`ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் வீடியோ காலில் பேசலாம்'- வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் | WhatsApp has announced that the group video call is now available in India

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (31/07/2018)

கடைசி தொடர்பு:13:56 (31/07/2018)

`ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் வீடியோ காலில் பேசலாம்'- வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

'வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் சேவையை இனி இந்தியாவில் பயன்படுத்தலாம்' என F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கால்

நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு ஒருவழியாக, இந்தியாவுக்கு வந்தது வாட்ஸ்அப் குருப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதி. இந்த அறிவிப்பை F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதிமூலம், ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்யலாம். கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இந்த வசதி இந்தியாவில் உள்ள பீட்டா வெர்ஷன் போன்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது, ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதியை இன்று முதல் அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம் என்றும், இதைப் பயன்படுத்த விரும்புபவர்கள் ,தங்களின் பிளே ஸ்டோர் ஆப் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று புதிதாக வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் வெர்ன்ஸனை அப்டேட் செய்ய வேண்டும். பிறகு, வாட்ஸ்அப் வீடியோ காலின் வலது ஓரத்தின் மேலே உள்ள add participant பட்டனை அழுத்தினால் போதும். நீங்கள் பேச விரும்புபவரை அதன்மூலம் தேர்ந்தெடுக்கலாம். மேலும், இந்த வீடியோ கால் வசதியும் end-to-end encryption முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மூன்றாவது நபர் உங்களின் செயல்களைப் பார்க்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் மூலம் ஒரு நாளைக்கு 2 பில்லியன் நிமிடங்கள் வரை பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.