₹20000- க்குள் சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்..! #BuyingGuide | Best smartphones available in the market under 20000

வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (23/02/2018)

கடைசி தொடர்பு:14:18 (23/02/2018)

₹20000- க்குள் சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்..! #BuyingGuide

ப்போதெல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கே சிறந்த வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும், அதைவிடக் கொஞ்சம் அதிகம் பணம் செலவழித்து இன்னும் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அவர்களுக்காக இருபதாயிரத்திற்குக் கீழே இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் சில இங்கே...

Xiaomi Redmi Note 5 Pro

Xiaomi Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன்

இருபதாயிரத்திற்குக் கீழே மொபைல் வாங்க வேண்டுமென்று நினைத்தால் ரெட்மியைத் தவிர்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கொடுக்கும் விலைக்குச் சரியான வசதிகள் வேண்டுமென்றால் ரெட்மி நோட் 5 ப்ரோதான் சிறந்த தேர்வு. ஷியோமி நிறுவனம் அண்மையில்தான் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 5.99 இன்ச்  18:9 2160 × 1080 டிஸ்ப்ளே, 12MP+5MP டூயல் பின்புற கேமரா மற்றும் 20 MP முன்புற கேமராவை இதன் குறிப்பிடத்தக்க வசதிகளாகக் கூறலாம். 1.8 GHz ஆக்டாகோர் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ராசஸர்  இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ப்ராசஸரைப் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது. LPDDR4X வகை ரேம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாகச் சிறந்த செயல்திறனைப் பெற முடியும்.  புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக AI வசதியையும் கொடுத்திருக்கிறது. 4000mAh பேட்டரி இருப்பதால் பேட்டரி பேக்அப்பும் சிறப்பானதாக இருக்கும். ஆனால் Type-C, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் கிடையாது. 4GB+64GB வேரியன்ட் விலை 13,999 ரூபாயாகவும், 6GB+64GB வேரியன்ட் விலை 16,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

Samsung Galaxy J7 Pro

Samsung Galaxy J7 Pro


இந்த செக்மன்டில் அதிக ஹிட்டடிக்கும் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இது. Galaxy J7  சீரீஸ் மிகப்பெரிய வரவேற்பைத் தரவே சாம்சங் தொடர்ச்சியாக இந்தப் பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. 5.5 இன்ச்  AMOLED டிஸ்ப்ளே, 3 ஜி பி ரேம்  13 MP கேமரா, 3600 mAh பேட்டரி இதில் இருக்கிறது. AMOLED டிஸ்ப்ளே இருப்பதால் சிறப்பான காட்சிகளைப் பெற முடியும், NFC வசதி இருப்பதால் கார்ட்லெஸ் பேமென்ட்களை எளிதாக மேற்கொள்ளலாம், ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டையும் பயன்படுத்தலாம்.  19,900 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 

Xiaomi Mi A1

Xiaomi Mi A1


"ஷியோமி ஹார்ட்வேர் கூட ஓகேதான், அதில் இருக்கும் MIUI தான் பாஸ் பிடிக்கல" என்பவர்களுக்கு Mi A1 சிறந்த தேர்வாக இருக்கும். மொபைலைத் தயாரிப்பது ஷியோமியாக இருந்தாலும், இதில் இருப்பது ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் என்பது ஸ்பெஷல். இருபதாயிரத்திற்குக் கீழே கிடைக்கும் சிறந்த டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.  5.5 இன்ச் IPS LCD 1080 x 1920  திரை, 3080 mAh பேட்டரி திறன், 2GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 625, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி போன்றவை இதன் வசதிகள். 13,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது 

Huawei Honor 9i

Huawei Honor 9i

 


டிஸ்ப்ளே, கேமரா, கட்டமைப்பு என ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்கிறது இந்த ஸ்மார்ட்போன். 5.9 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே, 16MP + 2MP பின்புற கேமரா மற்றும் 13MP + 2MP முன்புற கேமரா என இதில் இருப்பது மொத்தம் நான்கு கேமராக்கள். 3340 mAh பேட்டரி இருக்கிறது. ஆனால் Type-C இல்லாதது இதன் குறை.

Xiaomi Redmi Note 5

Xiaomi Redmi Note 5

ரெட்மி நோட் 4 ன் அப்டேட் வெர்ஷன்தான் இந்த ஸ்மார்ட்போன். டிஸ்ப்ளேவும், கேமராவும் மட்டுமே மாறுபட்டிருக்கிறது.  5.99 இன்ச்  18:9 2160 × 1080 டிஸ்ப்ளே, 4000mAh பேட்டரி இதன் மிகப்பெரிய பலம். நோட் 4-ல் இருந்த அதே ஸ்னாப்ட்ராகன் 625  ப்ராசஸர் அப்படியே இதில் இருக்கிறது. கேமராவும் சற்று மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 12 மெகாபிக்ஸல் பின்புற கேமரா இருக்கிறது. 5 மெகாபிக்ஸல் முன்புற கேமராவிற்கு ஃபிளாஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 7.1.2 நெளகட் இயங்குதளம் இதில் இருக்கிறது. 


 


டிரெண்டிங் @ விகடன்