முடங்கிய சேவை! - விளக்கம் அளித்த ஏர்டெல் நிறுவனம் #Airtel

இந்தியாவின் பல நகரங்களில் ஏர்டெல் சேவை பாதிப்படைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நாடு முழுவதும் ஏர்செல் சேவை முற்றிலும் பாதிப்படைந்திருந்தது. அதை அடுத்து, வாடிக்கையாளர்கள் அனைவரையும் தாங்களே வேறு சேவைக்கு மாறிக்கொள்ளும்படி ஏர்செல் நிர்வாகம் அறிவித்தது. அது இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், தற்போது ஏர்டெல் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல் மூலம்  இணையம் மட்டுமே இயங்குவதாகவும், கால் செய்வது மற்றும் கால்களைப் பெறுவதில் பிரச்னை இருப்பதாகவும்
கூறுகின்றனர். 4ஜி சேவை, 2ஜி சேவை போல மிகவும் மெதுவாக  உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏர்டெல் நிறுவனம், 'சிறிய தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது, தடங்கலுக்கு மிகவும் வருந்துகிறோம். தற்போது, சேவைகள் முற்றிலும் சீரமைக்கப்பட்டுவிட்டது. ஒருமுறை மொபைல் ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யுங்கள்' எனத் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!