ஆஃப் செய்த பிறகும் லொகேஷனை ட்ராக் செய்யும் கூகுளைத் தடுப்பது எப்படி? | What should we do to stop Google from tracking our location

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (20/08/2018)

கடைசி தொடர்பு:09:30 (20/08/2018)

ஆஃப் செய்த பிறகும் லொகேஷனை ட்ராக் செய்யும் கூகுளைத் தடுப்பது எப்படி?

கூகுள் செயலிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை உங்களது லொகேஷன் தகவல்களைச் சேமிப்பதை வேலையாகக் கொண்டுள்ளன. இதற்கு உங்களிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படுவதில்லை. 

ஆஃப் செய்த பிறகும் லொகேஷனை ட்ராக் செய்யும் கூகுளைத் தடுப்பது எப்படி?

தங்களது பிரைவசி பற்றி அக்கறை கொண்ட பயன்பாட்டாளர்களுக்கு தங்களது லொகேஷன் தகவல்களைச் சேமிக்காமல் இருக்க 'Turning off location history' என்ற ஆப்ஷனை கொடுத்திருக்கும் கூகுள். ஆனால், இது முழுமையாக கூகுளை உங்கள் தகவல்களைப் பெறாமல் இருக்க வைப்பதில்லை எனச் சமீபத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது நீங்கள் வெளிப்படையாக வேண்டாம் என்று குறிப்பிட்டும் கூகுள் அவ்வப்போது உங்களை ட்ராக் செய்துகொண்டுதான் இருக்கிறது என்கிறது அதன் முடிவு.

விரிவாகப் பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் லொகேஷன் ட்ராக்கிங்கை ஆஃப் செய்தபின் லொகேஷன் தொடர்பான தகவல்கள் சேமிப்பதை கூகுள் நிறுத்திவிடத்தான் செய்கிறது. ஆனாலும்கூட சில கூகுள் செயலிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை உங்களது லொகேஷன் தகவல்களைச் சேமிப்பதை வேலையாகக் கொண்டுள்ளன. இதற்கு உங்களிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படுவதில்லை. 

இந்தச் சிறிய தகவலைக் கொண்டு உங்களது முக்கிய நடவடிக்கைகளை யாரேனும் கண்காணிக்கலாம் எனக் கவலைப்படுவோர் இதற்கு முடிந்தளவு ஒரு தீர்வு காண்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், அப்படிச் செய்வதின் மூலம் கூகுள் சேவைகளில் சிலவற்றை முழுத்திறனுடன் பயன்படுத்த முடியாமலும் போகலாம். எப்படி இதை முழுமையாகத் தடுக்க முடியும் என்று விரிவாகப் பார்ப்போம்.

முன்பு கூறியதுபோல் லொகேஷன் ஹிஸ்டரியை (Location History ) மட்டும் ஆஃப் செய்தால் மட்டும் போதாது. 'வெப் & ஆப் ஏக்ட்டிவிட்டி' (Web & App Activity ) செட்டிங்கையும் ஆஃப் செய்ய வேண்டும். இதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.

1. முதலில் ஏதேனும் பிரவுசரை ஓபன் செய்துகொள்ளுங்கள், பின்பு  https://myaccount.google.com என்ற இந்த லிங்க்கை கிளிக் செய்து கூகுள் அக்கௌன்ட் பக்கத்துக்குச் செல்லவும். இது உங்கள் கூகுள் கணக்கைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். அதில் பெர்சனல் இன்ஃபோ & ப்ரைவசி (Personal info& Privacy) என்றிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இது தங்களைப் பற்றிய தகவல்களையும் பிரைவசி ஆப்ஷன்களையும் உள்ளடக்கியிருக்கும்.

கூகுளை சமாளிக்க டிப்ஸ்

2. பின் இந்தப் பக்கத்தில் 'Go to My Activity' என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், கூகுள் எந்தத் தகவல்களை சேமிக்கிறது என்று பார்க்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

gmail

3. அங்கு இடதுபுறத்தில் இருக்கும் மெனுவில் ' Activity controls' என்ற ஆப்ஷனை காணலாம். அதைத் தேர்வு செய்யவும்.

gmail

4. இந்த  activity control பக்கத்தில் 'Web & App Activity' என்ற பெயரிடப்பட்ட நீல நிற பட்டன் ஒன்றைப் பார்க்கலாம். அதை ஆஃப் செய்ய வேண்டும்.

gmail

இதை பிரவுசர் அல்லாமல் மொபைல் போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதியிலும் செய்யமுடியும். Settings > Google > Google Account என்று சென்றவுடன் உங்கள் அக்கௌன்ட் பக்கம் வந்துவிடும் அதில் ‘Data & personalization’ என்ற பிரிவுக்குச் சென்று மேல் கூறியதைப் போல ' Web & App Activity' பட்டனை ஆஃப் செய்தால் போதும். மேலும், இந்த செட்டிங்ஸில் பலவற்றை உங்களுக்கு ஏற்றது போலவும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

gmail

இதன் மூலம் முடிந்தவரை நமது தகவல்களைப் பாதுகாக்க முடியும். ஆனாலும் இதையும் தாண்டி வேறு எந்த முறைகளில் நமது தகவல்கள் சேமிக்கப்படுகின்றன என கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்