கார் வாங்கிட்டீங்களா? அப்ப இந்த 5 கேட்ஜெட்ஸ் உங்களுக்குத்தான்! #CarGadgets | Must have gadgets for your car

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (22/01/2018)

கடைசி தொடர்பு:14:29 (22/01/2018)

கார் வாங்கிட்டீங்களா? அப்ப இந்த 5 கேட்ஜெட்ஸ் உங்களுக்குத்தான்! #CarGadgets

குடும்பத்தையே மகிழ்விக்கும் உந்து சக்திதான் மகிழுந்து. தற்போது, மகிழுந்து பயன்பாட்டாளர்களுக்குத் தேவையான முக்கியமான சில கேட்ஜெட்களை காரிலேயே வடிவமைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கண்டுபிடிப்புகள் ஓட்டுநரின் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றும். 

1) Blaupunkt  Android :

கேட்ஜெட்ஸ்


Blaupunkt Android ஒரு செம டைம்பாஸ் விஷயம். இதை இயக்க 12 V சாக்கெட் சக்தி மின்சாரமே போதுமானது, இது பெரும்பாலான கார்களில் கிடைக்கும். Android tablet போன்ற இதை உங்கள் கார்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உலகளாவிய Headrest mount எந்தக் காரிலும் இணைத்துப் பயன்படுத்திக்கொள்ள உதவும். மைக்கோ ஸ்லாட் ( Micro SD slot ) மற்றும் USB போர்டு மற்றும் விளையாடுவதற்குத் தேவையான இணைய இணைப்புடன் வருகிறது. 

2) Digital Tyre Inflator:

tyre inflator 

ட்யூப்லெஸ் டயர்வந்தாலும் பஞ்சருக்கு முடிவே இல்லை. அதுவும் நீண்டதூரப் பயணங்களில் பஞ்சர் ஒட்டுமொத்த பயணத்தையே கெடுத்துவிடும். அதற்கு ஒரு தீர்வாக வந்திருக்கிறது இந்தக் கேட்ஜெட். காரிலிருக்கும் மின்சக்தியைக்கொண்டு எந்த சிரமமுமில்லாமல் காற்றடித்துக் கொள்ளலாம். அருகிலிருக்கும் பஞ்சர் கடை வரை வண்டியைக் கொண்டுசெல்ல இது உதவும். விலையும் 1500லிருந்தே கிடைக்கிறது.

3) வாகன டிராக்கர் : (Vehicle tracker)

ஒரு காரை வாங்கும்போது கணிசமான தொகையை முதலீடு செய்கிறோம். எனவே, வாங்கிய காரை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். கார் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட காரணத்தைக் கருத்தில்கொண்டு இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் டிராக்கர் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. GPS + GSM டிராக்கர் எந்த வயர்களோடும் இணைக்கப்படுவதில்லை. முதலில் இந்த ஆப்பை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப்பில் உங்களுக்குச் சொந்தமான காரின் பெயரைச் சொன்னால் போதும், காரின் இருப்பிடத்தைக் காண்பித்து, உங்களை வழிநடத்தும். 

 4) காரில் Wi - fi ஹாட்ஸ்பாட் : 

wifi hotspot

இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் வாழமுடியும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியென்றால் உங்கள் கைபேசியை  மட்டும் நம்பிக்கொண்டிருக்காதீர்கள். இதோ காரிலும் வந்துவிட்டது Wi - fi hotspot.  அல்காடெல்ஸ் லிங்சோன் தொலைபேசியில் இதை முயற்சி செய்து பார்க்கலாம். இது சிறிய கனமில்லாத, பேட்டரியோடு உள்ளது. இந்தப் பேட்டரியால் 12 நாள்கள் வரை சக்தியை வழங்க முடியும். தொடர்ந்து உபயோகித்தீர்களானால்  குறைந்தது ஆறு மணி நேரமாவது தாக்குப்பிடிக்கும். இந்த Wi- fi ஹாட்ஸ்பாட்டால் ஒரே நேரத்தில் 15 சாதனங்களை இணையத்துடன் இணைக்க முடியும்

 5) காப்பி தயாரிக்கும் எந்திரம் :

coffee maker


தினந்தோறும் காலையில் பலபேர் செய்யும் முதல் வேலை காபி அருந்துவதுதான். எந்தக் கவலையையும், மன அழுத்தத்தையும் ஒரு காபி தீர்க்கும் என நினைக்கும் ஆளா நீங்கள்? அப்படியென்றால், இனி உங்கள் காரிலேயே காபி தயாரிக்கலாம். இந்தக் காபி தயாரிக்கும் இயந்திரத்தை முயற்சி செய்துபாருங்கள். இதை நீங்கள் உங்களின் கார்களிலேயே பொருத்திக் கொள்ளலாம். இரண்டு நிமிடங்களிலேயே சூடான சுவையான காப்பி தயார் செய்துவிடும் இந்தக் கருவி.