ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் Vs ஐடியா - ஆஃபர்களின் யுத்தம் | Reliance Jio, Bharti Airtel, Vodafone and Idea Cellular are currently involved in a data war.

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (22/03/2018)

ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் Vs ஐடியா - ஆஃபர்களின் யுத்தம்

ஜியோ, ஏர்டெல்,வோடஃபோன், ஐடியா ஆகிய அனைத்து மொபைல் நெட்வொர்க் சேவைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஃபர்களை
வெளியிட்டு வருகின்றனர்.

ஆஃபர்கள்

ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு
இடையே தற்போது வாடிக்கையாளர்களுக்கான ஆஃபர்களை வழங்கும் யுத்தம் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களைக்
கவர அனைத்து நெட்வொர்க்கும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்து வருகின்றனர். அவர்கள் வழங்கும்
ஆஃபர்களாக அன்லிமிடட் டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் டேட்டாகளின் காலவரையறை போன்ற சேவைகளை அள்ளி வழங்கி
வருகின்றனர். இதிலும் ஒரு நாளுக்கு 1GB-யில் தொடங்கி 5GB வரை வழங்கி வருகின்றனர் இதனால் மொபைல் ஃபோன்
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மொபைல் நெட்வொர்க்குகள் தரும் ஆஃபர்களை பார்க்கலாம்.

ஜியோ ரீசார்ஜ் ஆஃபர்கள்

ஜியோ அறிமுகப்படுத்தி சில காலங்கள் மட்டுமே ஆகிறது. இது அறிமுகப் படுத்தும்போது வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க
அனைவருக்கும் இலவச டேட்டா மற்றும் இலவச கால் வசதிகளை வழங்கியது. இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு பல வாடிக்கையாளர்கள் வந்தனர். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜியோவின் குரல் அழுத்தமாக ஒலித்தது. தற்போது இலவச சேவையிலிருந்து குறைந்த சேவை கட்டணத்தை வழங்கி வருகிறது. அது 4G வேகத்திலான சேவையை ஒரு நாளுக்கு 1.5 GB டேட்டா தருகிறது. இது விலைகளுக்கு ஏற்ப சேவைகளின் நாள்களைக் கூட்டியும் குறைத்தும் வழங்கி வருகிறது. மேலும் அனைத்துக் கால்கள் மற்றும் மெஸ்சேஜ்களை முற்றிலும் இலவசமாக வழகுங்கிறது ஜியோ.

ஏர்டெல் ரீசார்ஜ் ஆஃபர்கள்  

ஏர்டெல் நிறுவனம் ரூ. 399-க்கு 70GB வரையிலான டேட்டாவை 3ஜி மற்றும் 4ஜி வேக சேவைகளில் வழங்கிவருகிறது. இந்தச் சேவையை
70 நாள்களுக்கு வழங்குகிறது. இதில், அனைத்துக் கால்களும் இலவசம். ஒரு நாளுக்கு 100 மெஸ்சேஜ் இலவசம்.

வோடஃபோன் ரீசார்ஜ் ஆஃபர்கள் 

வோடஃபோன் நிறுவனமும் ஏர்டெலின் அதே சேவைகளை அப்படியே மாறாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

ஐடியா ரீசார்ஜ் ஆஃபர்கள்

சில காலங்களுக்கு முன் குறைந்த பணத்தில் அதிக ஆஃபர்களை ஐடியா நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால், ஜியோவின் வருகைக்கு
பின் ஐடியாவின் சேவை குறைந்துவிட்டது. தற்போது ரூ199-க்கு 28GB டேட்டாவை 3ஜி மற்றும் 4ஜி வேகத்திலான சேவையில் 28
நாள்களுக்கு வழங்கி வருகிறது.