டெக் ஜாம்பவான்கள் தங்கள் பிள்ளைகளை தொழில்நுட்பத்துக்கு அடிமைகள் ஆக விடுகிறார்களா? | Do tech giants allow their children to get addicted to technology

வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (16/01/2018)

கடைசி தொடர்பு:09:43 (16/01/2018)

டெக் ஜாம்பவான்கள் தங்கள் பிள்ளைகளை தொழில்நுட்பத்துக்கு அடிமைகள் ஆக விடுகிறார்களா?

டெக்

"எங்கு  வேண்டுமானாலும் செல்... என்னை  மட்டும் எடுத்துக் கொண்டு போ..." என  அனைவரையும்  கைது செய்து கொண்டிருக்கிறது கைப்பேசி. 

’ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வந்துடுவான்’ என்பது போய்,  ’ஆண்டிராய்டு போய் ஆப்பிள் வாங்கிட்டா என் புள்ளை டாப்பா வந்துடுவான்’ என பெற்றோர்கள் புலம்பும் அளவுக்கு மூழ்கிவிட்டோம். இந்தக் கவலை இந்தத் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பவர்களுக்கும் இருக்குமா?

தொழில்நுட்பம் குறித்து பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆச்சர்யமான தத்துவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். பில் கேட்ஸ்,  ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பிற தொழில்நுட்ப உயர் அதிகாரிகளுடன் நேர்காணல் ஒன்று முன்பு நடைபெற்றது. அவர்கள் தங்கள் குழந்தைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் கண்டிப்போடு இருக்கின்றனர் என அப்போது தெரிய வந்தது.

இளம் வயதினரின் மூளைக்கு ஸ்மார்ட் போன்கள் எப்படியெல்லாம் ஆபத்துகளை உருவாக்க முடியும் என உளவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றனர். சமூக வலைதளத்தை ஒருவர் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது அவருக்கு 27% மன உளைச்சல் ஏற்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் தொலைபேசிகளை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு 'தற்கொலை' எண்ணம் அதிகமாக உள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியில், அமெரிக்காவில் உள்ள இளம் வயதினரின் தற்கொலை விகிதத்தை அதிகரித்திருப்பதாகவும்  இந்தத் தற்கொலை எண்ணத்திற்கு ஸ்மார்ட்போன்கள் ஒரு உந்து சக்தியாக உள்ளதாகவும்   தெரிவித்துள்ளனர். 

கல்வித் துறை வல்லுனர்களான ஜோ க்ளெமெண்ட் மற்றும் மாட் மைல்ஸ் (Joe clement and Matt miles)  ஆகியோரின் கூற்றுப்படி அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகமான ( Screen schooled : Two Veteran Teachers Expose How Technology overuse is making our kids Dumber) அதிகப்படியான டெக்னாலஜியை பயன்படுத்தும் குழந்தைகள் எப்படி திறன் குறைந்தவர்களாகின்றனர் என்பதை இரண்டு மூத்த ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் முன்வைக்கும்  ஆதாரங்களின்படி டிஜிட்டல் தொழில்நுட்பம்  வளர்ந்து வரும் ஒரு போதை சக்தியாகும்.

இரண்டு பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களான  பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் தாங்கள்  உருவாக்கிய டெக்னாலஜியை அவர்களது குழந்தைகள் எப்பொழுது விளையாட வேண்டும் என்பதில் கூடுதல் கவனத்துடனும் கண்டிப்புடனும் இருப்பதாக அப்போது கூறியுள்ளனர். 

2007 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ், தனது மகள் ஒரு வீடியோ விளையாட்டிற்குள்  அதிக நேரத்தை செலவிட்டதால், குறிப்பிட்ட  நேரத்திற்குள் திரையானது மூடும்படியான தொழில்நுட்பத்தை அமல்படுத்தினார். 14 வயதிற்கு முன் தனது குழந்தைகள் செல்போன்களை பெற அவர் அனுமதிக்கவில்லை. தற்போது, ஒரு குழந்தை சராசரியாக தனது  முதல் தொலைபேசியை 10 வயதில் பெற்றுவிடுகிறது,

ஃபேஸ்புக்

'ஆப்பிள்' தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஜாப்ஸ், 2011ல் காலமானார். அதற்குமுன் நியூயார்க் டைம்ஸ் நேர்காணலில் ஜாப்ஸ் ”புதிதாக வெளிவந்த ஐ-பேடை (i-pad) பயன்படுத்தக் குழந்தைகளுக்கு தடைவிதித்ததாகவும் கூறினார்.

"எங்கள் குழந்தைகள் வீட்டில் எவ்வளவு நேரம் கேட்ஜெட் மற்றும் இதர தொழில்நுட்பங்களுக்கு செலவழிக்கிறார்கள் என்பதை நாங்கள் கவனத்துடன் கட்டுப்படுத்துகிறோம்" என்று நிக்கி பில்டன்  நிருபரிடம் கூறியுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பங்களை குறித்து  ஸ்கிரின் ஸ்கூல் புத்தகத்தில் க்ளெமென்ட் மற்றும் மைல் கூறும் இந்த விஷயம் முக்கியமானது. ”பொது மக்களை விட  டெக் ஜாம்பவான்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளுக்கு விரைவில் எப்படி குழந்தைகள் அடிமையாகிறார்கள் என்பது தெரிகிறது. இருந்தபோதிலும் பெரும்பாலும் இவர்கள்  இவ்வகையான  தொழில்நுட்பத்திலேயே  முதலீடு செய்கின்றனர்.”

சரிதான். 
 


டிரெண்டிங் @ விகடன்