₹4999 ல் நோக்கியா 4ஜி மொபைல்... ஏர்டெல் தரும் ஆஃபர்..!

நோக்கியா

”மொபைல் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது” என்றால் இன்னமும் பாதி பேர் ‘நோக்கியா’ என்றுதான் சொல்வார்கள். ஸ்மார்ட்போன்கள் அதிகமானதும் சாம்சங் போன்ற நிறுவனங்களும் சீன நிறுவனங்களும் விஸ்வரூபம் எடுத்தன. அப்போது ஓய்ந்தது நோக்கியாவின் அன்னபோஸ்ட் ஆட்சி. மீண்டும் ஆண்ட்ராய்டு மொபைல்களை களம் இறக்கி சந்தையில் தன் சாம்ராஜ்யத்தை நிறுவ முயல்கிறது நோக்கியா. சென்ற ஆண்டு அது வெளியிட்ட ஆண்ட்ராய்டு மொபைல்கள் ப்ளாக்பஸ்டர் இல்லையென்றாலும் ”நோக்கியா திரும்ப வந்துடுச்சு” என்ற நம்பிக்கையை அதன் ரசிகர்களுக்குத் தந்தது. இப்போது, நோக்கியா ஏர்டெல்லுடன் கைகோத்திருக்கிறது. அதன் இரண்டு மொபைல்களை இன்னும் குறைவான விலையில் வாங்க ஏர்டெல்லின் இந்த ஆஃபர் உதவும்.

என்ன ஆஃபர்:
நோக்கியா 3 மற்றும் நோக்கியா 2 ஆகிய இரண்டு மொபைல்களை ஏர்டெல் மூலம் வாங்கினால் ரூபாய் 2000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக்கை இரண்டு தவணைகளில் திரும்பத் தரும் ஏர்டெல். முதல் தவணையில் மொபைல் வாங்கிய 18 மாதங்களில் 500 ரூபாய் கிடைக்கும். இந்த 18 மாதங்களில் குறைந்தது 3500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அடுத்த 18 மாதங்களில் இன்னொரு 3500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இரண்டாவது தவணையாக 1500 ரூபாய் கேஷ்பேக் ஆக கிடைக்கும் என்கிறது ஏர்டெல்.

18 மாதங்களில் 3500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிறது ஏர்டெல். அதன் கணக்குப்படி மாதம் 169 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டாவும் அளவற்ற வாய்ஸ் கால்களும் கிடைக்கும். இந்த 169 ரூபாயை 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்தாலே 3500 ரூபாய் ஆகிவிடும் என்கிறது ஏர்டெல்.

நோக்கியா 3:
இதன் டவுன் பேமென்ட் விலை 9499. கேஷ்பேக் 2000 என்றால், அதன் விலை 7499 ஆகிறது. 

வசதிகள்:

பாலிகார்பனேட் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் உடன் கூடிய டிசைன், 
5 இன்ச் டிஸ்ப்ளே, 
சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் ஆப்ஷன்கள், 
8 எம்.பி கேமராக்கள், 
ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ், 
2 ஜி.பி ரேம், 
16 ஜி.பி இன்டர்னல் மெமரி, 
2630 mAh  பேட்டரி 

நோக்கியா 2:
இதன் டவுன் பேமென்ட் விலை 6999. கேஷ்பேக் 2000 என்றால், அதன் விலை 4999 ஆகிறது. 

வசதிகள்:
5 இன்ச் LTPS IPS LCD 720 x 1280  திரை.
1.3 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 212 குவாட்கோர் ப்ராசஸர்.
1  ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி.
8 மெகாபிக்சல் பின்புற கேமரா.
5 மெகாபிக்சல் முன்புற கேமரா.
4100mAh பேட்டரி திறன்.
ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட்  இயங்குதளம்.

“4ஜி மொபைல்கள் எல்லோராலும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நோக்கியாவுடன் கைகோத்திருக்கிறோம்” எனச் சொல்லியிருக்கிறார் ஏர்டெல்லின் தலைமைச் செயல் அதிகாரி. 

ஆன்லைன் வர்த்தக தளங்கள் உடனுக்குடன் கேஷ்பேக், மாதந்தோறும் சிறப்பு சேல்கள், அதில் குறையும் விலை என இருக்கும் காலகட்டம் இது. இந்தச் சூழலில் 36 மாதங்கள் பயன்படுத்தினால்தான் கேஷ்பேக் கிடைக்கும் என்ற சலுகைகள் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் என்பது சந்தேகத்துக்குரிய விஷயம்தான். ஆனால் ஏர்டெல் இந்த ஆஃபர் நிச்சயம் பலரைச் சென்றடையும் என நம்புகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!