512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ? #FindX | oppo launches a new smartphone FindX

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (22/06/2018)

கடைசி தொடர்பு:10:16 (22/06/2018)

512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ? #FindX

512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ? #FindX

சீன மொபைல் நிறுவனங்கள் என்றாலே மற்றவர்களின் தொழில்நுட்பங்களைக் காப்பி அடிப்பவை என்ற எண்ணம் கூடிய விரைவில் மாறலாம். ஸ்மார்ட்போன்களில் புதிய வசதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களின் பார்வை சாம்சங், ஆப்பிள் போன்றவற்றிடம் இருந்து சீன நிறுவனங்களின் பக்கமாக திரும்பியிருக்கிறது. அந்தக் கருத்தை நிரூபிக்கும் வகையில் ஓப்போ நிறுவனம் Find X என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் நாட்ச் இல்லை என்பது இதன் சிறப்பம்சம்.

ஓப்போ

பின்தங்கிய முன்னணி நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் லெனோவோ நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. z5 என்ற ஸ்மார்ட்போனின் முன்பக்கம் முழுவதுமே டிஸ்ப்ளே இருக்கும் என்ற ரீதியில் லெனோவோ விளம்பரப்படுத்தியதால் அதற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், அந்த மொபைல் அறிமுகமாகும்போது வழக்கமான நாட்ச் முன்பக்கத்தில் இருந்தது பலரையும் ஏமாற்றமடையச் செய்தது.

Oppo Find X


லெனோவோ மட்டுமல்ல மற்ற முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்றவற்றால் கூட இதுபோல முழுமையான டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வடிவமைக்க முடியவில்லை. இந்த இடைவெளியை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சீன நிறுவனங்கள்  under glass fingerprint scanner, நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே என புதிய வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி அசத்தி வருகின்றன.

உண்மையான ஃபுல் வியூ டிஸ்ப்ளே இதுதான் -  Oppo Find X

Oppo Find X

 

விவோ நிறுவனம் சில நாள்களுக்கு முன்னர்தான் நாட்ச் இல்லாத  Nex என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கடுத்த சில நாள்களிலேயே ஓப்போவும் அதைப் போலவே ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்க, சொன்னபடியே இப்போது வெளியாகியிருக்கிறது  Oppo Find X. இதன் முக்கிய அம்சமே டிஸ்ப்ளேதான்,  மொபைலின் முன்பக்கம் முழுவதுமே ஆக்கிரமித்திருக்கிறது. அப்ப ஃபிரன்ட் கேமராவ எங்கய்யா என்று சந்தேகப்படுபவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் கேமரா டிஸ்ப்ளேவுக்கு பின்புறமாக மறைந்திருக்குமாறு வடிவமைத்திருக்கிறது ஓப்போ.

Oppo Find X கேமரா

டிஸ்ப்ளேவுக்கும், பின்புற பகுதிக்கும் இடையே இருக்கும் இடத்தை மாற்றியமைத்திருக்கிறது. முன்புற கேமராவும் பின்புற கேமராவும் அமைந்திருக்கும் நடுப்பகுதி மேலும், கீழுமாக நகரக்கூடியது. கேமரா தேவையென்றால் மறைந்திருக்கும் பகுதி அரை நொடியில் மேலே வரும். தேவை முடிந்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடும். பல வருடங்களுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த ஸ்லைடு மொபைல்களை இந்த அமைப்பு ஞாபகப்படுத்தினாலும் இது இயங்கும் முறை முற்றிலும் வேறுபட்டது.  மொபைலில் இருக்கும் ஓர் சிறிய அமைப்பு இதை நகர்த்துகிறது. 

Oppo Find X

                                                                                                   Oppo Find X - Specifications

 

                                                                DISPLAY-                            6.42" (1080 x 2340 ) AMOLED
                                                                CAMERA
                                                                                                            FRONT-25 MP
                                                                                                            BACK- 16 MP + 16 MP


                                                               Processor-                           Qualcomm SDM845 Snapdragon 845
                                                               RAM-                                   8 GB RAM
                                                               INTERNAL MEMORY-         256 GB
                                                               BATTERY-                           3730 mAh 
                                                               OS-                                      Android 8.1

இதில் பிங்கர்பிரின்ட் ஸ்கேனர் கிடையாது. அதற்குப் பதிலாக பேஸ் அன்லாக் இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஐபோன்- X ல் இருக்கும் தொழில்நுட்பத்தைப் போலவே செயல்படும். 256  GB இன்டெர்னல் மெமரியும், 8 GB ரேமும் இதன் செயல்திறனுக்கு உதவும். பின்புறமாக 16 MP டூயல் கேமராக்களும் முன்புறமாக 25  MP கேமராவும் இதில் இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி 3730  mAh பேட்டரியையும்  அதிவேகமான பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொடுத்திருக்கிறது ஓப்போ.

லேம்போர்கினி Find X

இதுதவிர இதன் ஸ்பெஷல் எடிஷன் வேரியன்டுக்காக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான லேம்போர்கினியும் ஓப்போவுடன் இணைந்திருக்கிறது. இதன் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் மூலமாக பேட்டரியை வெறும் 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் இன்டெர்னல் மெமரியின் அளவும் சாதாரண வேரியன்ட்டை விட அதிகம்.  Find X லேம்போர்கினி வேரியன்டின் இன்டெர்னல் மெமரியின் அளவு 512 GB. OPPO Find X ஸ்மார்ட்போனின் விலை 78,000 ரூபாயாகவும், லேம்போர்கினி எடிஷன்  இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்