வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (02/05/2018)

கடைசி தொடர்பு:17:55 (02/05/2018)

குரூப் சாட் போல் இனி குரூப் வீடியோ கால் - வாட்ஸ்அப்பின் புதிய ப்ளான்

இனி வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ கால் பேசலாம் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 

வாட்ஸ் ஆப்

தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள வீடியோ கால் ஆப்சனை ஒரு நாளுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அதில் உள்ள குரூப் சாட் போன்றே குரூப் வீடியோ கால் வசதியையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில் அந்நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப் 8 கான்ஃபரன்ஸ் நேற்று கலிஃபோர்னியாவின், சான் ஜோஸ் நகரில் நடைபெற்றது. அதில் பேசிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சிறப்பு அம்சங்கள் அறிமுக செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ கால் மற்றும் ஸ்டிக்கர்ஸ் வசதி அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறினார். இந்தக் குரூப் வீடியோ கால் மூலம் ஒரே நேரத்தில் நான்கு நபர்களுடன் பேச முடியும். தற்போது இருப்பதுபோலவே, முதலில் ஒருவருக்குக் கால் செய்து, அதில் தெரியும் கேமரா பட்டனை அழுத்தி அடுத்த நபரை அழைக்கலாம் இவ்வாறு நான்கு பேருக்குப் பேச முடியும். இந்த வசதி விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இன்ஸ்டோகிராமிலும் வீடியோ கால் வசதி அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த கான்ஃபரன்ஸில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பற்றியும் மார்க் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.