வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (01/06/2018)

கடைசி தொடர்பு:09:26 (01/06/2018)

1000 ரூபாய்க்குக் கீழே எந்த இயர்போன் வாங்கலாம்..! #BuyingTips

1000 ரூபாய்க்குக் கீழே எந்த இயர்போன் வாங்கலாம்..! #BuyingTips

நம்மில் பலரும் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது மொபைலோடு சேர்த்து மறக்காமல் எடுத்துச் செல்வது இயர்போன்களைத்தான். மொபைல் ஆக்ஸசரீஸ்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இவையாகத்தான் இருக்கும். வீடோ, வெளியே டிராஃபிக்கோ காதுக்குள் இசை மழையைப் பொழிய காத்திருக்கின்றன இயர்போன்கள். நூறு ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை இயர்போன்கள் சந்தையில் இருக்கின்றன. அவற்றில் ஆயிரம் ரூபாய்க்குக் கீழே கிடைக்கும் சிறந்த இயர்போன்கள் எவை?

Mi Earphones Basic with Mic

Mi Earphones Basic with Mic

ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்ல இயர்போனிலும் கூட ஷியோமி கில்லிதான். 500 ரூபாய்க்குக் குறைவான விலையில் நல்ல இயர்போனை வாங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். விலை குறைவுதானே என்று டிசைனிலும், தரத்திலும் கை வைக்காமல் இதை வடிவமைத்திருக்கிறது ஷியோமி. மெட்டல் வடிவமைப்பில் போன் பேசுவதற்கான மைக்கையும் கொண்டிருக்கிறது இந்த இயர்போன். சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும்.

விலை- 399

இதை வாங்குவதற்கு

https://amzn.to/2LKcc4U

 

Sennheiser MX 170

Sennheiser MX 170 இயர்போன்

in ear வகை இயர்போன்களை சிலர் விரும்ப மாட்டார்கள் அவர்களுக்கு இந்த இந்த இயர்போன் சிறந்த தேர்வாக இருக்கும். நீண்ட நேரம் பயன்படுத்த ஏதுவாக இதன் வடிவமைப்பு அமைந்திருக்கிறது.

விலை-647

இதை வாங்குவதற்கு

https://amzn.to/2xtDOZd

 

Audio-Technica ATH-CLR100BK

Audio-Technica ATH-CLR100BK

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே ஆடியோ குவாலிட்டியில் சிறந்தவை என்பதால் இதனைத் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். இந்த இயர்போனும் சிறந்த ஆடியோவைத் தருகிறது. ஆனால், இதன் மெட்டீரியல் குவாலிட்டி குறைவு என்பதால் அதிக பட்சம் ஒரு வருடம் வரை தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் பரவாயில்லை என்பவர்கள் சிறந்த இசையைப் பெற இதைத் தேர்வு செய்யலாம். கறுப்பு, வெள்ளை உட்பட மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. இதில் மைக் கிடையாது

விலை-679

இதை வாங்குவதற்கு

https://amzn.to/2LMufrm

 

Sennheiser CX 180

Sennheiser CX 180

 

பேஸ்(Bass) அதிகமாக விரும்புபவர்களுக்கு ஏற்ற இயர்போன் இது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் நீண்ட நேரம் கேட்பதற்கு ஏற்றதாக இருக்கும். மைக் தேவையில்லை; மியூசிக் மட்டும் போதும் என்பவர்களுக்கு இது சரியான தேர்வு.

விலை- 760

இதை வாங்குவதற்கு

https://amzn.to/2LHIVYC

 

JBL C100SI

 

JBL C100SI

ஜேபிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே ஆடியோ குவாலிடிக்குப் பிரபலமானவை. இந்த இயர்போனும் சிறந்த இசையைத் தருகிறது. 9mm driver இருப்பதால் சிறந்த பேஸை பெற முடியும். மைக்கும் இருப்பதால் போன் பேசுவதற்கு உதவியாக இருக்கும்.

விலை-699

இதை வாங்குவதற்கு

https://amzn.to/2IVtNsW

 

Mi Earphones with Mic

 

Mi Earphones with Mic

இறுதியாக அனைத்து விதத்திலும் அசத்துவது ஷியோமியின் இந்த இயர்போன்தான். அண்மையில்தான் புதிதாக அறிமுகமானது. வழக்கமான MI இயர்போன்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ரூபாய்க்குக் கீழே மற்ற நிறுவனங்களின் இயர்போன்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த இயர்போன் மெட்டல் வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எனவே, பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறது. மைக் மட்டுமல்லாமல் ஒலியைக் கூட்டுவதற்காகவும், குறைப்பதற்கும் உதவக்கூடிய வகையில் கன்ட்ரோல்கள் இதில் இருக்கின்றன. எனவே, பாடல்களைக் கேட்கும் போது ஒலியைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு முறையும் மொபைலை தேடத் தேவையிருக்காது. இந்த விலையில் இந்த வசதியுடன் இருக்கும் மாடல்கள் குறைவுதான் என்பதால்  தாராளமாக இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

விலை-699

இதை வாங்குவதற்கு

https://amzn.to/2J6BVTp

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்