ஃபிளிப்கார்ட் பங்குகளை வாங்கும் அமேசான்?

இணையதள ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்டை வாங்க அமேசான் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

அமேசான்

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் மக்கள் அனைத்தையும் எளிதில் பெற நினைகிறார்கள், தாங்கள் இருக்கும் இடத்துக்குப் பொருள்கள் தேடி வரவேண்டும் என்ற மக்களின் கனவை நிஜமாக்க உருவாக்கப்பட்ட ஆன்லைன் இணையதளங்களாக ஃபிளிப்கார்ட், அமேசான், பேடிஎம், ஸ்னாப் டீல் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் இல்லாத பொருள்களே கிடையாது எந்தப் பொருளையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வாங்கிக்கொள்ளலாம் இதனால் இந்த இணையதளங்களை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்த ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவன தலைவர் முதலிடம் பிடித்தார். கடந்த இரண்டு வருடங்களாக  ஃபிளிப்கார்டின் பங்குகள் சற்று சரிய துவங்கியுள்ளன. அமேசான் நிறுவனதிற்கு சர்வதேச அளவில் சவாலாக விளங்குவது வால்மார்ட் நிறுவனம். இதனால் ஃபிளிப்காட்ர் மூலம் முதலீடு செய்து தனது பலத்தை அமேசானுக்கு எதிராக பெருக்க நினைகிறது வால்மார்ட்.  இதனால் ஃபிளிப்காட்டின் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம் அமேசான், ஃபிளிப்கார்ட்டை இரண்டாம் நபர்களிடம் இருந்து விலைக்கு வாங்க அமேசானும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதனால் வால்மார்ட் நிறுவனதுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஃபிளிப்கார்ட் பங்குகளை வாங்குவது தொடர்பாக அமேசான் நிறுவனமும், வால்மார்ட் நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!