வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (20/06/2018)

கடைசி தொடர்பு:22:21 (20/06/2018)

டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா?

இந்தியாவில், 25 சதவிகிதம் இளைஞர்கள் மட்டுமே இணையம் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா

பி.இ.டபில்யூ (PEW) என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் மட்டும் இந்தியாவில் உள்ள மொத்த இளைஞர்களில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே இணையம் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 78 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் போன் இல்லை என்றும், 80 சதவிகிதம் பேருக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என்றால் என்ன என்றே தெரியாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில், நான்கு பேரில் ஒருவர் மட்டுமே இணையம் பயன்படுத்துகிறார். கடந்த 2013-ம் ஆண்டு, சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதமாக இருந்தது, ஆனால் 2017-ம் ஆண்டு, அது 22 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இணையம் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. 

சர்வதேச அளவில் 10-ல் 4 பேர் மட்டுமே இணையம் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இணையத்தைப் பற்றிய அடிப்படையே தெரியாது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 நாடுகளில் நடந்த இந்த ஆய்வில், தென்கொரியா முதல் இடத்திலும், ஆப்பிரிக்கா கடைசி இடத்திலும் உள்ளது.தென்கொரியாவில் மட்டும் 96 சதவிகிதம் இளைஞர்கள் இணையம் படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.