இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் இப்படித்தானா?... மக்கள் நீதி மய்யத்தின் 'சிஸ்டமும்' சரியில்லை

பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் கட்சியில் தான் இணைந்துள்ளதாக இமெயில் வந்துள்ளதாகவும், தான் ஆன்லைனில் அப்படி பதியாத நிலையில், இது கமல் தன் கட்சியில் ஆள் சேர்க்க, கிடைத்த எல்லா மெயில் ஐடிக்களுக்கும் மெயில் அனுப்புவதை உறுதி செய்வதாகவும் கூறியிருந்தார். இதை மக்கள் நீதி மய்யம் மறுத்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், தங்கள் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இமெயில் அனுப்பப்படுவதாக தெளிவுபடுத்தி உள்ளனர்.

இந்த சர்ச்சை சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில், உண்மையில் இது சாத்தியமா என்று அறிய முற்பட்டோம்.https://www.maiam.com என்ற இணையதளம் மூலம் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்குறது. இதில் சென்று "எங்களுடன் இணையுங்கள்" என்ற பட்டனை அழுத்தினால், உறுப்பினராக சேர விரும்புபவரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், எந்த மாவட்டம், தொகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. 

மக்கள் நீதி மய்யம் கமல்

இவற்றை நாம் கொடுத்ததும், நாம் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு நான்கு இலக்க ஓ டி பி எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த எண்ணை கொடுத்ததும், அது சரியாக இருந்தால், நம்மை கட்சியில் இணைத்து, நமது உறுப்பினர் எண் தரப்படுகிறது. மொபைல் எண்ணில் ஓ டி பி வருவதும், அது சரிபார்க்கப்படுவதன் மூலமும், ஒரே ஆள் பல பெயர்களில் சேர்வதும், சாஃப்ட்வேர் ப்ரோக்ராம் எழுதி, அதன் மூலம் நூற்றுக்கணக்கணக்கான ஆட்களை கற்பனையாக சேர்ப்பதும் தவிர்க்கப்படுகிறது என்பது நல்ல விசயம்.

அதேநேரம், இதன் மூலம் வேறு ஒருவரை கட்சியில் நம்மால் இணைத்துவிட முடியுமா என்பதை சோதித்தோம். நன்கு அறிந்த நண்பர் ஒருவரது பெயர், இமெயில் முகவரி, எங்கு வசிக்கிறார் என்ற எல்லா விவரங்களும் நமக்குத் தெரியும். 

மக்கள் நீதி மய்யம்

மய்யம் இணைய தளத்திற்கு சென்று, "எங்களுடன் இணையுங்கள்" என்பதை அழுத்தி, உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கு சென்றோம். அங்கு, நம் நண்பரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதியாக எதோ ஒரு தேதி, அவரது மாவட்டம், தொகுதி இவற்றை சரியாக கொடுத்துவிட்டு, மொபைல் எண் மட்டும் நமது மொபைல் எண்ணை கொடுத்தோம். மற்ற அனைத்து தகவல்களும் நண்பருடையது, மொபைல் எண் மட்டும் நம்முடையது.

அடுத்த பக்கத்தில் ஓ டி பி கேட்டது, நம் மொபைலுக்கு வந்த ஓ டி பி எண்ணை கொடுத்ததும், நாம் எதிர்பாராதது நடந்தது . உறுப்பினர் சேர்க்கை வெற்றியடைந்தது என்ற செய்தியுடன், உறுப்பினர் எண்ணும் திரையில் காட்டப்பட்டது. அதாவது, அவருக்குத் தெரியாமலேயே இன்றிலிருந்து நம் நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்.

makkal needhi maiam

உறுப்பினர் எண் இருந்தாலும், அவரால் மய்யம் இணைய தளத்தில் சென்று தன் தகவல்களை சரி பார்க்க இயலாது. இந்த வசதி இருந்திருந்தால், எந்த மொபைல் எண்ணில் இருந்து உறுப்பினர் சேர்க்கை நடந்தது என்பதையாவது அவரால் கண்டுபிடிக்க இயலும். இப்போது யார் சேர்த்தது என்பதையும் அவரால் சுலபமாக கண்டுபிடிக்க இயலாது.

தமிழிசை அவர்களுக்கு இப்படி நடந்திருக்குமா என்பது தெரியவில்லை, ஆனால் இப்படி நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இந்த தவற்றை கமல் & மக்கள் நீதி மய்யம் சரி செய்யாவிடில், மொபைல் வைத்திருக்கும் யாரோ ஒருவர், வெகு விரைவில் மற்ற கட்சித்தலைவர்கள், சினிமாக் கலைஞர்கள், ஏன் பிரதமர், குடியரசுத் தலைவரையே கூட மக்கள் நீதி மய்யத்தில் இணைத்து விட இயலும். உண்மையில் ஒரு கட்சியில் ஆன்லைன் வசதி மூலம் ஒருவரை இணைத்ததும், அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வார்டு செயலாளர் அல்லது கிராம் கிளைச் செயலாளர் அதை உறுதி செய்ய வேண்டும். அதை எந்தக் கட்சியும் செய்வதில்லை. 

காங்கிரஸ்

Congress

மற்ற தளங்களில் எப்படி இருக்கிறது என மேய்ந்ததில் பல கட்சி இணையதளங்களும் இப்படித்தான் இயங்குகின்றன. காங்கிரஸ் தளத்தில் பதிவு செய்த போது, 1906 என பிறந்த வருடம் குறிப்பிட்டோம். சில நொடிகளில் உறுப்பினர் அட்டை கொடுத்துவிட்டார்கள். பாஜக தளத்தில் பதிவு செய்தால், ஈமெயில் இன்பாக்ஸ்க்கு வராமல், நேரடியாக SPAM தளத்திற்கு செல்கிறது. அதிலும் அதே நிலை தான்.

பாஜக

BJP

பாரம்பர்ய கட்சியானாலும் சரி, சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கமல் கட்சியானாலும் சரி எதிலும் சிஸ்டம் சரியில்லை.எல்லாமே இவ்விஷயத்தில் ஒன்று தான். எந்த மெனக்கெடலும் இல்லாமல் , ஆள் சேர்க்கிறது ரஜினியின் மக்கள் மன்றம். கட்சி இல்லை என்பதால் அமைதி காட்போம். 

ரஜினி

சரி, தேசிய அளவில் இருக்கும் கட்சிகள் தான் இந்த நிலை என்றால், திராவிடக் கட்சிகள் ஒருபடி மேல். திமுக இணையதளத்திலாவது பெயருக்கு ஒரு இடத்துக்கு செல்கிறது. அதிமுகவில் ரெஜிஸ்டர் செய்ய முற்பட்டால், FILE NOT FOUND தான்.  

திமுக

DMK

DMK 2

அதிமுக

ADMK

தொகுதிவாரியாக பிரித்து “இவர்கள் எல்லாம் எங்கள் கட்சி உறுப்பினர்கள்” என இதன் அடிப்படையிலே சொல்வார்கள் என்பதால் இது முக்கிய பிரச்னை ஆகிறது.  எனவே, அரசியல் கட்சிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!