ஆண்ட்ராய்டுக்கு வரும் ஜிமெயிலின் 'confidential mode'... பாதுகாப்பானதுதானா? | Now Android app of Gmail also gets Confidential mode

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (19/08/2018)

கடைசி தொடர்பு:15:46 (19/08/2018)

ஆண்ட்ராய்டுக்கு வரும் ஜிமெயிலின் 'confidential mode'... பாதுகாப்பானதுதானா?

ஜிமெயிலின் இந்த முயற்சி வரவேற்கக்கூடியது தான் என்றாலும் இதிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. பாதுகாப்பான மெயில் வசதி என்று ஜிமெயில் சொல்லிக்கொண்டாலும் இது வாட்சப்பை போல ' end-to-end encrypted' கிடையாது.

ஆண்ட்ராய்டுக்கு வரும் ஜிமெயிலின் 'confidential mode'... பாதுகாப்பானதுதானா?

ஜிமெயில் கடந்த ஏப்ரல் மாதம் தனது சேவைகளில் பல மாற்றங்களையும் புதிய வசதிகளையும் கொண்டு வந்திருந்தது. அதில் ' Confidential mode' என்கிற வசதி முக்கியமானது. இதன் மூலம் முக்கியமான மெயில்களைப் பாதுகாப்பான முறையில் அனுப்ப இயலும். அதாவது, உங்களது மெயில்களுக்கு காலாவதி தேதியை உங்களால் நிர்ணயிக்க முடியும். இல்லையெனில், பாஸ்கோட் மூலம் மெயில்களைப் பாதுகாக்க முடியும்.

இந்த வசதி இரண்டு மாதமாக வெப் வெர்சனில் இருந்து வந்தாலும் இப்போது தான் ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலிக்கு வந்தடைந்துள்ளது. செயலியில் இருக்கும் இந்த ' Confidential mode' வசதிக்கும் வெப் வெர்சனில் இருக்கும் வசதிக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, அதிலிருக்கும் அனைத்து அம்சங்களும் செயலியிலும் உண்டு.

எப்படி இந்த வசதியை ஆண்ட்ராய்டு செயலியில் பயன்படுத்துவது?

இதற்கு உங்கள் ஜிமெயில் செயலியை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது தங்களிடம் இருக்கும் ஜிமெயில் செயலியை ஓபன் செய்து பின்வரும்வற்றை பின்பற்றவும்.

செயலியின் கீழே வலதுபுறத்தில் இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும். இது மெயில் அனுப்பும் பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

ஜிமெயில்

அதில் மேலே மூன்று புள்ளி வைக்கப்பட்டிருக்கும் செட்டிங்ஸ் பட்டனை கிளிக் செய்யவும். அதில் ' Confidential Mode' என்ற ஆப்சன் இருக்கும். அதை செலக்ட் செய்யவும்.

Gmail app

பின்வரும் பக்கத்தில் ' Confidential Mode' என்றிருக்கும் பட்டனை ஆன் செய்து கொள்ளவும். பின்  set expiration என்ற பிரிவின் கீழ் காலாவதியாகும் காலத்தைக் குறிப்பிடலாம். இந்தக் காலத்தை 1 நாளிலிருந்து 5 வருடம் வரை செட் செய்துகொள்ள முடியும். மாற்றங்கள் செய்த பின் மேலிருக்கும்  save பட்டனை கிளிக் செய்யவும்.

Gmail app

அது வேண்டாமென்றால் ' Require Passcode' என்ற பிரிவின் கீழ் ' SMS Passcode' என்ற ஆப்சனை செலக்ட் செய்து கொள்ளலாம். இப்போது மெயில் அனுப்பும் நேரத்தில் மெயிலை பெறுபவரின் மொபைல் எண் ஏற்கெனவே சிங்க் செய்யப்படவில்லை என்றால் அவர்களது மொபைல் எண் கேட்கப்படும். அதைக் கொடுத்துவிட்டால் மெயில் ஓபன் செய்யும். ஒவ்வொரு முறையும் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு  OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பாஸ்கோட் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். அதைக் கொண்டு தான் மெயிலை பார்க்கமுடியும். இவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்ப செலக்ட் செய்த பிறகு உங்களது மெயிலை நீங்கள் அனுப்பலாம்.

Gmail app

 ஜிமெயிலின் இந்த முயற்சி வரவேற்கக்கூடியது தான் என்றாலும் இதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. பாதுகாப்பான மெயில் வசதி என்று ஜிமெயில் சொல்லிக்கொண்டாலும் இது வாட்சப்பை போல ' end-to-end encrypted' கிடையாது. மேலும் காலாவதி தேதி கொடுத்திருப்பினும் 'sent mails' என்ற அனுப்பிய மெயில் பிரிவில் அனுப்பப்பட்ட மெயிலைக் காணமுடியும். அடுத்து ஒருவரின் மெயிலை அவரது மொபைல் எண்ணுடன் அவரின் ஒப்புதல் இல்லாமல் இணைக்க முடியும். மேலும் ஆபத்தான ஸ்பாம் மற்றும் தீங்கிழைக்கும் மெயில்களும் இந்த ' confidential mode' என்ற தோலை போர்த்திக்கொண்டு வர இயலும். கூகுள் நிறுவனமும் இதற்கு விளக்கம் எதுவும் தந்தாக தெரியவில்லை. எனவே கண்மூடி தனமாக இதை நம்பாமல் எச்சரிக்கையுடன் சரியாக பயன்படுத்துவது சிறப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்