Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பைக் ஓட்டிகளுக்கு கூகுள் மேப்ஸ் தந்திருக்கும் செம அப்டேட்..! #GoogleMaps

கூகுள் மேப்ஸ்

”ஸ்மார்ட்போன் வெச்சிருந்தா போதும். எங்க வேணா போய்ட்டு வந்துடலாம்”னு சொல்லுவாங்க கூகுள் மேப்ஸ் பத்தி தெரிஞ்சவங்க. எந்த ஊரு போனாலும் கூகுள் மேப்ஸ்யை விட நல்ல கைடு இல்லைனு சொல்ற நிலைமை வந்தாச்சு. பொதுவா நாம ஒரு புது ஊருக்குப் போனா அங்க இருக்கற நல்ல ஹோட்டல் தேடியே நமக்குப் பசி எடுத்துக்கும். ஆனா கூகுள் மேப்ஸ் உதவியால அந்தப் பிரச்னையே இல்ல. அங்க இருக்கற ஹோட்டல் லிஸ்ட்ட ஸ்டார் ரேட்டிங்கோட பாக்கலாம். இருக்கற உணவகம், மருத்துவமனை, தியேட்டர் எல்லாத்தையும் தெரிஞ்சி வெச்சிருக்கும். புதுசா ஒரு ஊருக்குப் போறவங்க கூகுள் மேப்பை நம்பியே தாரளமா போலாம். அங்க எந்த பஸ் ஏறனும், எந்த டைம்க்கு பஸ் வரும்னு கூட கூகுள் மேப் சொல்லிடும். யார கேட்டு அலையறதுங்கற பிரச்னையே இல்ல. இவ்வளவு இருக்கற மேப்ல இப்ப ஒரு ரொம்ப யூஸ்புல்லான அப்டேட் வந்திருக்கு, அதுதான் மோட்டார் சைக்கிள் மோட்.

கடந்த மாதம் கூகுள் தனது செயலிகளான கூகுள் மேப்ஸ், அசிஸ்டென்ட், கூகுள் சர்ச் போன்றவற்றிற்குப் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் டூ-வீலர் ஓட்டிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் மேப்பில் செல்ல வேண்டிய இடத்தைத் தேர்வு செய்தவுடன், Car,Train or bus, Walk போன்ற தேர்வுகளே இருக்கும். பைக் வைத்திருப்பவர்கள், இதில் எது தேர்வு செய்வதென்று குழம்பியே விடுவார்கள். எதைத் தேர்வு செய்தாலும் சரியான இடத்திற்குச் சென்று விடலாம் என்றாலும், செல்லும் தூரமும், நேரமும் வேறுபடும்.

தற்போது டூ-வீலர் ஓட்டிகளுக்காகவே வந்துள்ளது டூ-வீலர் ஆப்ஷன். கூகுள் மேப்பில் இருக்கும் இடத்தையும், செல்ல வேண்டிய இடத்தையும் கொடுத்துவிட்டு Two-Wheeler ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். பைக் செல்ல ஏதுவான பாதையைக் காட்டும். இதன் மூலம் பைக்கில் செல்லும் தூரம் வெகுவாகக் குறையும். காரணம்,கார் ஆப்ஷனை தேர்வு செய்யும்போது கார் செல்வதற்கு ஏதுவான பாதையை மட்டுமே காட்டும். இதனால் பைக்கில் ஈஸியாகச் செல்லும் குறுக்கு வழிகளை நம்மால் அறிய முடியாது. ஏனெனில் பைக் போன்ற இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதைகள் கார் போன்ற வாகனங்கள் செல்ல ஏதுவாக இருக்காது என்பதால் அந்தப் பாதைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள படாமல் இருந்தன. இது போன்ற ஈஸியான பாதைகளைக் காட்ட வந்துள்ளதுதான் இந்த அப்டேட்.

கூகுள்

இந்த ஆப்ஷன் கூகுள் மேப் வெர்ஷன் 9.67.1ல் கிடைக்கும். ப்ளே ஸ்டோரில் அனைவருக்கும் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெர்ஷனில் மியூசியம், காபி ஷாப், கோயில் போன்றவைகளுக்கு வெவ்வேறான நிற குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, அருகில் நடக்கும் நிகழ்ச்சிகள், சாலை பணிகள் போன்றவற்றை காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் நாம் செல்லும் இடத்திற்கான மாற்று வழிகளை முன்கூட்டியே தேர்வு செய்ய உதவும். ஏற்கெனவே கூகுள் மேப்ஸில் ரியல் டைம் ட்ராஃபிக் (Real time-traffic) ஆப்ஷன் உள்ளது. இது அந்நேரத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை அளிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement