வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (26/03/2018)

கடைசி தொடர்பு:08:54 (26/03/2018)

உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை Third party Apps-டமிருந்து பாதுகாப்பது எப்படி? #Facebook

ஃபேஸ்புக்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்னையைப் பற்றி தெரியாத ஆளே இல்லை என்னும் அளவுக்கு ஓவர் டைம் செய்திருக்கிறது வாட்ஸ் அப். தங்களின் புராடக்டே தங்கள் இமேஜை டேமேஜ் செய்யும் என மார்க் நினைத்திருக்க மாட்டார். ஆனால், பிரச்னையை முழுமையாக சொல்லாமல் பயத்தை மட்டுமே அதிகம் பரப்பியிருக்கிறது வாட்ஸ் அப். ‘இனி ஃபேஸ்புக் தொறந்த அவ்ளோதான்’ என டீன்களின் பெற்றோர்கள் மிரட்டும் கதைகளும் நடந்து வருகின்றன. 

தகவல்களைத் திருடும்(?) வேலையை கிட்டத்தட்ட அனைத்து சமூக வலைதளங்களும் செய்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால், சொல்லிவிட்டு எடுப்பதால் அவை திருட்டில் வராதென அவர்கள் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. அப்படியென்றால், நம்மிடம் சொல்லாமலும் நம்மைப் பற்றிய டேட்டா எடுக்கப்படுகின்றனவா என்றால் ஆம் என்றுதான் சொல்ல முடியும். கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்னையிலும் டேட்டாவை எடுக்க ஓர் ஆப் பயன்பட்டது. அதன் பெயர் “thisisyourdigitallife’. இதைப் போல ஏகப்பட்ட ஆப்களுக்கு நாம் பெர்மிஷன் தந்திருப்போம். அவற்றில் பல நம்மைப் பற்றிய அடிப்படை தகவல்களை மட்டுமே அணுகும். இன்னும் சில முழு அனுமதியையும் பெற்றிருக்கும். எந்த ஆப்க்கு அனுமதி தந்திருக்கிறோம், எவற்றை நீக்க வேண்டும் என்பதை இப்போது நாம் பரிசீலனை செய்தே ஆக வேண்டும். அதை எப்படி செய்வது என்பதைப் பற்றிய கட்டுரைதான் இது.

என்ன செய்ய வேண்டும்? 

எந்த எந்த ஆப்க்கு என்ன என்ன அனுமதி தந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பக்கத்துக்கு சென்று பார்க்கலாம். ஒரு சில ஆப்ஸ் உங்களுக்கு பரிச்சயமாக இருந்தாலும் பெரும்பாலானா ஆப்ஸ்க்கு எப்போது அனுமதி தந்தோம் என்ற நினைவே இல்லாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோமோ என்பது கூட தெரியாது. 

எதாவது ஒரு ஆப்-ஐ க்ளிக் செய்தால் அந்த ஆப்புடன் என்ன என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்ற தகவலைப் பார்க்கலாம். அதில் வேண்டாதவற்றை பகிர்வதை தடுத்து நிறுத்தலாம். அந்த ஆப்-ஐயே நீக்கினால் மட்டுமே நம்மைப் பற்றிய அடிப்படை தகவல்களை (Basic information) பகிர்வதை நிறுத்த முடியும். ஆனால், முழுமையாக நீக்கிவிட்டால் அதி தொடர்பான பக்கங்களுக்கு இனி செல்ல முடியாது. எனவே, எந்த ஆப் எங்கு பயன்படுகிறது என்பதை யோசித்து அதன் பின் முழுமையாக நீக்குங்கள்.

நம் ஃபேஸ்புக் கணக்குடன் இணைக்கபட்ட ஒரு ஆப்-ஐ முழுமையாக நீக்கிவிடலாம். ஆனால், அப்போதும் அந்த நொடி வரை அவர்கள் நம்மைப் பற்றி எடுத்த தகவல்கள் அவர்களிடம் இருக்கும். அதற்கு ஃபேஸ்புக் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்காலத்தில் அந்த ஆப் நம் டேட்டாவை எடுப்பதை மட்டுமே நம்மால் தவிர்க்க முடியும்.

ஃபேஸ்புக்

 பொதுவாக, எதாவது ஒரு தளத்தில் நாம் லாக் இன் செய்ய வேண்டுமென்றால் ஃபேஸ்புக் ஐடி மூலமே செய்கிறோம். இதனால், நம்மைப் பற்றிய சில தகவல்களை அவர்களால் எந்த சிக்கலும் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும். அவை:

முழுப்பெயர் (Full name)

நம் நண்பர்களின் பட்டியல் (Friends list)

முகப்புப் படம் (Profile picture)

புகைப்படங்கள் (Photos)

கல்வித் தகுதி (Education)

வேலை தொடர்பான தகவல்கள் (Work history)

புதிர்கள் மற்றும் பெர்சனாலிட்டி டெஸ்ட் எனப்படும் ஆப்ஸ் இன்னும் கூடுதலான தகவல்களை நம்மிடம் கேட்கும். நாமும் யோசிக்காமல் அவற்றுக்கு அனுமதி தந்துவிடுவோம். இனிமேல் இப்படி செய்யும்போது கொஞ்சம் கவனமாக அந்த ஆப் நமக்கு தேவையா, அது கேட்கும் தகவல்களை கொடுக்கலாமா என யோசித்து அதன் பின் கொடுக்கலாம்.

உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் கூட தெரியாத ரகசியங்களை ஃபேஸ்புக்கில் எங்கேயாவது பதிவு செய்திருப்பீர்கள். மனிதர்கள் மறக்கலாம். இணையம் மறக்காது. எனவே அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்