கூகுள் மேப்பில் புதிய சார்ட்கட்ஸ் வசதி அறிமுகம்

இணையதள செயலியான கூகுள் மேப்பில் தற்போது புதிய சார்ட்கட்ஸ் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் மேப்

முன்னதாக மக்கள் வெளியில் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் அங்குள்ளவர்களிடம் வழி கேட்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இதற்கு அவசியமில்லாத வகையில் உருவானதுதான் கூகுள் மேப். தற்போதுள்ள கூகுள் மேப்பில் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பதிவிட்டால் மட்டுமே போதும் அந்தப் பகுதிகளை இணையம் மூலம் இந்தச் செயலி சரியாகக் காட்டிவிடும். இதனால் யாரிடமும் நின்று வழி கேட்டு நேரத்தை வீணடிக்காமல், செல்லவேண்டிய இடத்திற்குச் சரியாகச் செல்லமுடியும்.

இந்த கூகுள் மேப்பை தற்போதுள்ள வாகன ஓட்டிகள், புதிதாக ஓரிடத்திற்குச் செல்பவர்கள் எனப் பலர் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் ஃபோனில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியில் சார்ட்கட்ஸ் வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இதற்கு முன் 14 குயிக் ஆக்சன் இந்தச் செயலியில் உள்ளது. இதன்மூலம் மால்ஸ், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவற்றை எளிதில் அடையாளம் காணமுடியும்.

இதனை தொடர்ந்து தற்போது மேலும் சில அம்சங்கள் இந்தச் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஃபோன்களில் பீட்டா வெர்ஷனாக மட்டுமே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் பயனர்கள் தாங்களே எடிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர் விரும்பும் அல்லது அதிகம் பயன்படுத்தும் ஆப்ஷன்களை தாங்களே சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பயனர் பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றை தானாகவே காட்டும். முன்னதாக இருந்த வசதியிலிருந்து இது சற்று மேம்பட்டு இருக்கும். மேலும், நிறைய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தற்போதுள்ள வசதி விரைவில் அனைத்து ஃபோன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!