வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (25/01/2018)

கடைசி தொடர்பு:14:18 (25/01/2018)

நல்ல பேட்டரியா என சோதிக்க ஆப்பிள் பேட்டரியைக் கடித்த இளைஞர்... நடந்த விபரீதம்?

பேட்டரி



சீனா போன்ற நாடுகளில் லாட்டரி அடித்த கதையைவிட இப்போதெல்லாம் பேட்டரி வெடிச்ச கதைகள் தான் அதிகம் வருகின்றன. இந்த முறை வெடித்தது தாய்வான் நாட்டில்; வெடித்தது ஐபோன் பேட்டரி.

தாய்வானில் இருக்கும் ஒரு மின்னணு சாதனக் கடைக்கு இளைஞர் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு, தனது ஐபோனுக்கு மாற்று பேட்டரி வாங்க நினைத்தவர், ஒரு பேட்டரியை எடுத்து வாயில் வைத்துக் கடித்திருக்கிறார். அடுத்த நொடி, அந்த பேட்டரி வெடித்து எகிறியது. நல்ல வேளையாக அது விழுந்த திசையில் யாருமில்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

சீனா, தாய்வான் போன்ற நாடுகளில் இதுபோன்ற அதிகாரபூர்வமற்ற கடைகளில் மொபைல் சாதனங்கள் வாங்குவது அதிகம். அப்படி வாங்கும்போது பேட்டரியை வாயில் வைத்து கடித்து அதன் தரத்தை சோதிக்கும் முறை ஒன்று பிரபலம். இது உண்மையில்லை என்றாலும் பலரும் இந்த முறையைப் பயன்படுத்திதான் பேட்டரி வாங்குகிறார்கள். அதுவும் வாங்கப்பட்டது டூப்ளிகேட் ஐபோன் பேட்டரி.
சென்ற வாரம் தாய்வான் நியூஸ் (Taiwan News) பத்திரிகையில் வந்தத் தகவலின்படி இந்த வீடியோதான் இப்போதைய வைரல். சீனாவில் இருக்கும் சமூக வலைதளமான miaopai.com தளத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள்.

 

 

இதற்கு முன் பலமுறை மொபைல் பேட்டரி வெடித்தக் கதைகள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன. பலமுறை மொபைல் சூடாகி அதனாலே பேட்டரி வெடித்ததுண்டு. சாம்ஸங் நோட் மொபைல்களை பேட்டரி வெடிக்கும் காரணத்தாலே திரும்பப் பெற்றது சாம்ஸங்.
பேட்டரி தீர்ந்துவிட்டதா என்பதைப் பார்க்க, பேட்டரியை வாயில் வைத்துப் பார்க்கும் நம்ம ஊரிலும் உண்டு. அதையே மொபைல் பேட்டரிக்கும் சோதித்து விபத்துக்குள்ளாகியிருக்கிறார் இந்த இளைஞர். போலவே, சார்ஜ் போட்டுக்கொண்டிருக்கும்போது பேசினால் மொபைல் வெடிக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

எது ஆபத்தான மின்சாரம்?
100 முதல் 200 மில்லி ஆம்ப்ஸ் (0.1Amps -0.2 Amps) வரையிலான மின்சாரம் உண்மையிலே ஆபத்தானது. உயிரையே பறிக்கக்கூடியது. 200 mA விட அதிகமான மின்சாரம் மயக்கமடையச் செய்யும். தீக்காயங்களை உண்டாக்கும். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டால் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கலாம். செயற்கை சுவாசம் (Artificial respiration) இந்தச் சூழலில் உதவும். 

100 mA-க்குக் குறைவான மின்சாரம் வலியைக் கொடுக்கும். மூச்சுவிட சிரமமாக்கும். 10 mA-க்குக் குறைவாக இருந்தால், மின்சாரத்தை உணர முடியும். வேறு ஒன்றும் ஆகாது.

பொதுவாக மொபைல் போன்கள் 3.7 வோல்ட் Li-ion பேட்டரிகளைக் கொண்டிருக்கும். ஐபோன் 6 மாடலில் 1810mA பேட்டரி இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 3.7 வோல்டேஜ் அழுத்தத்தில் 1.8Amps மின்சாரம் தரும். இது ஆபத்தான மின்சாரம்தான்.
ஆனால், மொபைல் போன் சார்ஜ் செய்யும்போது பேசினால், அது ஏன் வெடிக்க வேண்டும்? அல்லது, மின்சாரம் பயனரின் மீது பாய வேண்டும்? 

ஒரிஜினல் மொபைல் சார்ஜர்கள் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பில்லை. மொபைல் போன்களை சார்ஜ் போடும்போது உயர் அழுத்த பவர் பாயிண்ட்டில்தான் போடுகிறோம். அதில் ஏதேனும் ஷார்ட் சர்க்யூட் ஆனால், அது மொபைல் போனை பாதித்து, அதன் மூலம் யூஸரையும் தாக்கலாம். ஆனால், அதற்கும் மொபைல் போன் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மொபைலை சார்ஜரில் இருந்து எடுக்கும்போதுகூட மின்சாரம் தாக்கலாம். பெரும்பாலான சம்பவங்களில் போலி சார்ஜர்கள் பயன்படுத்தியதால்தான் மொபைலில் மின்சாரம் தாக்கியிருக்கிறது. எனவே, முடிந்தவரை ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.

ஒரிஜினல் சார்ஜர் இருந்தால் சார்ஜ் போடும்போது பேசலாமா?
அதைத் தவிர்க்கலாம். ஏன் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

சார்ஜ் போடும்போது மொபைல் சூடாவதைப் பார்த்திருப்போம். அதேபோல் நீண்ட நேரம் பேசினாலும் மொபைல் சூடாகும். சார்ஜ் போட்டுக்கொண்டே நீண்ட நேரம் பேசுவதால், இன்னும் அதிகமாக சூடாகும். இது பேட்டரியின் ஆயுளைப் பாதிக்கும். காதுகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

முன்பெல்லாம் பேட்டரி குண்டாக மாறுவதைக் கவனித்திருக்கலாம். இதுவும் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியதால் வந்த வினைதான். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், அது ஒருநாள் வெடிக்கலாம். 

தொடர்ந்து பேட்டரி சூடாகிக்கொண்டே போனால், அதன் கெப்பாசிட்டி குறையும். 10 மணி நேரம் சார்ஜ் போட்டாலும் பாதிதான் சார்ஜ் ஆகியிருக்கும். அல்லது அரை மணி நேரத்திலே சார்ஜ் தீர்ந்துவிடும்.

சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதால் உண்டாகும் வெப்பம் சார்ஜரையும் பாதிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்