யாஷிகா, மும்தாஜ், மமதி... இவர்களின் `மோஸ்ட் வாண்டட்' தகவல் என்ன? #BiggBossTamil2

கேரவனில் ``கமல் சார்''னு எழுதியிருந்ததுல ஆரம்பிச்சு யாஷிகா ஆனந்த் தமிழ் தெரியாம ``ஆண் Means''னு கேட்ட வரைக்கும் எல்லாமே பிக்பாஸ் 2வில் வைரல்தான்.

யாஷிகா, மும்தாஜ், மமதி... இவர்களின் `மோஸ்ட் வாண்டட்' தகவல் என்ன? #BiggBossTamil2

பிக்பாஸ் சீசன் 2. கமல் வந்து இறங்கிப் பேச ஆரம்பித்த கேரவனில் ``கமல் சார்''னு எழுதியிருந்ததுல ஆரம்பிச்சு யாஷிகா ஆனந்த் தமிழ்த் தெரியாம ''ஆண் Means''னு கேட்ட வரைக்கும் எல்லாமே வைரல்தான். முதல்நாளே எக்கச்சக்க வைரல், சர்ச்சையான கமென்ட்ஸ், ஜெய் ஶ்ரீராம் டயலாக்னு தெறிக்கவிட்ட பிக்பாஸ் தமிழ் 2 பற்றி கூகுள்ல என்னவெல்லாம் தேடியிருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ்

நம்ம ஆளுங்களோட முதல் சந்தேகம் பிக்பாஸ் எப்படி பார்க்கணுங்கறதுதான். வீட்டுல இல்லாம வெளியில இருக்குற பிக்பாஸ் ஆர்மி எல்லாரும் மொபைல்ல எந்த வெப்சைட்ல பாக்கலாம்னு சல்லடையா சலிச்சுத் தேடியிருக்காங்க. 

கமல் ஒவ்வொருவரா அறிமுகம் செய்ய செய்ய அவங்கள பத்தி நெட்டிசன்களின் தேடலும் அதிகமாச்சு. யாஷிகா ஆனந்த்தான் முதல் போட்டியாளர். வயது குறைந்த போட்டியாளர் இவர்தான்னு கமல் சொல்லி முடிக்கறதுக்குள்ள கூகுள்ல `` yashika ananad age'' தேட ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்த நொடியே 18 வயசுனு சொன்னாலும். மாசம், தேதினு ஜாதகத்தையே தேடி கூகுள திணறடிச்சுட்டாங்க.

அடுத்து வந்த பொன்னம்பலம்தான் மீம் மெட்டீரியல். யார் என்ன பண்ணாலும் ``ஜெய் ஶ்ரீராம்'' டயலாக்க சொல்லிகிட்டே இருந்தாரு. அடுத்த செகண்டே சமூக வலைதளங்களில் ஜெய் ஸ்ரீராம் மீம்கள் வைரலாகின. `அவன் இவன்' ஜனனிதான் ஒரு இன்ஜினீயர் டேர்னுடு ஆக்ட்ரஸ்னு சொல்ல... அட ஏம்மா நீ வேற எல்லா இன்ஜினீயருமே டேர்னுடு ஏதோ ஒண்ணுதான்னு விஐபி- க்கள் மீம் தட்டினர்.

கூகுள் தேடலில் சுவாரஸ்யமான விஷயங்களை நெட்டிசன்கள் தேடியுள்ளனர். யாஷிகாவுக்கு வயது, மும்தாஜுக்கு அவரது கணவர் பெயர், ஆர்ஜே வைஷ்ணவிக்குச் 'சாவி' பத்திரிகையின் ஆசிரியர் பெயர் என ஆளுக்கு ஒரு விஷயம்... மமதி சாரி தனது முன்னாள் கணவர் குறித்து மேடையில் பேசினார். அவரது பெயர் என்ன என கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். 

உமா ரியாஸின் மகன் ஷாரிக் ஹாசனின் பெயரைத் தேடும் போது உமா ரியாஸின் அம்மா கமலா காமேஷின் பெயரையும் தேடியுள்ளனர். டேனியல் ஆனி போப், பாலாஜி, சென்றாயன் எனத் தேடல்களில் 15 போட்டியாளர்கள் பேரும் இடம் பெற்றது. அனந்த் வைத்தியநாதன் பாடல்கள் என்றெல்லாம் கூகுளில் தேடியுள்ளனர். கூகுள் தேடலில் இந்த சீசன் பங்கேற்பாளர்களில் அதிகம் தேடப்பட்டவர் மமதி சாரி தான். புகைப்படத் தேடலிலும் இவருக்கே முதலிடம் கிடைத்துள்ளது.  

சென்றமுறை ஓவியா ஆர்மி, ரைசா நேவி என்று இருந்ததற்கெல்லாம் இந்த முறை யாஷிகா பாசறை, மும்தாஜ் மிலிட்டரி டஃப் கொடுக்கும் என்று சமூக வலைதளங்களில் மீம்கள் வெளியாகின்றன. பிக்பாஸ் நடக்கும் 100 நாள்களிலும் கூகுளில் இதோ போல ட்ரெண்டிங்கான பல விஷயங்களுக்குப் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம். 

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் சுவாரஸ்ய அலசல்… #BiggBossTamil  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!