3D டிவி, விண்டோஸ் மொபைல், விஸ்டா OS... 2017-ல் ‘குட்பை’ சொன்ன தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் என்பது மின்னல் வேகத்தில் நடந்துவிடும். இந்த மாற்றத்தில் பல தொழில்நுட்பங்கள் காணாமல் போகும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்ட பொருள்களில் பல நம்மிடயே இன்று பயன்பாட்டில் இல்லை. ஒருபக்கம் பார்த்தால் ஒவ்வொரு வருடமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் பல தொழில்நுட்பங்கள் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படிக் கடந்த 2017-ம் ஆண்டில் நம்மிடமிருந்து விடைபெற்ற தொழில்நுட்பங்களைப் பற்றிய ஒரு பார்வை. 

விண்டோஸ் மொபைல்கள்

விண்டோஸ் மொபைல்கள்

மொபைல் சந்தையின் பெரும்பகுதியை ஆண்ட்ராய்டும், ஆப்பிளுமே பிடித்துக் கொள்ள சத்தமே இல்லாமல் பின் வாங்கியது விண்டோஸ். கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் விண்டோஸ் மொபைல்கள் தயாரிப்பை நிறுத்தப்படப்போவதாக தகவல் வெளியானது. சில மாதங்கள் கழித்து அதை உறுதி செய்தது மைக்ரோசாப்ட். இனிமேல் புதிய மாடல் விண்டோஸ் மொபைல்கள் வெளியாகப்போவதில்லை எனவும் அதே வேளையில் பழைய மொபைல்களுக்கான மென்பொருள் அப்டேட்கள் தரப்படும் என்றும் விளக்கமளித்தது. 

iPod Shuffle மற்றும் iPod Nano

iPod Shuffle

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட்டிற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. எம்பி 3 பிளேயரான இது கடந்த 2005-ம் ஆண்டில் முதன் முதலில் வெளியானது. விலை சற்று அதிகம்தான் என்றாலும் அது வெளியான கால கட்டத்தில் அதிக வசதிகளைக் கொண்டிருந்ததால் விற்பனையில் கலக்கியது. அதன் பிறகு மொபைலிலேயே அனைவரும் பாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டதால் எம்பி 3 பிளேயர்கள் அவசியமில்லாமல் போனது. எனவே கடந்த சில கடந்த சில வருடங்களாகவே ஐபாட் பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இதன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவித்தது ஆப்பிள்.

விண்டோஸ் விஸ்டா

விண்டோஸ் விஸ்டா

மைக்ரோசாப்ட்டின் மற்ற இயங்குதளங்களைப் போலவே விண்டோஸ் விஸ்டாவும் மிகப் பிரபலமானது. 2006-ம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பிக்கு அடுத்ததாக வெளியிடப்பட்டது விண்டோஸ் விஸ்டா. இந்த இயங்குதளத்திற்கான சப்போர்ட் கடந்த வருடம் ஏப்ரல் முதல் முழுவதுமாக நிறுத்தியது மைக்ரோசாப்ட்.

AIM

AIM

பெரும்பாலோனோருக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவைகளுக்கெல்லாம் முன்னோடி இந்த AIM. 1997-ம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை அறிமுகமாகும் வரை அமெரிக்காவில் இது முன்னணி இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையாக இருந்தது. இது கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.

3D டி.வி

3D டி.வி தொழில்நுட்பங்கள்

அறிமுகப்படுத்தப்பட்ட போது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்று 3D டி.வி. ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. பெரும்பாலான டி.வி தயாரிப்பு நிறுவனங்கள் 2016-ம் ஆண்டிலேயே 3D டி.வி தயாரிப்பதை நிறுத்திக்கொண்டன. கடந்த வருடம்  மக்களின் நினைவுகளில் இருந்தே மறைந்து போனது 3D டி.விக்கள். 

Google Tango

Google Tango

ஸ்மார்ட்போன்களில் ஆக்மென்ட் ரியாலிடியை மேம்படுத்துவதற்காக கூகுளால் தொடங்கப்பட்ட திட்டம் Google Tango. இந்தத் திட்டத்தின் கீழ் ஆக்மென்ட் ரியாலிடி அனுபவத்தை சிறப்பாக வழங்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இதற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இந்தத் திட்டம் முடிவுக்கு வருவதாக கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

Google Talk

Google Talk

கூகுளின் இந்தச் சேவை 2005-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பலர் இந்தச் சேவையைப் பயன்படுத்தினார்கள். கடைசியாக 2013-ம் ஆண்டு இதன் கடைசிப் பதிப்பு வெளியானது. அதன் பின்பு வரவேற்பு குறைந்ததால் கடந்த வருடம் முதல் இந்தச் சேவையை நிறுத்தியது கூகுள்.

Vertu

Vertu

உலகிலேயே விலை உயர்ந்த மொபைல்களை தயாரிப்பதில் முன்னணியில் இருந்த நிறுவனம் வெர்ச்சூ (Vertu). சாதாரண பேஸிக் மாடல் மொபைல்களே ஐம்பதாயிரத்தைத் தாண்டும், ஆண்ட்ராய்டில் கூட சில மொபைல்களை அறிமுகப்படுத்தியது. நோக்கியா நிறுவனம்தான் இதன் முதல் உரிமையாளரும் கூட. 1998 ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கிய நோக்கியா அதின் பிறகு வேறொரு நிறுவனத்திடம் விற்றது. இந்த நிறுவனமும் கடந்த வருடத்தோடு மொபைல்கள் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!