Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்!

ஃபேஸ்புக்

சமூக வலைதளங்கள் ஒரு சாம்ராஜ்யம் என்றால் அதற்கு ராஜா இப்போதைய சூழலில் ஃபேஸ்புக்தான். ஒரு மனிதனோட எல்லாவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஊடகமாக தன்னுடைய 14-வது வருடப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். ஒரு பையனோ பொண்ணோ வளரும்போது "இந்த டீன் ஏஜ் வந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும், பிரச்னைகளை எதிர்கொள்ள கத்துக்கணும், சமூகத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்ற விஷயங்களைப் பேச ஆரம்பிப்பார்கள். டீன் ஏஜுக்குள் நுழைந்துள்ள ஃபேஸ்புக்கும் இதனைப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தனி ஒருவனாக களத்தில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஃபேஸ்புக்குக்கு இது சோதனை காலம்.

ஆரம்பத்தில் நண்பனின் ஐடியாவை திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டை சட்ட ரீதியாக வென்று ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்குகிறார் மார்க் சக்கர்பெர்க். ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இன்று உலகை இணைக்கும் முயற்சியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இன்னமும் "ஃபேஸ்புக்கா அப்படின்னா என்ன.." என்று கேள்வி கேட்கும் தலைமுறையையும் இந்த உலகத்துக்குள் கொண்டு வர மார்க் போடும் திட்டங்கள் எல்லாம் ஜேம்ஸ் பாண்ட் ரகம். 

இப்போது மெகா பூதம் ஒன்று நம் கண்முண்ணே வந்து நிற்கிறது. பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கற ஃப்ரெண்டு பத்து நிமிஷம் டீ குடிக்கப் போனாலே அவரோட ஃபேஸ்புக்ல ஜாலி ஸ்டேட்டஸ் தட்டும் தலைமுறை இது. 10 நிமிஷத்துல உங்களோட ஒட்டுமொத்த ஃபேஸ்புக் டேட்டாவையும் யாரோ ஒருவரால் எடுக்க முடியும் என்றால் எவ்வளவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்? ஷாக் குறையாமல் கேளுங்கள். இதில் நீங்கள் அனுப்பிய இன்பாக்ஸ் மெஸேஜ்களும் அடங்கும். 

நீங்கள் உங்கள் காதலிக்கு அனுப்பிய ஹார்ட்டின் எமோஜிக்கள் முதல் ப்ரப்போஸ், கோலின்னு ஒரு புது ப்ளேயர் செமயா அடிக்குறான்ப்பா அப்படினு தட்டின ஸ்டேட்டஸ், டிமானிடைஷேசன் அப்போ ஏடிஎம்ல வரிசைல நின்னது. நெடுவாசல் பிரச்னைக்கு குரல் கொடுத்தது என அனைத்து ஸ்டேட்டஸ்களும், நீங்கள் ''ஒன்லி மீ'' ப்ரைவஸியில் வைத்திருக்கும் உங்களது யாருக்கும் பகிராத புகைப்படமும் இன்னொருவர் கைக்குச் செல்ல அதிகபட்சம் 30 நிமிடங்கள் போதும். 

"நான் ஃபேஸ்புக்குக்கு வந்து 14 வருஷம் ஆச்சு. இவ்வளவு ஸ்டேட்டஸ், மெஸேஜ், போட்டோ எல்லாத்தையும் எப்படி 30 நிமிஷத்துல டவுன்லோட் பண்ண முடியுமா?" என்றால், முடியும். ஃபேஸ்புக் நிறுவனம் உங்களோட மொத்த டேட்டாவையும் ஒரே க்ளிக்ல டவுன்லோட் பண்ணுற ஆப்ஷன கொடுத்துருக்கு. இதுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அடிப்படை தேவை ஒரு லாக் இன் ஆன ஃபேஸ்புக் ஐடிதான். நிறையா இடங்கள்ல நாம ஃபேஸ்புக் பயன்படுத்துறோம். அவசரத்துக்கு ப்ரொஃபைல் செக் பண்ண ப்ரெண்ட்ஸ் மொபைல், ப்ரெளசிங் சென்டர், ஆபீஸ் கம்ப்யூட்டர் இது எல்லாத்துலயும். ஹைலைட்டா சில மால்கள், சினிமா திரையரங்குகள்ல வைச்சிருக்குற கம்ப்யூட்டர்லயே ஃபேஸ்புக் பாக்குற சிலரையும் நாம பார்த்திருப்போம். 

நீங்கள்லாம் லாக் அவுட் பண்ண மறந்துட்டாலோ இல்ல உங்களோட பாஸ்வேர்டு யாருக்காவது தெரிஞ்சுட்டாலோ மொத்த டேட்டாவும் அவங்ககிட்ட போய்டும்ங்றதுல மாற்றுக்கருத்தே இல்லை. அப்படி டவுன்லோட் செய்த ஃபைலில் என்னவெல்லாம் இருக்கும் என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிக்கிறது ஃபேஸ்புக். இதில் க்ரேடிட் கார்டு தகவல் துவங்கி ஐபி அட்ரஸ், ஃபேஸ்புக் பேஜ் தகவல் என 70 தகவல்களை ஒற்றை க்ளிக்கில் தந்துவிடுகிறது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் தரும் தகவல்கள் விவரம் இதோ...

ஃபேஸ்புக்

இந்த டேட்டாவை டவுன்லோட் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் செட்டிங்கில் ''Download Facebook Copy'' என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால் உங்களது டேட்டா மொத்தமும் காப்பி எடுக்க துவங்கிவிடும். அதன் பின் உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வரும் அதை மொபைலில் வை-பை மூலமாகவோ அல்லது கணினியில் அதிவேக இணைய சேவை மூலமாகவோ டவுன்லோட் செய்ய முடியும். அவ்வளவுதான் ஒரே ஃபைலில் ஒட்டுமொத்த டேட்டாவும் கொட்டிவிடும்.

Step 1

தகவல்கள்

Step 2

தகவல்கள்

Step 3

தகவல்கள்

 

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Settings -> Security and Log in -> where you're logged in பகுதியில் எந்த சிஸ்டத்தில் எல்லாம் நீங்கள் லாக் இன் செய்துள்ளீர்கள் என்ற விஷயம் இருக்கும். அதை செக் செய்து, உங்கள் கணினி, மொபைல் தவிர அனைத்தையும் லாக் அவுட் செய்து வையுங்கள். 

two-factor authentication முறையில் உங்கள் மொபைல் நம்பரை இணைத்து வையுங்கள். அப்படிச் செய்தால் ஒவ்வொருமுறை லாக் இன் செய்யும் போதும் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும். அதன்பின் லாக் இன் செய்து பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் தீர்வு என்று முழுமையாக கூறமுடியாது. இவற்றின் மூலம் ஓரளவுக்கு உங்கள் தகவல்கள் வெளியாகாமல் தடுக்க முடியும். 

ஃபேஸ்புக்கில் பதிவிடும் விஷயங்கள் எல்லாம் பொதுவானவைதான். பர்சனலாக ஏதுமில்லை. பெரிதாக பிரச்னை ஏற்படுத்தக்கூடிய தனிநபர் உரையாடல்களும் இல்லை என்பவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், மேலே உள்ளவற்றில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். 

அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக் செய்தது என்ன?

சரி, இந்த தகவல்களுக்கும், அமெரிக்க அதிபர் தேர்தலில் 8 கோடி பேரின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியது என்பதற்கும் என்ன தொடர்பு?

இந்தத் தகவல்களை சைக்கோகிராஃபிக் ப்ரோஃபைல்களாக பிரிக்க முடியும். அதாவது நீங்கள் விரும்பும் விஷயம், உங்களது ப்ராண்டுகள் என்ன, நீங்கள் எந்த மாதிரியான நபர், அதிகமாக என்ன மனநிலையில் இருப்பவர் என்ற தகவல்களையெல்லாம் பெற முடியும். இதைத்தான் ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. இந்த விவரங்களையும் நீங்கள் மற்றவர்களுக்கு வழங்காமல் தடுக்கமுடியும். 

விளம்பரம்

Settings -> Ads பகுதிக்குச் சென்று Your information பகுதியில் நீங்கள் எந்த விஷயங்களை விளம்பரதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பதை நிர்ணயிக்கமுடியும். அதேபோல உங்கள் விருப்பங்களையும் மாற்றியமைக்கமுடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement