'பிரைம் மெம்பர்களே!' - அமேசான்... 'எல்லோரும் வாங்க!' - ஃப்ளிப்கார்ட் #OnlineOffers | Big shopping days flipkart and amazon prime day deals

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (17/07/2018)

கடைசி தொடர்பு:11:38 (17/07/2018)

'பிரைம் மெம்பர்களே!' - அமேசான்... 'எல்லோரும் வாங்க!' - ஃப்ளிப்கார்ட் #OnlineOffers

'பிரைம் மெம்பர்களே!' - அமேசான்... 'எல்லோரும் வாங்க!' - ஃப்ளிப்கார்ட் #OnlineOffers

இணையதளத்தில் பொருள்கள் வாங்கக் காத்திருப்பவர்கள் தயாராக இருக்கலாம். அடுத்த சில நாள்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனங்களான அமேசானும், ஃப்ளிப்கார்ட்டும் அதிரடி ஆஃபர்களை வழங்கவிருக்கின்றன. கேட்ஜெட்கள், வீட்டு உபயோகப்பொருள்கள்  தொடங்கி ஃபேஷன் என அனைத்துப் பிரிவுகளிலுமே தள்ளுபடி விலையில் பொருள்கள் கிடைக்கும். சில நாள்களுக்கு முன்னால் அமேசான் முதலில் `அமேசான் பிரைம் டே' என்ற பெயரில் முதலில் ஆஃபர்களை அறிவிக்க அதன் பின்னர் அதைச் சமாளிக்கும் வகையில் ஃப்ளிப்கார்ட்டும் `பிக் ஷாப்பிங் டேஸ்' ஆஃபர்களை அறிவித்தது.

ஆஃபர் ஃப்ளிப்கார்ட் அமேசான்

அமேசானில் பிரைம் மெம்பர்களுக்கு மட்டும் சிறந்த ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இவை 36 மணி நேரத்துக்கு மட்டுமே. ஆனால் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் நேற்று தொடங்கி வரும் 19-ம் தேதி வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தள்ளுபடி விலை தவிர்த்து கார்டில் பணம் செலுத்துபவர்களுக்கு இன்ஸ்டன்ட் கேஷ்பேக் ஆஃபர்களை இரண்டுமே கொடுக்கின்றன. ஃப்ளிப்கார்ட்டில் SBI கார்ட் மூலமாகப் பணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும். ஆனால், குறைந்தபட்சம் 4,999 ரூபாய்க்குப் பொருள்கள் வாங்கியிருப்பது அவசியம்.  அமேசானில் HDFC கார்டுகள் மூலமாகக் குறைந்தபட்சமாக 3000 ரூபாய்க்குப் பணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் உண்டு.

ஸ்மார்ட்போன்

 Google Pixel 2


Google Pixel 2 ஸ்மார்ட்போன் அதிக அளவு விலை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 70,000 விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 16,000 விலை குறைக்கப்பட்டிருக்கிறது. கேஷ்பேக் மற்றும் எக்சேஞ்ச் மூலமாக 42,999 ரூபாய்க்கு இதை வாங்க முடியும் என்கிறது ஃப்ளிப்கார்ட்.

அதற்கடுத்தபடியாக ஷியோமியின்  Mi Mix 2 ஸ்மார்ட்போன் 10,000 விலை குறைந்துள்ளது. ஐபோன்  SE ரூ.9001 விலை குறைக்கப்பட்டிருக்கிறது. விவோ  v7+ ஸ்மார்ட்போன் ரூ. 19,990-க்குக் கிடைக்கும் இதன் முந்தைய விலை 21,990. Nokia 5 ஸ்மார்ட்போனை 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். 20000 ரூபாய் விலை கொண்ட ஸ்மார்ட்போன் தற்பொழுது விலை குறைக்கப்பட்டு Honor 9i 14,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அமேசானில் எக்சேஞ்ச் செய்யும் பொழுது அதிகத் தள்ளுபடியைப் பெற முடியும்.

லேப்டாப்

லேப்டாப்

ஸ்மார்ட்போன் மட்டுமன்றி லேப்டாப்பிலும் அதிரடியான ஆபர்களை வழங்கியிருக்கிறது ஃப்ளிப்கார்ட்.  i3 ப்ராஸசர் கொண்ட Acer Aspire 3 Core i3 7th Gen லேப்டாப் 22,490 ரூபாய். HP 15 Core i3 6th Gen, Lenovo Ideapad 320 Core i3 6th Gen இன்னும் சில லேப்டாப்கள் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன. இன்டெல்  i5 லேப்டாப்பின் விலை ரூ. 35,990- லிருந்து தொடங்குகிறது.

தொலைக்காட்சி

டிவி

Vu டிவிக்கள் ஃப்ளிப்கார்ட்டில் கணிசமாக விலை குறைக்கப்பட்டுள்ளன.  Vu 80cm (32 inch) HD டிவி 11,499 ரூபாய். Vu  40 இன்ச் புல் ஹெச்ட்டி  LED TV 17,499 ரூபாய் மற்றும்  Vu 43 inch 4K ஸ்மார்ட் டிவி 28,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Thomson 32 இன்ச் LED ஸ்மார்ட்  டிவி 13,499 ரூபாய். 

அமேசானில் பிரைம் டே-வில் புதிதாக 200-க்கும் மேற்பட்ட புதிய பொருள்களை அறிமுகம் செய்திருக்கிறது. எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் 6,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஹார்ட்டிஸ்க்குகள் அமேசானில் சிறப்பான தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. ஃப்ளிப்கார்ட்டில் கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மினி 2,449 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 

பேடிஎம், ஸ்னாப்டீல் என மற்ற நிறுவனங்களும் ``நாங்களும் ரவுடிதான்” எனக் களமிறங்கியிருக்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்