சீனாவுக்குப் போகும் ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களின்தகவல்... உண்மையா? #Oneplus | Did oneplus forward its customers data to china?

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (31/01/2018)

கடைசி தொடர்பு:12:33 (03/02/2018)

சீனாவுக்குப் போகும் ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களின்தகவல்... உண்மையா? #Oneplus

 

ஒன்ப்ளஸ்

 

ஒன்ப்ளஸ் ஃப்ளாக்‌ஷிப் கில்லர்களின் அரசன். சாதாரண ஸ்டார்ட்அப்பாக தொடங்கி மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது ஒன்ப்ளஸ். நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்துவரும் மொபைல் சந்தையில் நிறுவனங்களுக்குள் தொழிற்போட்டி அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையில் ஒன்ப்ளஸ் தன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற கிளிப்போர்டு தரவுகளை சீனாவின் சர்வர்க்கு அனுப்பி வருவதாக ஒரு டிவிட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தப் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அதன் ஆக்சிஜன் ஓ.எஸ்.-ன் உலகளாவிய பயனர்களின் சாதனங்களில் இந்தச் சர்ச்சைகுரிய கோட்(Code) இனாக்டிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்புதான் ஒன்ப்ளஸ் உலகம் முழுவதும் உள்ள தனது 40,000 பயனர்களின் க்ரெடிட் கார்டு தகவல்கள் தனது ஆன்லைன் ஸ்டோர் மூலமாக திருடப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழனன்று பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எல்லியொட் அல்டெர்சன்(Elliot Alderson) என்பவர் ஆக்சிஜன் ஓ.எஸின் பீட்டா பதிப்பில் உள்ள badword.txt என்னும் கோப்பு, சில தரவுகளை டிஃபால்ட் கிளிப்போர்டிலிருந்து ஒரு சீன சர்வருக்கு அனுப்ப உதவியதாகக் கூறியுள்ளார். இந்தச் சந்தேகத்திற்கிடமான கோப்பானது தலைவர், துணைத் தலைவர், பிரதி பணிப்பாளர், இணைப் பேராசிரியர், துணைத் தலைவர்கள், பொது மற்றும் தனிப்பட்ட செய்தி என்னும் முக்கிய வார்த்தைகளை(keywords) கொண்டுள்ளது. மற்றும் அதன் இன்னொரு காப்பியானது பேட்டர்ன்(pattern) என்ற பெயரில் ஸிப்(.zip) பைலாக உருவாக்கபட்டுள்ளது

இந்தக் கோப்புகள் அனைத்தும் "ஆராய்ச்சிக்கான தொகுப்பு" இல் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை சீனாவின் teddymobile என்னும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்பி வருவதாக அவர் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ப்ளஸ் ஆக்சிஜன் ஓ.எஸ்.ன் சீனா பதிப்பான ஹைட்ரோ ஜென் ஓ.எஸ்.ல் சீனக் குறுஞ்செய்திச் சேவைகளான WeChat போன்றவற்றின் தரவுகளை வடிகட்டுவதற்கும் மற்றும் போட்டியாளர் இணைப்புகளைத் தடுக்கவும் இந்த ஃபைலை உபயோகப்படுத்தியதாக ஒன்ப்ளஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஃபில்டரை சீனாவுக்கு வெளியே எங்கும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஒன்ப்ளஸ் நிறுவனம் சீனப் பயனாளர்களுக்கே ஆன பீட்டா ஆக்சிஜன் ஓ.எஸ் அப்டேட் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அப்டேட்டில் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது. எதிர்கால அப்டேட்டிலிருந்து குறியீட்டை அகற்றுவதன் மூலம் இந்நிறுவனம் இதற்கு பதிலளிக்கலாம்.

இது போன்ற சர்ச்சைகள் ஒன்றும் ஒன்ப்ளஸுக்குப் புதியது இல்லை. இதற்கு முன்பு கடந்த நவம்பரில் ’என்ஜினீயர் மோடு’ எனப்படும் ஒரு கண்டறியும்(diagnostic) செயலி OnePlus 3, OnePlus 3T மற்றும் OnePlus 5 ஆகியவற்றில் காணப்பட்டது. இது தொலைபேசியைத் திறக்காமல் ரூட் ஆக்ஸஸ் செய்ய அனுமதித்தது. அந்தத் தவற்றை ஒப்புக்கொண்ட ஒன்ப்ளஸ் நிறுவனம் OTA அப்டெட்டில் அதைச் சரி செய்தது.

பிரச்னை இல்லை அல்லது அது விரைவில் சரி செய்யப்படும் என்றாலும் இந்தச் சம்பவம் ஒன்ப்ளஸ் வாடிக்கையளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்