”விட்ட இடத்தை பிடிக்கிறண்டா..!” - இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் 4 மொபைல்களைக் களமிறக்கும் சாம்சங் | Samsung launches four new smartphones with Infinity display

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (22/05/2018)

கடைசி தொடர்பு:14:01 (22/05/2018)

”விட்ட இடத்தை பிடிக்கிறண்டா..!” - இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் 4 மொபைல்களைக் களமிறக்கும் சாம்சங்

”விட்ட இடத்தை பிடிக்கிறண்டா..!” - இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் 4 மொபைல்களைக் களமிறக்கும் சாம்சங்

ஆண்ட்ராய்டின் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்தே மொபைல் சந்தை சாம்சங்கின் கையில்தான். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இது பொருந்தும். ஆனால், சமீபகாலமாக சாம்சங்கிற்கு கடும் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறது ஷியோமி. தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் விற்பனையில் முதலிடம் பிடித்திருப்பது ஷியோமிதான். நீண்ட காலமாக கைப்பற்றி வைத்திருந்த முதலிடத்தைக் கடந்த வருடம் முதல் ஷியோமி கைப்பற்றியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க உலக சந்தையை எடுத்துக்கொண்டால் அங்கும் சாம்சங் வாவே(Huwaei) போன்ற போட்டியாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

சாம்சங்

ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களில் வசதிகளை உடனுக்குடன் அப்டேட் செய்யும் சாம்சங், மிட்ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் மொபைல்களை கவனிக்காமல் விட்டு விடும். அதன் காரணமாகக் கிடைத்த இடத்தைதான் மற்ற சீன நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அதைச் சற்று தாமதமாகவே புரிந்துகொண்ட சாம்சங் தற்சமயம் அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதற்காக ஹை எண்ட் ஸ்மார்ட்போன்களில் இருக்கக்கூடிய வசதிகளை பட்ஜெட் மொபைல்களிலும் தருவதற்கு முயற்சி செய்கிறது. இந்நிலையில், ஒரே நேரத்தில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

கேலக்ஸி  J சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

மிட்ரேன்ஜ் செக்மென்டில் சாம்சங்கின் பெயரை காப்பாற்றுவது கேலக்ஸி J சீரிஸ்தான். ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வசதியை மற்ற செக்மென்டில் இருக்கும் மொபைல்களுக்கும் கொண்டுவர நினைத்த சாம்சங் முதலில் டிஸ்ப்ளேவில்தான் மாற்றத்தைக் கொண்டு வந்தது. சமீபத்தில் வெளியான கேலக்ஸி J சீரிஸ் மற்றும்  A சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் sAMOLED (super amoled) டிஸ்ப்ளேவை பயன்படுத்தியது. அதே டிஸ்ப்ளேவில் இருந்த இன்பினிட்டி டிஸ்ப்ளேவை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கும் 4 ஸ்மார்ட்போன்களில் கொடுத்திருக்கிறது.

Galaxy J6

Galaxy J6

5.6 இன்ச் sAMOLED இன்பினிட்டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் பின்புறமாக ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 13 MP பின்புற கேமராவும்  8 MP முன்புற கேமராவும் உண்டு. ஒளி குறைவான இடங்களில் செல்பி எடுக்க உதவும் வகையில் முன்புறத்திலும் ஃபிளாஷ் உண்டு. ஃபேஸ் அன்லாக் வசதியும் இருக்கிறது. Exynos7 சீரிஸ் ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3000mAhபேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3/32 GB மற்றும் 4/64 GB என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் இதன் விலை  13,990 மற்றும் 16,490 ரூபாய்.

Galaxy J8

Galaxy J8

டூயல் கேமராவும், இன்பினிட்டி டிஸ்ப்ளேவும் இதன் சிறப்பம்சங்கள். 6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். 16 MP+5MP டூயல் பின்புற கேமராவும் 16 MP முன்புற கேமராவும் இருக்கிறது. Snapdragon 450  ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது 3500mAh பேட்டரி இருக்கிறது. 4 GB ரேம் மற்றும் 64 இன்டெர்னல் மெமரியைக் கொண்ட இதன் விலை 18,990 ரூபாய்.

கேலக்ஸி  A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

கேலக்ஸி J6, J8 ஸ்மார்ட்போன்களைப் போன்றே வசதிகளைக் கொண்டிருந்தாலும் இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் முக்கியமான வித்தியாசம் அதன் வடிவமைப்பு. முந்தைய ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே பாலிகார்பனேட்டை பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், இந்த  கேலக்ஸி  A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மெட்டலால் கட்டமைக்கப்பட்டவை. எனவே, இதன் விலை சற்று அதே  அதிகம். அதே போல பார்ப்பதற்கு அழகாகவும் தோற்றமளிக்கும்.

Galaxy A6

Galaxy A6

5.6 இன்ச் sAMOLED இன்பினிட்டி டிஸ்ப்ளேவும் 16 MP பின்புற கேமராவும் 16 MP முன்புற கேமராவும் இதில் இருக்கிறது.  Exynos 7 சீரிஸ் ப்ராஸசர் மற்றும் 3000 mAhபேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3/32 GB மற்றும் 4/64 GB என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் இதன் விலை  21,990  மற்றும் 22,990 ரூபாய்.

Galaxy A6+

Galaxy A6+


6 இன்ச் இன்பினிட்டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். 16 MP+5MP டூயல் பின்புற கேமராவும் 24 MP முன்புற கேமராவும் இருக்கிறது.  Snapdragon 450 ப்ராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது 3500  mAh பேட்டரி இருக்கிறது. இதன் விலை 25,990 ரூபாய்.மிட்ரேன்ஜ் சந்தையைக் குறிவைத்து சாம்சங் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் அது இழந்த இடத்தை மீண்டும் அடைய உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்