வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (07/12/2017)

கடைசி தொடர்பு:20:14 (07/12/2017)

ஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன? #BigShoppingDays

கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் விற்பனை தளங்களான ஃப்ளிப்கார்ட் , அமேசான் போன்றவை வாடிக்கையாளர்களைக் கவரும்வகையில் பல ஆஃபர்களை அளித்துவருகின்றன. இப்பொழுது, வருடத்தின் இறுதியிலும் பிக் ஷாப்பிங்டேஸ் என்ற பெயரில் மீண்டும் ஆஃபர்களை அள்ளித்தருகிறது ஃப்ளிப்கார்ட். இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

ஃப்ளிப்கார்ட்

அதுவும் ஸ்மார்ட்போன் வாங்க காத்திருந்தவர்களுக்குச் சரியான சமயம் இது. நிறைய சலுகைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதுதவிர, ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள் எஸ்பிஐ கிரெடிட்கார்டு மூலமாகப் பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட்.

மொபைல்கள்

மொபைல்கள்


ஐபோன் X வெளியான பிறகு அதற்கு முந்தைய மாடல்களின் விலை, தொடர்ந்து குறைந்துவருகிறது. அந்த வகையில் ஐபோன் 7 மாடல் 49,000 ரூபாயிலிருந்து 39,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மோட்டோரோலா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் மொபைல்கள் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது. பிரபலமான ரியர் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3080 mAh பேட்டரி, ஸ்டாக்  ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற வசதியைக் கொண்ட  Mi A1 ஸ்மார்ட்போனின் விலை 2,000 குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Honor 6X ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியன்ட்களும் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.  கூகுள் பிக்ஸல் 2 மொபைலின்  4 ஜிபி 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 61,000 ரூபாயாக இருந்தது அது தற்பொழுது 11,000 ரூபாய் விலைகுறைக்கப்பட்டு 49,999 ரூபாய்க்குக் கிடைக்கும். கூகுள் பிக்ஸல் 2 XL மொபைலின் விலை 5000 ரூபாய் குறைக்கப்பட்டு  67,999 க்கு கிடைக்கிறது.

லேப்டாப் 

லேப்டாப்

கேமிங் பிரியர்கள் லேப்டாப் வாங்குவதற்கு ஏற்ற சமயம் இது. MSI நிறுவனத்தின் GV62 கேமிங் லேப்டாப் 79,990 ரூபாயாக இருந்து வந்தது. தற்பொழுது ரூ.25,000 விலை குறைக்கப்பட்டு 54,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஏசர் நிறுவனத்தின் Acer Predator வகை லேப்டாப்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. இது தவிர Predator 21X  என்ற புதிய லேப்டாப்பை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏசர். இதன் முன்பதிவும் இன்று தொடங்கியிருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய். மேலும் Microsoft Xbox மற்றும் Sony PlayStation ஆகியவையும் விலை குறைக்கப்பட்டுள்ளன.

ஹார்டு டிஸ்க்

Adata HV620 1TB  ஹார்டு டிஸ்க்குகள் 2,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Seagate 1 TB ஹார்டு டிஸ்க் ரூ.3,899 க்கு கிடைக்கிறது. அமேசானிலும் இதேவிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

பவர் பேங்க் 
10000 mAh திறன் கொண்ட ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை ,மற்றும் Ambrane பவர்பேங்க்குகள் 599 ரூபாய்க்குக் கிடைக்கும்.

டிவி
பெரும்பாலான டிவி களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைத் தருகிறது ஃப்ளிப்கார்ட். VU நிறுவனத்தின் 55 இன்ச் UltraHD (4K) டிவி 42,999 ரூபாய். LG யின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 38,999 ரூபாய். Kodak 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவி 14,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாம்சங் 32 இன்ச் HD டிவி 16,999 ரூபாய்.

 


டிரெண்டிங் @ விகடன்