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஆப்பிள் போனில் இருக்கும் ஜிமெயில் அப்ளிகேஷனில் இது இயல்பாகவே இருக்கும். ஆனால் ஏனோ ஆண்ட்ராய்டு  ஆப்பில் இந்த வசதியே இல்லாதது ஆச்சர்யம். அதற்குப் பதில் confirm before sending ஆப்சனை அவற்றில் செலக்ட் செய்துகொள்ளலாம்.

டிஸ்போஸபிள் மெயில் ஐடி 

Disposable mail id


உங்கள் மெயில் ஐடி aaa@gmail.com என்று வைத்துக்கொள்ளுவோம். உங்கள் ஐடிக்கு அடுத்து ஒரு + போட்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை டைப் செய்துகொள்ளுங்கள். அதாவது aaa+test@gmail.com என்பது உங்களின் ஒரு டிஸ்போஸபிள் மெயில் ஐடி. +க்கு பிறகு என்ன இருந்தாலும் ஜிமெயில் கண்டுகொள்ளாது. இதன் மூலம் என்ன நன்மை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சமூகவலைதளத்தில் நீங்க அக்கௌன்ட் தொடங்குவதாக எடுத்துக்கொள்ளவோம். அதில் டிஸ்போஸபிள் மெயில் ஐடி கொடுத்தால் ஜிமெயிலில் இருக்கும் பில்டர் வசதிகள் மூலம் அந்த டிஸ்போஸபிள் மெயில் ஐடிக்கு வரும் மெயில்களை அழிக்கவோ தனியாக பிரிக்கவோ முடியும். இதன்மூலம் தேவையில்லாத மெயில்களுக்கு காதுகொடுக்கவேண்டாம். இந்த ஃபில்டரை செட் செய்ய மேலே இருக்கும் சர்ச் (search) பட்டனுக்கு முன் இருக்கும்  அட்வான்ஸ்ட் சர்ச் (Advanced search) பட்டனை அழுத்தினால் ஒரு விண்டோ கீழ் இறங்கும். அதில் டு (to) அட்ரஸில் உங்கள் டிஸ்போஸபிள் மெயில் ஐடியைக் கொடுத்து அந்த விண்டோவின் கீழே இருக்கும் create filter with this search என்றிருப்பதை கிளிக் செய்தால் அந்த மெயில்களை என்ன செய்ய வேண்டுமென்ற விருப்பங்கள் வரும். அதில் உங்களுக்கு வேண்டியதை செலக்ட் செய்து கிரியேட் பில்டர் (create filter) என்று கொடுத்தால் போதும். அந்த டிஸ்போஸபிள் மெயில் ஐடிக்கு வரும் மெயில்கள் நீங்கள் சொன்ன இடத்துக்குச் செல்லும்.

கூகுள் க்ரோம் எக்ஸ்டென்ஷன்கள்

இது மட்டுமின்றி கூகுள் க்ரோம் வெப் பிரௌசில் ஜிமெயில்க்கென பல எக்ஸ்டென்ஷன்கள் இருக்கின்றன. அவற்றுள் அனுப்பும் விஷயங்கள் பத்திரமாக இருக்க பாஸ்வர்ட் பாதுகாப்புடன் மெயில் அனுப்ப உதவும் Secure mail, அனுப்பிய மெயில் ஓப்பன் செய்யப்பட்டதா என பார்க்க உதவும் மெயில் ட்ராக்கர் (mail tracker), படித்தவுடன் கிழித்துவிடவும் பாணி மெயில்களுக்கு ஸ்னாப் மெயில் (snap mai ) என பல நல்ல உபயோகமுள்ள எக்ஸ்டென்ஷன்கள் கூகுள் க்ரோமில் உள்ளன.

இதுமட்டுமின்றி இன்னும் பல வசதிகள் ஜிமெயிலில் இருக்கு. பொறுமையாக ஒரு நாள் உட்கார்ந்து செட்டிங்ஸை நோண்டினால் இன்னும் பல நல்ல மேட்டர்கள் உங்களுக்கு சிக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்