வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (22/02/2018)

கடைசி தொடர்பு:14:55 (22/02/2018)

“ரெட்மில இதெல்லாம் ப்ளஸ்... இதெல்லாம் மைனஸ்..!” - ரெட்மி மொபைல் யூஸர் சர்வே முடிவு #VikatanSurveyResults

ரெட்மி மொபைல்கள்தான் சென்ற ஆண்டு அதிகம் விற்ற மொபைல்கள். இதைப் பயன்படுத்தியவர்களிடம் இப்போது அந்த மொபைல் எப்படியிருக்கிறது என்பது பற்றி ஒரு சர்வே எடுத்திருந்தோம். பல விஷயங்கள் ரெட்மிக்கு தம்ஸ் அப் காட்டினாலும் ஒரு சில விஷயங்களை ஷியோமி நிறுவனம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் பயனர்களின் பதில்.

இந்த சர்வேக்கு பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு வருடத்துக்கும் மேலாக ரெட்மி பயன்படுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மி


34 சதவிகிதம் பேர் மொபைல் சூடாவதே இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் அதுவும் ஆண்ட்ராய்ட் மொபைல் சூடாவது என்பது சாதாரணமான விஷயம் என்றே கருதப்படுகிறது. அந்த அடிப்படையில் இது ரெட்மிக்கு நல்ல விஷயம்தான். ஆனால், 14.5% பேர் பேசினாலே சூடாகிறது என்கிறார்கள். இவர்கள் அடுத்த முறை ரெட்மி வாங்குவது சந்தேகம்தான்

redmi


பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மொபைல் வாங்கியபோது இருந்த அதே திறனுடன் மொபைல் இப்போதும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்மார்ட்போனுக்கு இது ரொம்பவே நல்ல ஃபீட்பேக் என எடுத்துக்கொள்ளலாம்.

redmi


49% பேர் பக்கா க்ளாரிட்டி எனச் சொல்ல, மீதிப்பேரோ கேமரா சரியில்லை என்றே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். கேமரா என்பது ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான ஒரு வசதி. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் நெகட்டிவ் கருத்து சொல்லியிருப்பது நல்ல விஷயமல்ல. ரெட்மி, அதன் அடுத்தடுத்த மொபைல்களில் இந்தக் குறையைத் தீர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில், இதன் போட்டியாளர்கள் ஸ்கோர் செய்யும் ஏரியா கேமராதான்

redmi


இதற்கும் 40% ஆம் என பதில் சொல்லவில்லை. இந்த விலைக்கு இதுதான் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், குறைந்த விலையில் முழுமையான ஸ்மார்ட்போன் என்பதுதான் ரெட்மியின் பலம். அந்த அனுபவம் கிடைக்கவில்லையெனில், அடுத்த முறை இதே பிராண்டை வாங்க யோசிப்பார்கள். ஏனெனில், பல நிறுவனங்கள் இந்த விலையில் நிறைய வசதிகளைக் கொடுக்க ஷியோமியின் பூர்விகமான சீனாவிலிருந்தே கிளம்பியிருக்கின்றன

redmi


 ஆண்ட்ராய்டு மொபைலில் ஹேங் எல்லாம் ஒரு விஷயமா என நினைத்தால் ஓகே. ஆனால் 30% பேருக்கு ஹேங் ஆகும் பிரச்னை இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

redmi


வாங்கியவர்களின் 80% சர்வீஸ் சென்டருக்கே போக நேர்ந்ததில்லை; 17% பேர் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறார்கள். மின்னணு பொருள்களில் இது மிக மிகக் குறைந்த விழுக்காடு என்றே சொல்லலாம். இதில்தான் ரெட்மி நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறது.

redmi


33% பேர் நிச்சயம் வாங்குவேன் என்றாலும், மற்றவர்கள் அந்த முடிவுக்கும் இன்னும் வரவில்லை. பிராண்டு லாயல்டி என்பது ரெட்மிக்கு குறைவாக இருக்கிறதோ என்ற எண்ணத்தை இது காட்டுகிறது. 

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கேமரா விஷயத்திலும் மொபைல் சூடாவதிலும் ரெட்மி பயனர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. இந்த இரண்டையும் கவனத்தில்கொண்டு அடுத்தடுத்த மொபைல்கள் களமிறக்கினால் இந்த ஆண்டும் ரெட்மி ஆண்டாகத்தான் இருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்