இந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு! - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay | World emoji day stats in facebook

வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (17/07/2018)

கடைசி தொடர்பு:13:56 (17/07/2018)

இந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு! - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay

உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள் தவிர சில நேரங்களில் சிறப்பு எமோஜிக்களும் வெளியிடப்படுகின்றன. மெர்சல் திரைப்படம் வெளியான போதும், கபாலி படத்துக்கும், விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது

இந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு! - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல் #WorldEmojiDay

எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, என்ன மொழி பேசும் மக்களாக இருந்தாலும் சரி... எளிதாகப் பேசும் மொழியாக 20 நூற்றாண்டுக்கு முன்னால் சைகை மொழி இருந்தது. தொழில்நுட்பமும், உணர்வுகளும் இதை ஒரு படி மேம்படுத்தியுள்ளன. இன்று நாம் பேச ஒரு புது மொழி இருக்கிறது. பாரிஸில் இருக்கும் காதலிக்கு இந்தியக் காதலனால் காதலை மொழியில்லாமல் வெளிப்படுத்த முடியும். இலங்கையில் அவதிக்குள்ளாகும் தமிழனின் கண்ணீரை இங்கிலாந்தில் உள்ளவரால் புரிந்துகொள்ள முடியும். இதனை எமோஜிக்கள் சாத்தியமாக்கியுள்ளன. 

வெறும் லைக்குகள் மட்டுமே பிரதானம் என்றிருந்த ஃபேஸ்புக் மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த 6 எமோஜிக்களை அறிமுகம் செய்தது. குரேஷியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றாலும் இதயங்களை பறக்க விடுகிறது உலகம். அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரை யார் தவறு செய்தாலும் ஆங்கிரி எமோஜிக்கள் மூலம் எதிர்ப்பை காட்ட முடிகிறது. நெய்மரின் ரோலிங்குக்கு ஹஹா, சிரியாவின் சோகத்துக்கு சோகம். பேரன்பு மம்முட்டிக்கு வாவ். என தினமும் ஃபேஸ்புக் மூலம் மக்கள் எமோஜிக்களை பறக்க விடுகின்றனர்.

எமோஜி ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் மட்டும் ஒரு நாளைக்கு 6 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகிறதாம். அதேபோல ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 500 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கிட்டத்தட்ட 80% உலக மக்கள் தொகைக்கு சமம். ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிகளின் பட்டியலை ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

1. கண்ணீர் வருமளவுக்குச் சிரிப்பது போன்ற எமோஜி
2. காதல்
3. முத்தம்
4. இதயங்கள்
5. இதயம்
6. அதிக மகிழ்ச்சி
7. கண்ணடிப்பது
8. வெட்கம்
9. அழுகை
10. வெறுப்பு

அதேபோல எந்த நாடுகளில் எந்த எமோஜி அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. மெஸெஞ்சரில் இந்தியா அதிகமாக முத்த எமோஜியைப் பயன்படுத்துகிறது. கனடா, தாய்லாந்து, இங்கிலாந்து நாடுகள் இதய எமோஜியும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் சிரிப்பு எமோஜியையும் பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

எமோஜி

ஒரு ஃபேஸ்புக் பக்கத்துக்கு லைக் தவிர சராசரியாக 100 ரியாக்‌ஷன்கள் வந்தால் அதில்  28 ஹார்ட், 27 ஆங்க்ரி 18 ஹஹா, 15 சோகம், 12 வாவ் எமோஜிக்கள் கிடைக்கின்றன. அதேபோல ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு சராசரியாக 3.2 ஹார்ட், 3.2 ஹஹா, 3 வாவ், 1.9 சோகம், 1.8 ஆங்க்ரி, 1 லைக் எமோஜிக்கள் கிடைக்கிறதாம். 

2014ம் ஆண்டிலிருந்துதான் இந்த எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த எமோஜி தினத்தில் ஆப்பிள், ஆண்ட்ராய்டு நிறுவனங்களும், சமூக வலைதள நிறுவனங்களும் புதிய எமோஜிகளை அறிமுகம் செய்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள் தவிர சில நேரங்களில் சிறப்பு எமோஜிக்களும் வெளியிடப்படுகின்றன. மெர்சல் திரைப்படம் வெளியான போதும், கபாலி படத்துக்கும், விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது. திரைப்படங்கள், விளையாட்டு, காதல், நட்பு, சோகம் என மனிதனின் உற்ற நண்பனாய் மாறிவிட்டன இந்த எமோஜிக்கள். முன்பு ஒரு பொருளைப்பற்றி கருத்துக் கேட்க ரேட்டிங் முறை இருந்தது. அந்த இடங்களை இன்று எமோஜிக்கள் பிடித்துவிட்டன.

உங்களுக்குப் பிடித்த எமோஜிக்களை கமென்டில் தெரிவியுங்கள். 

 

 

.


டிரெண்டிங் @ விகடன்