``வாட்ஸ்அப், ஃபேஸ்புக்லாம் தள்ளிப்போய் விளையாடுங்கப்பா!" - கூகுளின் மாஸ்டர்ஸ்ட்ரோக் #Neighbourly | Google going to introduce soon its new app Neighbourly

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (29/06/2018)

கடைசி தொடர்பு:13:53 (29/06/2018)

``வாட்ஸ்அப், ஃபேஸ்புக்லாம் தள்ளிப்போய் விளையாடுங்கப்பா!" - கூகுளின் மாஸ்டர்ஸ்ட்ரோக் #Neighbourly

மக்கள் ஏதோஒரு வகையில்சமூகத்துடன் இணைந்திருக்க விரும்புகிறார்கள். ஃபேஸ்புக் தொடங்கி இன்றைய மியூசிக்லீ வரைஅதுதான்பொதுவானதாக இருக்கிறது. கூகுளின் நெய்பர்லியும் அதைத்தான் நம்புகிறது.

``வாட்ஸ்அப், ஃபேஸ்புக்லாம் தள்ளிப்போய் விளையாடுங்கப்பா!

கடந்த சில நாள்களுக்கு முன்னால் மும்பையில் நடந்த சம்பவம் இது. புறநகர் ரயிலில் ஒருவர் விபத்தில் காயமடைந்திருக்கிறார் ரத்தம் வெளியேறிக்கொண்டிருக்க பயணிகள் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் உடனே ஸ்மார்ட்போனை எடுத்து அந்தச் செயலியில் ``இதுதான் விஷயம்.. என்ன செய்யலாம்" எனத் தனது சந்தேகத்தைக் கேள்வியாகப் பதிவு செய்கிறார். அவருக்கு உடனடியாகப் பதில்கள் கிடைக்கின்றன.

`அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன் அங்கிருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவரை அழைத்துச் செல்லவும். அதற்கு முன்பாக முடிந்தால் டிக்கெட் பரிசோதகரை முதலுதவிக்கு அழைக்கவும். அவசரகால உதவிக்கு 138 கால் செய்யவும்' போன்ற பதில்கள் அந்த நேரத்தில் உதவியாக இருந்தது. காயமடைந்த பயணிக்கு மருத்துவ உதவியும் கிடைத்தது. ஆனால், இந்தச் சம்பவத்தில் கவனிக்க வேண்டியது அந்த நபர் காப்பாற்றப்பட்டது மட்டுமில்லை, உதவி கேட்ட நபர் பயன்படுத்திய ஆப்-பையும்தான். உதவி கேட்பதற்காக அந்த நபர் பயன்படுத்தியது கூகுள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் Neighbourly என்ற ஆப்பைதான்.  

இந்த முறையாவது கூகுளின் எண்ணம் நிறைவேறுமா ?

கூகுளின் புது ஆப்

தொழில்நுட்ப உலகில் அசைக்கவே முடியாத இடத்தில் இருக்கும் கூகுள் ஒவ்வொரு முறையும் சறுக்கி விழும் இடம் எதுவென்று பார்த்தால் அது சமூக வலைதளம்தான். ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக இருக்கும் என்ற நினைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிளஸ் தோல்வியைத்தான் சந்தித்தது. பல வருடங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற ஒரு தயாரிப்பைக் கூகுளால் உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு Neighbourly என்ற ஆப்பை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது.

ஆப்ஸ்

இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் இன்டர்நெட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் Next Billion Users என்ற திட்டம். இதன் கீழ்தான் Neighbourly ஆப் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்த மொபைல் நம்பரும். மெயில் ஐடியும் மட்டும் போதுமானது வேறு எந்தத் தனிப்பட்ட தகவல்களையும் அளிக்கத் தேவையிருக்காது.

என்ன செய்யும் இந்த Neighbourly ?

Neighbourly

Neighbourly-யைப் பொறுத்தவரையில் அதைக் கூகுள் வடிவமைத்திருக்கும் விதமும் செயல்படும் விதமும் ரொம்பவே எளிமையானது. `உங்களிடம் கேள்வி இருக்கிறதா கேளுங்கள்: உங்களிடம் பதில் இருக்கிறதா அதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்'. என்பதுதான் Neighbourly மூலமாகக் கூகுள் சொல்ல வரும் விஷயம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இதைப் பயன்படுத்தும் பயனாளர்களை இந்த ஆப் ஒன்றிணைக்கும். இந்த ஆப்பைப் பயன்படுத்தும் போது அது இருப்பிடம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.

 

அதன் மூலமாக அந்த இடத்தைச் சுற்றி குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் மற்றப் பயனாளர்களுக்குக் கேள்விகளை அனுப்புகிறது. பதில் தேவைப்படும் ஒரு கேள்வியை இதில் பதிவிட்டால் இந்த ஆப்பைப் பயன்படுத்தும் அனைவரிடமும் அது சென்று சேரும். பதிலும் விரைவாகக் கிடைக்கும் அதே போல மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருந்தால் அதைக் தெரிவிக்கலாம். எடுத்துக்காட்டாக அருகில் இருக்கும் எந்த ஹோட்டலில் நல்ல உணவு கிடைக்கும் என்பது தொடங்கி சமீபத்தில் வெளியானதில் எது நல்ல திரைப்படம் என்பது வரை எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பதில்களுக்கு அதன் தன்மையைப் பொறுத்து ரிவார்டு அளிக்கவும் முடியும். ஆனால், இதைப் பயன்படுத்தித் தாறுமாறாகக் கேள்வி கேட்கலாம் என நினைக்கக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் உடனே ப்ளாக் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது.

மொபைல்

மக்கள் ஏதோ ஒரு வகையில் சமூகத்துடன் இணைத்திருக்க விரும்புகிறார்கள். அதுதான் ஃபேஸ்புக் தொடங்கி இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் மியூசிக்லீ வரை பொதுவானதாக இருக்கிறது. அதைதான் கூகுளும் நம்புகிறது. இந்த ஆப் சமூகத்துடன் இணைந்திருக்க முடியும் என நினைக்கிறது. இது பெரு நகரங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் கிராமங்களில் இதன் நிலைமை என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்சமயம் மும்பையில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் இந்தச் செயலி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கூடிய விரைவிலேயே மற்றப் பகுதிகளுக்கும் இந்தச் செயலியின் சேவை விரிவுப்படுத்தப்படும்.