மொபைல் போனைக் கண்டுபிடிக்க கைதட்டினால் போதும்... அசத்தும் ஆப்ஸ்! | Apps which helps to find your smartphone with whistle and claps

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (12/01/2018)

கடைசி தொடர்பு:18:58 (12/01/2018)

மொபைல் போனைக் கண்டுபிடிக்க கைதட்டினால் போதும்... அசத்தும் ஆப்ஸ்!

அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருள்களில் ஒன்றாகவே மாறிவிட்டன ஸ்மார்ட்போன்கள். அப்படி காலை முதல் இரவு வரை ஸ்மார்ட்போன்கள் நம் கைகளில்தாம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. நம்மில் பலருக்கு அன்றைய நாள் தொடங்குவதே மொபைலின் முகத்தில் விழித்த பிறகுதான். அப்படி எல்லா நேரமும் கையேடு இருக்கும் மொபைலை காணவில்லை என்றால் சற்று பதறித்தான் போவர்கள். இரவு பயன்படுத்தும்போது எங்கேயாவது வைத்து விட்டு காலையில் முதல் வேலையாக அதைத்தான் தேடி அலைவார்கள்.

செயலிகள்

ஒரு சிலரோ ரூமில் நுழைந்தவுடன் ஏதாவது ஒரு இடத்தில மொபைலை வைத்துவிடுவார்கள், சில நிமிடங்கள் கழித்துதான் அவர்கள் கையில் மொபைல் இல்லாதது ஞாபகம் வரும். அதன் பிறகு மொபைல் வைத்த இடத்தை கண்டுபிடிக்க ரூமையே புரட்டிப்போடுவார்கள். ஒரு சிலர் ஒரு மொபைலை கண்டுபிடிக்க மற்றொரு மொபைலை தேடி எடுத்து போன் செய்வார்கள். இது போன்ற மறதிக்காரர்களுக்கு உதவுவதற்காகவே சில செயலிகள் இருக்கின்றன. இவற்றை இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலமாக ஒரு விசில் அடித்தாலோ, அல்லது கை தட்டினாலே போதும். மொபைலை கண்டுபிடித்துவிட முடியும். இதை எப்பொழுதுமே பயன்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும் மொபைலை மறந்து வைத்து விட்டு டென்சனாகும் நபர்களுக்கு இது நிச்சயமாக உதவக்கூடும். போன்ற அது போன்ற செயலிகளில் சில...

Whistle to Find

Whistle to Find ஆப்

5.9MB அளவே இருக்கும் இதனை இன்ஸ்டால் செய்வதற்கு அதிக இடம் தேவைப்படாது. இதில் இருக்கும் செட்டிங்குகளும் பயன்படுத்த எளிதாகவே இருக்கும். மொபைலை கண்டுபிடிக்க மூன்று விதமான வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒலி, ஃபிளாஷ் மற்றும் வைப்ரேட் போன்றவைதாம் அவை. இவற்றில் ஒன்றை மட்டுமோ அல்லது மூன்றையும் சேர்த்தோ பயன்படுத்தலாம். மேலும் ஒரு வாரத்தில் எத்தனை நாள்கள் எவ்வளவு மணி நேரம் இந்த வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளலாம். தேவைப்படும் ரிங்டோன்களையும் இதில் செட் செய்து கொள்ளமுடியும். 

செயலியை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.frimustechnologies.whistletofind

Whistle Phone Finder PRO

Whistle Phone Finder PRO

3.6MB அளவே இருக்கிறது இந்த ஆப். இதை பயன்படுத்துவதும் எளிதான ஒன்றுதான். இதிலும் ஒலி, ஃபிளாஷ் மற்றும் வைப்ரேட் போன்ற ஆப்ஷன்கள் இருக்கின்றன. மொபைலில் அதிக இடமும் தேவைப்படாது. விசில் எவ்வளவு சத்தமாக ஒலித்தால் இந்தச் செயலி செயல்பட வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்தச் செயலியில் இருக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க வசதி இது ஆண்ட்ராய்டு வேர் சாதனத்திலும் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

ஆப்பை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.usefullapps.whistlephonefinder&hl=en

Clap To Find My Phone

Clap To Find My Phone

விசில் அடிக்கத் தெரியாதா? கவலையே வேண்டாம் உங்களுக்காகத்தான் இந்தச் செயலி. இதைப் பயன்படுத்த கைதட்டினால் போதுமானது. மொபைலை கண்டுபிடித்துவிடலாம். வேறு பல வசதிகளும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. லாக் ஸ்க்ரீன் போது மட்டும் செயல்பாட்டில் இருக்குமாறு வைத்துக்கொள்ளலாம். மொபைலை ஒரு தடவை ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்யும் பொழுது தானாகவே இந்தச் செயலி செயல்படுமாறும் வைத்துக்கொள்ளலாம். அதற்கான வசதியும் இதில் இருக்கிறது. இந்தச் செயலியின் அளவு 3.4MB.

ஆப்பை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.redteam.claptofind&hl=en


டிரெண்டிங் @ விகடன்